டேப்லெட் வாங்கலயோ டேப்லெட்.. 7700mAh முரட்டு பேட்டரியுடன் வரும் இந்த Moto Tab மீது முரட்டு ப்ரைஸ் கட்!
7700mAh என்கிற முரட்டுத்தனமான பேட்டரியை கொண்ட மோட்டோரோலாவின் பிரபலமான டேப்லெட் (Motorola Tablet) ஒன்றின் மீது திடீர் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன டேப்லெட்? அதன் அசல் விலை என்ன, ஆஃபர் விலை என்ன? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது மோட்டோ டேப் ஜி70 (Moto Tab G70) டேப்லெட்டை பற்றித்தான். தொடர்ச்சியாக சில மோட்டோ ஸ்மார்ட்போன்களின் மீது விலைக்குறைப்பை அறிவித்த கையோடு, லெனோவாவுக்கு (Lenovo) சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ டேப் ஜி70-யின் விலையை குறைத்துள்ளது.

இது எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றுள்ளது? மோட்டோரோலாவின் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் (Android Tablet ) மீது ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.21,999 க்கு இந்தியாவில்அறிமுகம் செய்யப்பட்டது.இப்போது ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பிற்கு பின்னர் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த புதிய விலை (ரூ.19,999) மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (Motorola India Website) பிரதிபலிக்கிறது. ஆனால் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) மோட்டோ டேப் ஜி70 மாடலானது இன்னமும் அதே பழைய விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. கூடிய விரைவில் புதிய விலை நிர்ணயம் அப்டேட் செய்யப்படும் என்று நம்பலாம்!
மோட்டோ டேப் ஜி70 என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? மோட்டோரோலாவின் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் 2000 x 1200 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 11-இன்ச் 2கே டிஸ்ப்ளேவை (2K Display) கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே கண்களுக்கான பாதுகாப்பை (Eye Protection) வழங்கும் டியுவி சான்றிதழுடன் (TUV Certificate) வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் மோட்டோ டேப் ஜி70 ஆனது 4ஜிபி ரேம் உடன் இணைந்து ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ (Octa-core MediaTek Helio) ஜி90டி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இதில் 64ஜிபி உள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் இந்த டேப்லெட்டில் உள்ள மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு ஸ்லாட்டை பயன்படுத்தி 1டிபி (1TB) வரை மெமரியை எக்ஸ்டென்ட் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை மோட்டோரோலாவின் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் சிங்கிள் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மூலம் ட்யூன் செய்யப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களுடன் (Quad Speakers) வருகிறது.
ஐபி52 வாட்டர் ரெப்பெல்லென்ட் வடிவமைப்புடன் (IP52 Water Repellent Design) வரும் இந்த மோட்டோ டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொண்டு இயங்குகிறது.இது 7700mAh என்கிற அளவிலான மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்கிறது. அது 20W ரேப்பிட் சார்ஜிங்கிற்கான (Rapid Charging) ஆதரவுடன் வருகிறது. கடைசியாக ப்ரீமியம் மெட்டல் டிசைனுடன் வரும் இந்த டேப்லெட் மாடர்னிஸ்ட் டீல் என்கிற சிங்கிள் கலரில் மட்டுமே வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








