ட்விட்டருக்கும் வந்துவிட்டது லைவ் வீடியோ ஆப்ஷன்.!

இந்த வருடம் ஃபேஸ்புக் உள்பட பல சமூக வலைத்தளங்களில் லைவ் வீடியோ மெசேஜ்ஜிங் ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Siva
|

இந்த வருடம் ஃபேஸ்புக் உள்பட பல சமூக வலைத்தளங்களில் லைவ் வீடியோ மெசேஜ்ஜிங் ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டியாளர்களை சமாளிக்கவும், தங்களுடைய பயனாளிகளை கட்டுக்குள் வைத்து கொள்ளவும் டுவிட்டரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் தற்போது லைவ் வீடியோ ஆப்சனை அறிமுகம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ட்விட்டருக்கும் வந்துவிட்டது லைவ் வீடியோ ஆப்ஷன்.!

பேஸ்புக் போலவே டுவிட்டரும் பெரிஸ்கோப் முறையில் லைவ் வீடியோ ஆப்சனை கொண்டு வந்துள்ளது. பெரிஸ்கோப் டுவிட்டருக்கு சொந்தமானது என்பதால் இந்த வசதியை மிக எளிதில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சமூக வலைத்தளங்களில் 'இதையெல்லாம்' செய்தால் சட்ட விரோதம்.!!

மில்லியன் கணக்கானோர் டுவிட்டரை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஆப்சன் டுவிட்டர் பயனாளிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பெரிஸ்கோப் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

லைவ் வீடியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு டுவிட்டர் பயனாளிகளுக்கும் சூப்பர் பவர் கிடைத்துள்ளதாகவே உணர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டருக்கும் வந்துவிட்டது லைவ் வீடியோ ஆப்ஷன்.!

இந்த லைவ் வீடியோ வசதியை நீங்கள் பெற வேண்டுமானால் உங்கள் ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் ஆப் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

டுவிட்டர், பெரிஸ்கோப் இரண்டையும் இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் திரையில் கிடைக்கும். அவற்றில் கேமரா பட்டனை கிளிக் செய்தவுடன் போட்டோ, வீடியோ, லைவ் வீடியோ ஆகிய 3 ஆப்ஷன்கள் கிடைக்கும்.

இண்டர்நெட்டால் உங்கள் கவனம் சிதறுகிறதா? இதோ உங்களுக்கு உதவும் ஐந்து ஆப்ஸ்கள்

இந்த மூன்றில் லைவ் வீடியோ ஆப்சனை நீங்கள் செலக்ட் செய்தால் உடனே அது செயல்பட தொடங்கிவிடும். நீங்கள் பதிவு செய்யும் லைவ் வீடியோவை உங்களை பின் தொடரும் அனைத்து நண்பர்களும் உங்கள் வீடியோவை நேரலையில் பார்க்கும் வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் லைவ் வீடியோவை உங்கள் ஸ்மார்ட்போனிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

ட்விட்டருக்கும் வந்துவிட்டது லைவ் வீடியோ ஆப்ஷன்.!

மேலும் லைவ் வீடியோ ஸ்டார்ட் ஆனவுடன் நீங்கள் உடனே உங்களுடைய லோகேஷனை தேர்வு செய்ய வேண்டும்,. பின்னர் நீங்கள் பாலோ செய்யும் நண்பர்களுக்கு உங்கள் லைவ் வீடியோ தெரிய வேண்டுமா? அல்லது அனைவருக்கும் தெரிய வேண்டுமா? என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்,.

இதேபோல் நம்முடைய லைவ் வீடியோவை பார்க்கும் ஆடியன்ஸ்கள் யார்? என்பதை நாமே முடிவு செய்யும் வகையில் இதன் அம்சம் இருப்பதால் இந்த லைவ் வீடியோ பாதுகாப்பானதும் கூட. ஃபேஸ்புக்கில் இந்த லைவ் வீடியோ ஆப்சன் மிக அபாரமான வரவேற்பை பெற்றது போல் டுவிட்டரிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Twitter live video feature launched with Periscope Integration.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X