இந்தியாவில் அறிமுகம் ஆனது டுவிட்டர் லைட்

Written By:

சமீபத்தில் ஃபேஸ்புக் லைட் மற்றும் யூடியூப் கோ ஆகிய புதிய ஆப்ஸ்கள், குறைந்த வேக இண்டர்நெட் மற்றும் இண்டர்நெட் இல்லாமலும் செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது டுவிட்டரின் முறை.

இந்தியாவில் அறிமுகம் ஆனது டுவிட்டர் லைட்

அதேபோல் குறைவான இண்டர்நெட் வேகம் மற்றும் ஆஃபலைனிலும் வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த டுவிட்டர் லைட் பயனாளிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது.

டுவிட்டர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் இந்த புதிய டுவிட்டர் லைட் குறித்து கூறியபோது எந்த ஒரு நபரும் தங்களுடைய ஸ்மார்ட்போன், பிரெளசர் உதவியுடன் டேப்ளட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

வழக்கமான டுவிட்டரை விட 30% அதிக வேகத்துடன் செயல்படும் இந்த டுவிட்டர் லைட், நமது டேட்டாவை சுமார் 70% வரை சேமிக்கவும் உதவுகிறது. மேலும் மொபைல் போன்களில் இது 1MB க்கும் குறைவான இடத்தையே கொள்கிறது' என்று கூறியுள்ளார்.

ஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்

டுவிட்டர் லைட் 6 இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 42 மொழிகளில் செயல்படுகிறது. டேட்டா கனெக்ஷன் இல்லாத ஆஃப்லைனிலும் செயல்படுவதால் பயனாளிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. பிளிப்கார்ட் வேகமான செயலியின் அதே தொழில்நுட்பத்தில் இந்த டுவிட்டர் லைட் ஆப்-ம் உள்ளது என்பதும், பயனாளிகளின் டேட்டா சேவர் மோட் வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அறிமுகம் ஆனது டுவிட்டர் லைட்

மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டதால் டுவிட்டர் லைட் வோடோபோன் நிறுவனத்துடன் கைகோர்த்து அவ்வப்போது எஸ்.எம்.எஸ் மூலம் ஸ்கோர் விபரங்களை வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு தருகிறது

இந்தியாவில் இன்னும் பெரும்பான்மையோர் குறைந்த வேகத்தில் செயல்படும் இண்டர்நெட் கனெக்ஷன்களையே பயன்படுத்தி வருவதால் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் குறைந்த இண்டர்நெட் வேகத்தில் செயல்படும் செயலிகளை உருவாக்குவதில் முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் ஃபேச்புக் லைட் சமீபத்தில் குறைந்த இண்டர்நெட் வேகத்தில் செயல்படும் செயலியை அறிமுகம் செய்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதே போல் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் கோ செயலியும் கடந்த சில நாட்களுக்கு இந்தியர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள டுவிட்டரும் தற்போது குறைந்த இண்டர்நெட் வேகத்தில் செயல்படும் டுவிட்டர் லைட் செயலியை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அதையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Read more about:
English summary
Twitter has just launched its new web app Twitter Lite that functions well even with slow internet connection.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot