திடீரென ரிலையன்ஸ் ஜியோ 'பல்பு' வாங்க 'மோடி ஆப்பு' தான் காரணமா.??

கோலாகலமாகத் துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு விற்பனையில் திடீரெனத் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மோடியின் திடீர் அறிவிப்பு தான் காரணமா.??

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்கள் நிறைவடைந்த நிலையில் புதிய ஜியோ சிம் கார்டுகளின் விற்பனை குறையத் துவங்கியுள்ளது.

துவக்கத்தில் பயனாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஜியோ சிம் கார்டுகளை வாங்கிச் சென்றனர். ஆனால் தற்சமயம் ஜியோ சிம் விற்பனையில் சுமார் 50 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

தடை

தடை

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 தடை செய்யப்பட்டதாலேயே ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மோட்டிலால் ஓஸ்வால் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்பு

தொடர்பு

ஜியோ சிம் விற்பனைக்கும் ரூபாய் நோட்டு தடைக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லையென்றாலும் ஜியோ சிம் கார்டை காட்டிலும் அன்றாடத் தேவைக்குப் பணம் அவசியம் என்பதால் மக்கள் அவற்றை வாங்க வங்கி வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாத்தியம்

சாத்தியம்

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியன் என்ற வாடிக்கையாளர் எண்ணிக்கையை அடைய திட்டமிட்டிருந்தது. இந்த இலக்கை அடைவதில் ஏமாற்றம் கிடைக்கலாம் என்பதால் ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதிகரிக்கும்

அதிகரிக்கும்

பெரும்பாலான பயனர்கள் ஜியோ சிம் சேவையை இரண்டாம் இணைப்பு போன்றே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஜியோ வெல்கம் ஆஃபர் காலத்தை நீட்டிப்பதன் மூலம் ஜியோ பயனர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

சேவை சரியில்லை

சேவை சரியில்லை

சீரற்ற இண்டர்நெட் இணைப்பு, குறைந்த டவுன்லோடு வேகம் போன்றவையே ஜியோ சிம் மீதான மோகம் குறையக் காரணமாக இருக்கிறது. பல்வேறு ஜியோ பயனர்களும் கால் டிராப் அதிகளவு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
here is why Reliance Jio slipping in terms of subscription

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X