எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

By Jeevan
|

நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதைவிட, ஃபேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதே அதிகம் நடந்தேறுகிறது. கேட்டால் அவர்களும் நண்பர்கள் தானே என்பார்கள். தவறில்லைதான் ஆனாலும் அதனால் பல சிக்கல்கள் வரும் என்பதை நினைவில்கொள்க!

முகம்தெரியாத பலரை நாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக்குவதில் உள்ள நன்மைகளைவிட தீமைகளே ஏராளம். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல நயவஞ்சகர்களும் ஃபேஸ்புக்கில் அலைகிறார்கள் என்பதை நினைவில் வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சில சிறந்த லேப்டாப்கள்...

சரி! எவற்றையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது என்பதை இங்கே விவரித்துள்ளோம். உங்களுக்கே தெரிந்திருக்கலாம். தெரியாதவற்றை தெரிந்துகொள்க! விபரங்கள் கீழே உள்ள படங்களில்!

எதுக்கு எல்லாரும் 'இன்போசிஸ்ல' வேலைசெய்ய ஆசைப்படறாங்க?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை. சிலர் வீட்டு முகவரி முதல், செல்போனின் எண்கள் வரையிலும் ஃபேஸ்புக்கில் போட்டிருப்பார்கள். சிலர் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதை ஷேர் செய்யவேண்டும் என்பதில் கவனம்செலுத்துங்கள்.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

ஃபேஸ்புக்கில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை 'சுவற்றில்' எழுதும்பொழுது குறிப்பிடமுடியும். அதுவே சில நேரங்களில் சிரமங்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்க!

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

ஃபேஸ்புக் பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில் கவனம்தேவை. அதிலும் பெண்கள் என்றால் அதிக கவனம்தேவை. உங்களால் வெளியிடப்படும் புகைப்படங்கள் சில தீயவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சிரமத்தை தவிர்க்க, தெரிந்த நண்பர்கள், ஃபேஸ்புக் பிரைவசி ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

உங்களுடைய குடும்ப படங்கள், ஃபேஸ்புக் போன்ற திறந்தவெளி குப்பைமேட்டில் பகிர்வதில் மிகுந்த கவனம்தேவை. மனைவி, குழந்தைகள் படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படியே பயன்படுத்தினாலும் தெரிந்தவர்களுடன் மட்டும் பகிருங்கள்.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

ஃபேஸ்புக்கில் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் பற்றி தவறாக எழுதாதீர்கள். ஒருவேளை அது மற்றவர்களுக்கு உங்கள்மேல் கீழ்த்தரமான என்னத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அம்மாதிரி நிகழ்வுகளை கவனமாக கையாளுங்கள்.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

அரசியல் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ தவறாக ஃபேஸ்புக்கில் எழுதவேண்டாம். உங்கள்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X