17 வயது சிறுவனின் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய யாகூ!

Written By:

17 வயது சிறுவனின் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய யாகூ!

யாகூ நிறுவனம் லண்டனைச் சேர்ந்த சும்லி என்ற 17 வயதேயான சிறுவனுடைய நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. இந்த சிறுவன், சிறிய வடிவிலான திரையுடைய ஸ்மார்ட்போன்கள் வழியாக படிக்கவல்ல ஒரு மொபைல் அப்ளிகேஷனை வடிவமைக்கும் நிறுவனம் நடத்தியுள்ளான். இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்பொழுது சிறுவனுக்கு வயது வெறும் 15 தானாம்! அதைத்தான் வாங்கியுள்ளது யாகூ!

சில மாதங்களுக்கு முன்னர் யாகூவின் CEOவாகப் பொறுப்பேற்ற மரிசா மேயரின் கட்டளைப்படியே இந்நிறுவனம் வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வளவு விலைகொடுத்து வாங்கப்பட்டது என்பதுபோன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான சும்லி என்ற 17 வயது சிறுவனுக்கு லண்டன் யாகூ அலுவலகத்தில் பணிநியமனம் வழங்கியுள்ளது யாகூ!

சமூக வலைத்தளங்களில் இவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்!

ஒரு காலத்தில் ஓஹோ என இருந்த யாகூ நிறுவனத்தின் நிலை தற்பொழுது மங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். சர்ச் இஞ்சின் வசதியை வழங்கி கூகுள் நிறுவனத்திற்கு கடும் போட்டியாக இருந்த யாகூவின் நிலை இன்று சற்றே மோசம் எனலாம்.

இணையம் சார்ந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, இனிமேல் எந்த நிறுவனத்தாலும் கூகுள் தேடுபொறியை அசைக்க முடியாது என்பதே! என்னதான் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் முடிவென்று ஒருநாள் இருக்கும் என்பதும் உண்மை.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot