வேர்ல்டூ...6 முதல் 12 வயதினருக்கான வெப்சைட்...

|
வேர்ல்டூ...6 முதல் 12 வயதினருக்கான வெப்சைட்...

விளம்பரங்கள் மற்றும் மீடியா ஏஜென்ஸி துறையில் உள்ள போக்கஸ் குரூப் நிறுவனம் கடந்த செவ்வாயன்று 6 முதல் 12 வயதினருக்கான இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான சமூக வலைத்தளம் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் இந்த தளம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காகவே இதை உருவாக்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

"வேர்ல்டூ தளத்தை பயன்படுத்தி குழந்தைகள் சுலபமாக விளையாடலாம்!. கல்வி, மற்றும் அறிவுப்பூர்வமான விளையாட்டுக்களே இதில் இடம்பெற்றுள்ளன. கார்ட்டூன் நெட்வொர்க், நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சிகளைப் போன்றே சில ஆக்கப்பூர்வமான விளையாட்டுக்களை வழங்கி, அதன் மூலம் கல்வி தொடர்பான அறிவை வளர்க்க உதவுவோம்" என்று போக்கஸ் குழுமங்களின் நிர்வாக தலைவர் மோனிஷ் கட்டாலியா, மும்பையில் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...

'குழந்தைகள் இந்த தளத்தை பயன்படுத்துவதற்கு முன்னர், அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பமும் கேட்டறியப்படும். மேலும் இந்த தளம் எந்த விளம்பரங்கள் மூலமும் இதுவரையிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கவில்லை. வேறு தளங்களின் வழியாக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் கிடைத்தாலும் அதுவும் எங்களுக்கு சிக்கலை உண்டாக்கும். ஏனெனில் எல்லோரையும் கண்காணிக்க முடியாதல்லவா?' என்றார் கட்டாலியா.

வேர்ல்டூ தளத்திற்கு செல்வதற்கு இங்கே சொடுக்கவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X