பிஎஸ்என்எல் ரூ.16/-க்கு டேட்டா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.!
பிஎஸ்என்எல் தீவிரமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஆன போட்டி நிகழ்த்தி வரும் ஒரு தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் ஆகும். உடன் இந்த ஆப்ரேட்டர் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க பல பிரிவுகள் முழுவதும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், பிஎஸ்என்எல் அதன் பிபி249 என்ற 6 மாதம் நீடிக்கும் வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இணைய பிரிவை அசத்தியது. அதனை தொடர்ந்து இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களுடனும் பொருந்தும் கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டபடி, பிஎஸ்என்எல் ரூ.16/-க்கு மலிவான விலையிலான தரவு கட்டண திட்டம் ஒன்றை வழங்குகிறது அது சார்ந்த தகவல்கள் பற்றிய தொகுப்பே இது.

16-ஆம் ஆண்டு கொண்டாட்டம்
பிஎஸ்என்எல் சேவை வழங்குநர் நிறுவனம் 16-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு ரூ.16/-க்கு திட்டம் ஒன்றை அறிவிக்க காரணமாகும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.16/-க்கு 60எம்பி
ரூ.16/- என்ற இந்த சிறப்பு தரவு கட்டண திட்டத்தில் பயனர்கள் 60எம்பி அளவிலான தரவை பெற முடியும். மற்றும் இந்த பேக் சந்தேகத்திற்கு இடமின்றி மலிவானது மற்றும் ஒரு மாத காலம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் வரை
உடன் இந்த சிறப்பு தரவு கட்டண திட்டத்தை அக்டோபர் 7 முதல் அக்டோபர் 31 வரை மட்டுமே பெற முடியும் இதன் மூலம் தெளிவாக இந்த சலுகையை ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு பயனர் அனுபவிக்க முடியும் அதன் பின்னர் இந்த சிறப்பு திட்டம் காலாவதியாகிவிடும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டமானது நாட்டின் பிரதமர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் வெறுமனே ரூ.66/- என்ற மிக குறைந்த செலவில் மக்கள் இணைய அணுகலை பெற முடியும்.

புதிய 2ஜி மற்றும் 3ஜி திட்டம்
முகேஷ் அம்பானியின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் மற்றும் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாடிக்கையாளர்களுக்கு புதிய 2ஜி மற்றும் 3ஜி திட்டங்கள் வெளியிடப்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க
ஏர்டெல் சூப்பர்சேவர் : வெறும் ரூ.49/-க்கு வரம்பற்ற அழைப்புகள் பெறுவது எப்படி.?


Click it and Unblock the Notifications