Home
Social media

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

By Siva

ஆன்லைன் உலகில் உங்கள் பர்சனல் டேட்டாக்கள் தேவையில்லாதவர்களிடம் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம். நீங்கள் மிரட்டப்படவோ அல்லது உங்களை தர்மசங்கடம் ஆக்கவோ ஆன்லைன் கயவர்கள் உங்கள் பர்சனல் டேட்டாக்களை திருடலாம். இதிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை தற்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.16/-க்கு டேட்டா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.!

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

1. ஒரே பாஸ்வேர்டை உபயோகிக்க வேண்டாம்.

இமெயில், சமூக வலைத்தளங்கள் ஆகியவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். எனவே பலர் அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதுண்டு. ஆனால் உங்கள் ஆன்லைன் எதிரிகள் உங்களுடைய ஒரே ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிட்டால் பின்னர் உங்களுடைய அனைத்து பர்சனல் டேட்டாக்களும் அவர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் உள்ளது. எனவே முடிந்தவரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பாஸ்வேர்டு பயன்படுத்துவது நல்லது.

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

2. பப்ளிக் வைஃபை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்:

நீங்கள் பயன்படுத்தும் பப்ளிக் வைஃபை உண்மையில் ஒரிஜினல்தானா? அல்லது ஹேக்கர்களின் கைவரிசையில் வந்த வைஃபையா? என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் ஃபைல்களை ஷேர் செய்யும்போது ஃப்யர்பால் செட்டிங்கை மேக்ஸிமம் என்று வைத்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பப்ளிக் வைஃபையை பயன்படுத்தும்பொது VPN (Virtual Private Network) ஐ பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது.

உலக சாதனைப் படைத்த ரிலையன்ஸ் ஜியோ!

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

3. நீங்கள் டோரண்ட் பயன்படுத்துபவரா?

திரைப்படம், பாடல்கள் ஆகியவற்றை டவுண்லோடு செய்யும்போது அதிகாரபூர்வமான டோரண்ட்-ஐ பயன்படுத்தவும். iTunes, Hulu போன்றவைகளை பயன்படுத்தும்போது அதில் விளம்பர தொந்தரவு இருக்காது. இந்த விளம்பரத்தில்தான் அபாயகரமான மால்வேர் இருந்து அது உங்கள் போனை பதம் பார்த்துவிடும்.

4. செலிபிரிட்டி கிசுகிசு பிரியரா நீங்கள்?

பெரும்பாலும் முக்கியமான செலிபிரிட்டிகளின் புகைப்படங்களில் ஹேக்கர்கள் அபாயகரமான மால்வேர்கள் மற்றும் வைரஸ்களை ஒளித்து வைப்பது உண்டு. நீங்கள் ஒரு நடிகையின் கிசுகிசுவையோ அல்லது கிளாமரான புகைப்படத்தையோ டவுண்ட்லோடு செய்தால் அதனுடன் மால்வேரும் வைரசும் சேர்ந்தே வந்துவிடும். எனவே நடிகைகளில் மிக ஆழமான பர்சனல் தகவல்களை சேகரிப்பதில் ஆர்வம் வேண்டாம்

5. அப்டேட் செய்யாமல் மறக்கும் நபரா நீங்கள்?

ஜாவா, அடோப் ஃபிளாஷ் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும். அதுவே நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும். அந்த நேரத்தில் சோம்பேறித்தனத்தை கைவிட்டு உடனே அப்டேட் செய்துவிடுங்கள். இது உங்கள் சிஸ்டத்தை பாதுகாக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

6. Encription என்றால் என்ன?

Encription என்பது பிரிட்டனின் செக்யூரிட்டி கன்சல்டண்ட். http சர்டிபிகேட் உள்ள இணையதளங்களில் இந்த Encription உங்கள் சிஸ்டத்தை பாதுகாக்கும். நீங்கள் பயன்படுத்தும் இணையதள முகவரி கண்டிப்பாக http -ல் ஆரம்பிப்பதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறு ஏதாவது இருந்தால் அந்த இணையதளத்தை தவிர்ப்பது நலம்.

7. கிளெளட் சர்வீஸ் தேவையா?

முடிந்தவரை கிளெளட் சர்வீஸ்களை தவிர்ப்பது நமக்கும் நமது கம்ப்யூட்டருக்கும் நல்லது.

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

8. சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு தேவை

உங்கள் பர்சனல் டேட்டாக்களை வேட்டு வைப்பதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே உங்கள் நண்பர்களோ அல்லது பிறரோ உங்களது பர்சனல் டேட்டாக்களை பார்க்காத வகையில் செட்டிங்கில் வைத்து கொள்ளுங்கள். அல்லது முக்கிய பர்சனல் டேட்டாக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யாதீர்கள்

9. இமெயில்:

இமெயிலில் ஒரு முக்கிய ஃபைலையோ அல்லது பர்சனல் டேட்டாக்களையோ அனுப்பும்போது தகுந்த பாதுகாப்புடன் ஃபைலை அட்டாச் செய்து அனுப்ப வேண்டும். ஹேக்கர்களின் கையில் இமெயில் சிக்கினாலும் அந்த பாதுகாப்பு நமது பர்சனல் டேட்டாகள் ஹேக்கர்கள் கையில் சென்றுவிடாமல் பாதுகாக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் பர்சனல் டேட்டாவை ஆன்லைனில் பாதுகாப்பது எப்படி?

10. சைன் இன் எவ்வளவு முக்கியமோ அதைவிட சைன் அவுட் முக்கியம்

எந்த ஒரு சமூக வலைத்தளமோ அல்லது இமெயிலோ அல்லது வங்கி தளங்களையோ பயன்படுத்திய பின்னர் உடனடியாக சைன் அவுட் செய்ய வேண்டியது ரொம்ப முக்கியம். குறிப்பாக பப்ளிக் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது இது மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி பிரெளசர் ஹிஸ்ட்ரியையும் க்ளியர் செய்துவிட்டால் உங்கள் டேட்டாக்களை யாரும் அசைக்க முடியாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

More from GizBot

Best Mobiles in India

English summary
Things that people should know about Internet Security and how they can safely surf and transfer data online.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X