இந்தியாவில் அறிமுகமாகும் கூகுளின் ஏரோ ஆப்: இனி உணவுகள் வீடு தேடி வரும்

இந்தியாவில் அறிமுகமாகும் கூகுளின் ஏரோ ஆப்: இனி உணவுகள் வீடு தேடி வரும்

By Siva
|

கூகுள் நிறுவனம் நேற்று கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஏரோ (Areo)என்று கூறப்படும் இந்த செயலி மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்யலாம், உங்கல் வீட்டில் ஒரு சுவிட்ச் போர்டு மாட்ட வேண்டும் என்றால் ஒரு எலக்ட்ரீஷனை அழைக்கலாம், அல்லது உங்களுக்கு மேக்கப் போட வேண்டுமா? ஒரு மேக்கப்மேனையும் இந்த செயலி மூலம் நீங்கள் அழைக்கலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் கூகுளின் ஏரோ ஆப்: இனி உணவுகள் வீடு தேடி வரும்

ஆனாலும் கூகுள் நிறுவனம் இந்த செயலி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் நேராக பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்தது ஏன் என்பது தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

கூகுள் நிறுவனம் சொந்தமாக கூகுள் மேப் உள்பட பல வசதிகளை வைத்திருந்தாலும் இம்முறை இந்த செயலிக்காக அவைகளை மட்டும் உபயோகிக்காமல் மற்ற நிறுவனங்களின் சேவைகளையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் உடனடியாக ஒரு புதிய உணவை ஆர்டர் செய்ய திட்டமிட்டால் உங்களுக்கு பிரெஷ் மெனு, ஃபேசாஸ் மற்றும் பாக்ஸ்8 நிறுவனங்களின் தகவல்களும் கிடைக்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் கூகுளின் ஏரோ ஆப்: இனி உணவுகள் வீடு தேடி வரும்

மேற்கண்ட நிறுவனங்கள் ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை சப்ளை செய்து வரும் முன்னணி நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த செயலில் உலக அளவில் செயல்படும் செயலியா? அல்லது இந்தியாவுக்கு மட்டுமா? என்ற தகவல்களை வெளிப்படுத்தவில்லை

உணவுக்கு அடுத்தபடியாக அழகுக்கலை குறித்து பார்த்தோம் என்றால் அதில் அர்பன்கிளாப் (UrbanClap) என்ற நிறுவனம், இந்த செயலி மூலம் சேவை செய்யும் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஐபோன்7 அதிரடி விலைக்குறைப்பு!

இந்த செயலில் உணவுகளை வரவழைக்க மிகச்சிறந்த செயலியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறாது. இந்த செயலியில் மிக எளிதாக நமக்கு தேவையான உணவுப் பொருட்களை தேடும் வசதி உள்ளது என்பதும், நம்முடைய உணவு சைவமா அல்லது அசைவமா? என்பதை பிரித்து தேடுவதற்கும் இதில் எளிதாக வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

மேலும் உணவுகளை ஆர்டர் செய்வதற்கு நீங்கள் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளையோ அல்லது நெட்பேங்கிங் வசதியையோ பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமின்றி பொருட்களை கொண்டு வரும் நபரிடம் ரொக்கமாக கொடுக்கும் வசதியும் உண்டு.

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

இப்போதைக்கு இந்த செயலி இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை மற்றும் பெங்களூருவில் மட்டுமே செயல்பட தக்கதாக உள்ளது. அனேகமாக இன்னும் ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த செயலியின் சேவை விரிவுபடுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏரோ செயலி நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செயலியை டவுண்லோடு செய்யும் முறையை எளிதாக்கி ஒரே செயலி மூலம் பல சேவைகள் கிடைக்க வழிவகை செய்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் கூகுள் நிறுவனம் இன்னும் பல சேவைகளை இந்த செயலியில் அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google has launched a new app called Areo App in India. It helps to get avail food delivery, beauty and home maintenance services. Right now, Areo app has been released only in Mumbai and Bangalore.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X