Home
Apps

உடனே Settings போங்க.. WhatsApp Plus இந்தியாவில் அறிமுகம்.. ரூ.79-க்கு என்ன கிடைக்கும்? எத்தனை நாள் வேலிடிட்டி?

இந்தியாவில் உள்ள பல பயனர்கள் வாட்ஸ்அப் பிளஸ் சந்தாக்களுக்கான (WhatsApp Plus subscriptions) புதிய அறிவிப்புகளை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் மெட்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கான இலவச சோதனையை வழங்குகிறது, மேலும் பயனர் விரும்பினால், மாதந்தோறும் ரூ.79 கட்டணம் செலுத்தி தொடரலாம்.

வாட்ஸ்அப் பிளஸ் சந்தாவானது பெர்சனலைஸ்டு ரிங்டோன்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட ஈமோஜிகள், பெர்சனலைஸ்டு சாட் லிஸ்ட்கள் மற்றும் பல கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. உங்களுக்கான வாட்ஸ்அப் பிளஸ் சந்தா அணுகல் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் (Settings) விருப்பத்திற்கு சென்று சந்தாக்கள் (Subscriptions) என்பதற்கு செல்லவும்.

WhatsApp Plus இந்தியாவில் அறிமுகம்.. ரூ.79-க்கு என்ன கிடைக்கும்?

இந்த விருப்பம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றால், இந்த அம்சம் உங்கள் பகுதிக்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம். இது ஒவ்வொரு கட்டங்களாக வெளியிடப்படுவதால், துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து பயனர்களையும் சென்றடைய சிறிது காலம் ஆகும். சரி வாட்ஸ்அப் பிளஸ் சந்தாவின் கீழ் உங்களுக்கு என்னென்ன கிடைக்கும்? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப் பிளஸ், வழக்கமான வெர்ஷனில் உள்ள அதே முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும். இதில் சாட்கள், கால்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் ஆகியவைகள் அடங்கும். இருப்பினும், பிளஸ் சந்தாவானது பயனர் அனுபவத்தை மேலும் தனிப்பயனாக்குவதை (Personalize) நோக்கமாக கொண்டுள்ளது. இதில் காண்டாக்ட்களுக்கான பிரத்யேக ரிங்டோன்கள், ஆப் ஐகான்கள், அனிமேஷன்கள், பிரீமியம் ஸ்டிக்கர்கள் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, வாட்ஸ்அப் பிளஸ் ஆனது பல பிரத்யேக காட்சி மேம்பாடுகளை (Exclusive visual enhancements) வழங்குகிறது. இதில் ஓவர்லே எஃபெக்ட்களுடன் கூடிய அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்குகள், 18 வண்ண அடிப்படையிலான ஆப் தீம்கள், மற்றும் எளிமையான, கலைநயமிக்க, மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளை கொண்ட 14 மாற்று ஆப் ஐகான்கள் அடங்கும்.

இது, பயனர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாரம்பரிய பச்சை நிற வாட்ஸ்அப் லேஅவுட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இது தவிர, இந்த சந்தா சில உற்பத்தித்திறன் சார்ந்த அம்சங்களிலும் கவனம் செலுத்துகிறது. வாட்ஸ்அப் பிளஸ் சாந்தாவில் இணையும் பயனர்கள், கான்வர்ஷேஷன் லிஸ்ட்டின் மேலே 20 சாட்கள் வரை (முன்பு 3 ஆக இருந்தது) பின் (Pin) செய்யலாம். இது முக்கியமான தனிப்பட்ட மற்றும் க்ரூப் சாட்களை உடனடியாக அணுகுவதை எளிதாக்குகிறது.

மேலும், இந்த கட்டண பதிப்பானது, மேம்படுத்தப்பட்ட சாட் லிஸ்ட் மேனேஜ்மென்ட் டூல்களையும் அறிமுகப்படுத்துகிறது. இது, பயனர்கள் ஒரே ஆப்பில் - வேலை அல்லது குடும்பம் போன்ற சாட்களின் முழு பிரிவுகளுக்கும் - பகிரப்பட்ட தீம்ஸ், நோட்டிபிகேஷன் டோன்ஸ் மற்றும் ரிங்டோன் செட்டிங்ஸ்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. கடைசியாக, பிளஸ் சந்தாவானது சாதாரண போன் நோட்டிபிகேஷனில் இருந்து கால்களை தனித்து காட்ட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 10 பிரீமியம் ரிங்டோன்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது.

மற்ற நாடுகளில் வாட்ஸ்அப் பிளஸ் சந்தா விலை என்ன? WABetaInfo வழியாக கிடைத்த முந்தைய அறிக்கையின்படி, இந்த சந்தா அடிப்படையிலான வாட்ஸ்அப் வெர்ஷன் ஐரோப்பா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது. ஐரோப்பாவில் இந்த சேவைக்கு மாதத்திற்கு €2.49 (ரூ.280) செலவாகும் என்றும், மெக்சிகோவில் உள்ள பயனர்கள் $29 (ரூ.2776) செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X