54% தள்ளுபடி: ரூ.6,999 முதல் கிடைக்கும் டேப்லெட்கள்: இறங்கி அடித்த Amazon.!

|

அமேசான் தளத்தில் Amazon Great Indian Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகமாக எதிர்பார்த்த டேப்லெட் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்

அமேசான்

இதுதவிர ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களை அமேசான் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் அமேசான் நிறுவனத்துக்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும் பிளிப்கார்ட்-ஐ விட அமேசான் தளத்தில் டேப்லெட் மாடல்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது. சரி இப்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் டேப்லெட் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!

 லெனோவா டேப் எம்7

லெனோவா டேப் எம்7

அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்7 மாடலுக்கு 29 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை தற்போது ரூ.6,999-விலையில் வாங்க முடியும்.

7-இன்ச் டிஸ்பிளே, 32ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் பிராசஸர், 5எம்பி ரியர் கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்7.

குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டேப்லெட் மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

8.7-இன்ச் டிஸ்பிளே, 5100 எம்ஏஎச் பேட்டரி, 8எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்.

கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

லெனோவா டேப் எம்10

லெனோவா டேப் எம்10

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட லெனோவா டேப் எம்10 மாடலின் முந்தைய விலை ரூ.27,999-என்று கூறப்படுகிறது. தற்போது இந்த டேப்லெட் மாடலுக்கு 44 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது லெனோவா டேப் எம்10 மாடலை ரூ.15,599-விலையில் வாங்க முடியும்.

மீடியாடெக் ஹீலியோ பி22டி டேப் பிராசஸர், 10.3-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 8எம்பி ரியர் கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட்.

 நோக்கியா டி20 டேப்

நோக்கியா டி20 டேப்

அமேசான் தளத்தில் ரூ.19,499-விலையில் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா டி20 டேப்லெட் ஆனது தற்போது ரூ.14,499-க்கு கிடைக்கிறது. அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு 26 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

8200 எம்ஏஎச் பேட்டரி, 10.36-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட்.

Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?

லெனோவோ டேப் யோகா ஸ்மார்ட் டேப்லெட்

லெனோவோ டேப் யோகா ஸ்மார்ட் டேப்லெட்

லெனோவோ டேப் யோகா ஸ்மார்ட் டேப்லெட் சாதனத்தின் உண்மை விலை ரூ.35,500-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டசலுகையின் மூலம் இந்த டேப்லெட் மாடலை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 35 சதவீதம் இந்த சாதனத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

7000 எம்ஏஎச் பேட்டரி, 10.1-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

 சியோமி எம் பேட் 5

சியோமி எம் பேட் 5

சியோமி எம் பேட் 5 மாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் மாடலின் அசல் விலை ரூ.37,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சியோமி எம் பேட் 5 மாடலை ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

365 நாளிற்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் Jio திட்டம்.! Disney+ Hotstar பிரீமியமும் இருக்கா?365 நாளிற்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் Jio திட்டம்.! Disney+ Hotstar பிரீமியமும் இருக்கா?

ரியல்மி பேட்

ரியல்மி பேட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பேட் மாடலுக்கு அமேசான் தளத்தில் 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமேசான் தளத்தில் இந்த ரியல்மி டேப்லெட் மாடலை ரூ.16,620-விலையில் வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Sale: Tablets For Up To 54% Off From Samsung, Lenovo Etc: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X