Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?

|

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா (Apple Watch Ultra) டிவைஸின் கடினத் தன்மையைச் சோதிக்கப் பிரபலமான யூடியூபர் புதிய ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை சுத்தியலால் அடித்து அதன் தன்மையைச் சோதித்திருக்கிறார். இந்த சோதனையின் முடிவுகள் ஆப்பிள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சோதனை 3 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா முதலில் நான்கு அடி உயரத்தில் இருந்து கைவிடப்பட்டது. பிறகு, வாட்சின் ஆயுள் சோதனை ஒரு சுத்தியலைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளது.

Apple Watch Ultra பற்றி நிறுவனம் சொன்னதெல்லாம் உண்மையா அல்ல பொய்யா?

Apple Watch Ultra பற்றி நிறுவனம் சொன்னதெல்லாம் உண்மையா அல்ல பொய்யா?

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Watch Ultra பற்றிக் கூறியுள்ள கூற்றுகள் சரியா அல்லது பொய்யா என்பதைப் பார்க்கப் பிரபல யூடியூபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ஆயுளைச் சோதித்துள்ளார். சமீபத்திய ஆப்பிள் ஐபோன் 14 வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் ஒரு புதிய வாட்ச் வகையை அறிமுகப்படுத்தியது. இது தீவிரமான சூழல்களைத் தாங்கக்கூடிய மிகவும் கரடுமுரடான ரக்டு ஆப்பிள் வாட்ச் இது என்று நிறுவனம் உறுதியுடன் வலியுறுத்தியது.

இராணுவ உபகரணங்களுக்குப் பயன்படுத்தப்படும் அம்சம் Apple Watch Ultra-வில் உள்ளதா?

இராணுவ உபகரணங்களுக்குப் பயன்படுத்தப்படும் அம்சம் Apple Watch Ultra-வில் உள்ளதா?

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா பல்வேறு சூழல்களில் நீடித்து நிலைக்கும் படி, குறிப்பாக அட்வென்ட்டர்ஸ் மற்றும் எஸ்ப்ளோரர்ஸ்களுக்கு சிறந்த தொழில்நுட்ப டிவைசாக இந்த Apple Watch Ultra இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது. இந்த ஆப்பிள் வாட்ச் MIL-STD-810H தொடர்புடைய அம்சங்களுக்குச் சான்றளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் இராணுவ உபகரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

pple Watch Ultra சாதனம் மீது நடத்தப்பட்ட முதல் சோதனை!

pple Watch Ultra சாதனம் மீது நடத்தப்பட்ட முதல் சோதனை!

Apple Watch Ultra ஸ்மார்ட்வாட்ச்சில் டைட்டானியம் கேஸ் மற்றும் சஃபையர் கிரிஸ்டல் கிளாஸ் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு யூடியூபர் (டெக்ராக்ஸ் சேனலுடன்) ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் ஆயுளைச் சோதிக்க முடிவு செய்தார், இதன் விளைவாக அவர் மிகவும் சுவாரஸ்யமான கரடுமுரடான சோதனையை மேற்கொள்ள முயன்றார். முதல் கட்டமாக, கடிகாரத்தை நான்கு அடி உயரத்தில் இருந்து கீழே கைவிட்டார். அதில் சிறிய கீறல்கள் மற்றும் டென்ட்கள் உருவானது.

Apple Watch Ultra ஆணிகள் மீது எறியப்பட்டதா? ஐயையோ.!

Apple Watch Ultra ஆணிகள் மீது எறியப்பட்டதா? ஐயையோ.!

இந்த கீறல்கள் மற்றும் டென்ட்கள் டைட்டானியம் கேஸ் பாக்சில் மட்டுமே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், Apple Watch Ultra ஆணிகள் கொண்ட ஜாடிக்குள் வேகமாக வீசப்பட்டது. ஆனால் டிஸ்பிளே மற்றும் வாட்சின் மேற்புற கேஸ்களில் எந்த கீறல்களும் இடம்பெறவில்லை. அடுத்தபடியாக, அவர் மிகவும் கரடுமுரடான சோதனையைச் சுத்தியலை வைத்துப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

Apple Watch Ultra டிஸ்பிளேவை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.!

Apple Watch Ultra டிஸ்பிளேவை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.!

இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரிய சுத்தியலால் Apple Watch Ultra டிஸ்பிளேவை 1 அல்லது 2 முறை திரும்பத் திரும்ப அடித்தார், ஆனால் வாட்ச் உடையவில்லை. மீண்டும் சில முறை சுத்தியலால் அடித்த போது Apple Watch Ultra வைக்கப்பட்டிருந்த டேபிள் சேதமடைந்தது, ஆனால் ஆப்பிள் வாட்ச் உடையவில்லை. ஆனால், அடுத்து சுமார் 7 முறை சுத்தியலால் அடித்த போது, Apple Watch Ultra வாட்ச் வேலை செய்வதை நிறுத்திவிட்டது.

ஆப்பிள் வாட்ச்சை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்தார்களா?

ஆப்பிள் வாட்ச்சை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்தார்களா?

Apple Watch Ultra வேலை செய்யத் தவறியதால் சில உள் உறுப்புகள் சுத்தியலால் அடித்த போது சேதம் அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. அப்படியும் அவர் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தவில்லை, 10வது முறையில் அடிக்கும் போது வாட்சின் டிஸ்பிளே மற்றும் கேஸ் உடைந்தது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மீது 2-3 ஆரம்ப தாக்குதலில் தாங்கிக் கொண்டது. இந்த சோதனை நிச்சயமாக நடைமுறையில் சாத்தியமற்றது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

ஏனெனில், யாரும் 10 முறை சுத்தியலால் Apple Watch Ultra சாதனத்தை அடிக்கப் போவதில்லை, அதேபோல், தற்செயலாக 4 அடிக்கு மேல் இருக்கும் உயரத்தில் இருந்து ஆப்பிள் வாட்ச் கீழே விழுவதும் நடக்காத காரியம் தான். ஆனால், ஆப்பிள் நிறுவனம் சொன்னது போல், இந்த Apple Watch Ultra சாதனம் மிகவும் கடினமானது என்பதை இந்த வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், இது அவ்வளவு எளிதில் சேதம் அடையாது என்ற நிம்மதியையும் ஆப்பிள் ரசிகர்களுக்கு நிரூபித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Popular YouTuber Tested The Durability Of Apple Watch Ultra By Hitting It With Hammer For 10 Times

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X