குழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம், பேஸ்புக் அதிரடி நடவடிக்கை.!
குழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம். ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை
மூன்று வயது குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறும் ஃபேஸ்புக்கில் போலியான விளம்பரம் கொடுத்தவரின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் அதிரடியாக நீக்கப்பட்டது.

பிபிசி ஊடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குழந்தை சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளிவந்தது. ஜேஸ்பர் அலென் என்ற அந்த குழந்தையின் புகைப்படத்தை மட்டும் ஒருவர் எடுத்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, இந்த குழந்தைக்கு கேன்சர் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்காக விருப்பப்பட்டவர்கள் பண உதவி செய்து உதவலாம் என்றும் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணம் அனுப்பியதாக தெரிகிறது. மேலும் மில்லியன் கணக்கானோர் இந்த போலி விளம்பரத்தை ஷேர் செய்தனர்.
ரூ.303/- தவிர்த்து புதிய கட்டண திட்டங்களை வெளியிட்டுள்ளது ஜியோ.!
இந்நிலையில் ஜேஸ்பர் அலென் அவர்களின் தாயார் சாராவின் நண்பர்கள் இந்த விளம்பரம் உண்மையா என கேட்டபோதுதான் அவருக்கு அப்படி ஒரு விளம்பரம் வந்ததே தெரிய வந்தது.
பின்னர் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அவர் கொடுத்த தொடர்ச்சியாக புகாரின் அடிப்படையில் ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடியாக அந்த விளம்பரம் கொடுக்கப்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்டை நீக்கியது.
ஆனாலும் மீண்டும் 24 மணி நேரத்தில் அந்த அக்கவுண்ட் செயல்பட தொடங்கியதால் ஊடகங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த அக்கவுண்ட் மீண்டும் முடக்கப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications