கங்ணம் ஸ்டைல் பாடகரின் புதிய பாடல்...

Posted By:

கங்ணம் ஸ்டைல் பாடகரின் புதிய பாடல்...

தென்கொரிய பாப் பாடகரும், நடனக் கலைஞருமான பார்க் ஜீ சங், ரசிகர்களால் சுருக்கமாக PSY என்று அழைக்கப்படுகின்றார். 2012-ம் ஆண்டில், இவர் வெளியிட்ட கங்கணம் பாப் பாடல், இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது. குதிரையின் அசைவுகளை ஒத்த இந்தப் பாடலுக்கான நடனம் மிகவும் புகழ் பெற்றது. 1.5 பில்லியனுக்கும் மேல் மக்கள் இந்தப் பாடலைப் பார்த்து ரசித்திருந்தனர்.

சனிக்கிழமை புதிதாக ஒரு பாடலை வெளியிட்டுள்ளார் இவர். இந்த புதிய பாடலுக்கு ஜென்டில்மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. வெளியாகி 2 தினங்களுக்குள் 5.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. ஆனால் இந்த புதிய பாடலானது கங்ணம் ஸ்டைல் அளவிற்கு இல்லை என்பதே உண்மை. கங்ணம் ஸ்டைல் மாதிரியே முயற்சித்திருக்கிரார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

ஆனால் இந்த பாடல், ஜஸ்டின்பீபரின் 'பாய்ஃபிரண்ட்' என்ற பாடலின் முந்தைய சாதனையான ஒரு நாளில் 8 மில்லியன் பார்வைகளை இந்த புதிய ஜென்டில்மேன் முறியடித்திருக்கிறது.

பாடலை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot