Home
Tablets

முழுசா ரூ.5000 விலைக்குறைப்பு.. வாங்குற ஐடியாவே இல்லனா கூட.. இந்த Samsung டேப்லெட்டை வாங்க தோணுதே!

"இந்த வாரம் டேப்லெட்கள் மீது விலைக்குறைப்பை அறிவிக்கும் வாரம்" என்பது போல.. மோட்டோரோலாவின் பிரபலமான டேப்லெட்களில் ஒன்றான மோட்டோ டேப்ஜி 70 மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்ட மறுநாளே சாம்சங் நிறுவனமும் தனது பிரபலமான டேப்லெட் ஒன்றின் மீது ரூ.5000 விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

அதென்ன டேப்லெட்? நாம் இங்கே பேசுவது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 (Samsung Galaxy Tab A8) ஆண்ட்ராய்டு டேப்லெட்டை பற்றித்தான். இந்த டேப்லெட் 2 வைஃபை மாடல்கள் மற்றும் 2 எல்டிஇ மாடல்கள் என மொத்தம் 4 வேரியண்ட்களின் கீழ் வெளியானது.

Samsung கேலக்ஸி டேப் A8 மீது ரூ.3000 விலைக்குறைப்பு!

சுவாரசியமாக சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 டேப்லெட்டின் 4 வேரியண்ட்களின் மீதுமே விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் அசல் விலை என்ன? விலைக்குறைப்பிற்கு பின்னான புதிய விலை விவரங்கள் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பழைய விலை VS புதிய விலை: முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மொத்தம் 4 வேரியண்ட்களில் வாங்க கிடைக்கிறது: 2 வைஃபை மற்றும் 2 எல்டிஇ மாடல்கள். அதில் 3ஜிபி + 32 ஜிபி வைஃபை மாடல் மற்றும் 4ஜிபி + 64ஜிபி வைஃபை மாடல் மாடலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.21,999க்கு அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது ரூ.3000 மற்றும் ரூ.5000 விலைக்குறைப்புக்கு பிறகு 3ஜிபி வேரியண்ட் ரூ.14,999 க்கும், 4ஜிபி வேரியண்ட் ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இதே போல, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8-இன் 3ஜிபி எல்டிஇ வேரியண்ட் ரூ. 21,999 க்கும் மற்றும் 4 ஜிபி எல்டிஇ வேரியண்ட் ரூ.23,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது ரூ.3000 என்கிற விலைக்குறைப்பிற்கு பின்னர் 3ஜிபி வேரியண்ட் ரூ.18,999க்கும், 4ஜிபி வேரியண்ட் ரூ.20,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட (வைஃபை மற்றும் எல்டிஇ வேரியண்ட்கள்) அனைத்துமே க்ரே, சில்வர் மற்றும் பிங்க் கோல்ட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்: இந்த டேப்லெட் ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது மெலிதான பெஸல்கள் மற்றும் 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 10.5-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 80 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோவையும் (Screen-to-Body Ratio) வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது 8எம்பி சிங்கிள் ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 எம்பி செல்பீ கேமராவுடன் வருகிறது. இது ஒரு புதிய ஸ்க்ரீன் ரெக்கார்டர் (Screen recorder) அம்சத்தையும் கொண்டுளளது. இதன் மூலம் உங்களால் மிகவும் தெளிவான முறையில் டூட்டோரியல்ஸ் (Tutorials) அல்லது விரிவுரைகளின் (Lectures) வீடியோக்களை ரெக்கார்ட் (Record) செய்ய முடியும்.

டால்பி அட்மோஸை ஆதரிக்கும் குவாட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த டேப்லெட் 7040mAh பேட்டரியை கொண்டுள்ளது; இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் இது சாம்சங்கின் சிக்னேச்சர் டிஃபென்ஸ்-கிரேடு செக்யூரிட்டி பிளாட்ஃபார்மான நாக்ஸ் (Knox) உடன் வருகிறது. இது எல்லா தரவுகளையும் பரிவர்த்தனைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இதில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Both WiFi and LTE Variants of Samsung Galaxy Tab A8 Gets Price Cut in India Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X