ஸ்மார்ட் ஸ்டிக்கர்ஸ்: கூகுள் அலோ ஆப்-இல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி
கூகுள் நிறுவனத்தின் பெருமிதம் உள்ள படைப்புகளில் ஒன்றாகிய கூகுள் அலோ' ஆப்-ஐ பயன்படுத்தியவர்கள் மிக அருமையான அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை. சியர்ஸ் இஞ்சின் ராஜாவாக திகழும் கூகுள் இந்த ஆப்-ஐ தனது பயனாளர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த அலோ ஆப்-இல் தற்போது ஸ்மார்ட் ஸ்டிக்கர் என்ற புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்டிக்கர் ஸ்டிக் உங்களுக்கு சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களின் ஸ்டிக்கர் முதல் அனைத்தையும் வழங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது
ரூ.35,000 விலையில் டாப் 5 லாப்டாப்கள்.!
கூகுள் அலோ ஆப்-இல் நீங்கள் உங்கள் நண்பருடன் சேட்டிங் செய்யும்போது நீங்கள் சேட் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ற ஸ்டிக்கர் கிடைத்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த மகிழ்ச்சியை தக்க வைத்து கொள்ளவே கூகுள் விரும்புகிறது.

எடுத்துக்காட்டாக நீங்கள் பர்கர் குறித்து சாட் செய்தால் உடனே ஸ்மார்ட் ஸ்டிக்கர் ஆப்சனுக்கு சென்று பர்கர் ஸ்டிக்கரை க்ளிக் செய்து உங்கள் சேட்டிங்கில் வரவழைக்கலாம். இந்த ஸ்டிக்கர் ஆப்சனில் பலவிதமான தீம் படங்களும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த ஸ்டிக்கர்களை நீங்கள் விரும்பினால் அதை டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.
திடீரென ரிலையன்ஸ் ஜியோ 'பல்பு' வாங்க 'மோடி ஆப்பு' தான் காரணமா.??
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் அறிமுகம் செய்த கூகுள் அலோ' ஆப்ஸ் உலகம் முழுவதிலும் உள்ள கூகுள் வாடிக்கையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இதை 160 மில்லியன் பேர் உபயோகித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த ஆப்ஸ் மெல்ல மெல்ல சேட்டிங் கிங் ஆக இருக்கும் வாட்ஸ் அப்-க்கு போட்டியாகி வருகிறது. வெகுவிரைவில் வாட்ஸ் அப்-க்கு இணையாக இந்த அலோ ஆப்ஸ் புகழ் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் நீங்கள் அறியாத ஐந்து சிறப்பு அம்சங்கள் என்ன?
மேலும் தற்போது ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் இந்த கூகுள் அலோ ஸ்மார்ட் ஸ்டிக்கர்ஸ் வெகுவிரைவில் உங்கள் தாய்மொழியிலும் வெளியிட உள்ளது.
இந்த ஸ்மார்ட் ஸ்டிக்கர் வசதியுடன் கூடிய இந்த ஆப்-ஐ நீங்கள் apkmirror.com அல்லது APKPolice.com போன்ற இணையதளங்களுக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் சப்போர்ட் செய்யும் இந்த ஆப், விரைவில் ஐஒஎஸ் வகை போன்களுக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் தயாராகி வருவதாகவும், வெகுவிரைவில் இந்த வசதி ஐஒஎஸ் போன்களுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications