ரூ.303/- தவிர்த்து புதிய கட்டண திட்டங்களை வெளியிட்டுள்ளது ஜியோ.!
புதிய அறிக்கையில் ஜியோ தொலை தொடர்பு ஆபரேட்டர், ரூ.303/- போல்மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்கள் உடன் நீண்ட கால திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறைக்குள் இனிமேல் தான் சரிக்கு சமமான சதுரங்க ஆட்டம் ஆரம்பிக்கிறது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரைம் சந்தாக்கள் (இன்று) மார்ச் 1, புதன்கிழமையில் இருந்து தொடங்குகிறது. மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வரும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது.
ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை அனுபவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு புதிய அறிக்கையில் ஜியோ தொலை தொடர்பு ஆபரேட்டர், அதே போல் மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.149/-
வெளியான புதிய திட்டங்களின் கீழ் ரூ.149/- ஏன திட்டத்தின் கீழ் ப்ரைம் சந்தாதாரர்கள் ஒரு மாத காலம் எந்தவித தினசரி டேட்டா எல்லை பயன்பாடும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும்.

ரூ.499/-
மற்றொரு பேக் ஆன ரூ.499/-ன் கீழ் அதே வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினசரி 2ஜிபி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்ட 60ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரம்பற்ற தரவு
நினைவூட்டும் வண்ணம் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் அதன் புதிய ஜியோ ப்ரைம் சந்தா திட்டத்தை அறிவித்தது. அதன் கீழ் ரூ.303/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற தரவு, அழைப்புகள், குறுந்தகவல்கள், மற்றும் பிற ஜியோ சேவைகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

125ஜிபி
உடன் ரிலையன்ஸ் ஜியோ அதன் நீண்ட கால கட்டண திட்டங்களை வழங்கும் அதாவது 60 நாட்கள் செல்லுபடியாகும் 60ஜிபி அளவிலான தரவை ரூ.999/-க்கும் 90 நாட்கள் செல்லுபடியாகும் 125ஜிபி அளவிலான தரவை வழங்குமென்றும்..

360 நாட்கள் செல்லுபடி
ரூ.1,999/-க்கும் மற்றும் 180 நாட்கள் செல்லுப்படியாகும் 350ஜிபி அளவிலான தரவை ரூ.4,999/-க்கும் 360 நாட்கள் செல்லுபடியாகும் 750ஜிபி அளவிலான தரவை ரூ.9,999/-க்கும் வழங்கும் என்றும் மற்றும் இருந்த அனைத்து ஜியோ பிரியம் திட்டங்களிலும் எந்த தினசரி டேட்டா பயன்பாடு எல்லையும் இருக்காது என்றும் இந்தியாவின் முன்னணி நிதி தகவல் ஆதாரமாக திகழும் மணிகண்ட்ரோல்.காம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க
ஜியோ ப்ரைம் சேவைக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்னவாகும்.?


Click it and Unblock the Notifications