ஃபேஸ்புக்கில் 81 சதவிகிதத்தினர் 'பாஸுடன்' நண்பர்களாவதில்லை...
அமெரிக்காவில் புதிதாக நடத்தப்பட்ட ஆய்வின்படி, 81% மக்கள் தங்கள் நிறுவனத்தின் முதலாளியுடன் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக விரும்புவதில்லையாம். இங்கும் அதே நிலைதான்!
அந்த ஆய்விற்கு 722 பேர் உட்படுத்தப்பட்டு 2 இணையதளங்கள் வழியாக நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற 722ல் 81 சதவிகிதத்தினருக்கு தங்களுடைய பாஸை ஃபேஸ்புக் நண்பராக ஏற்றுக்கொள்வதில் விருப்பமே இல்லையாம். 25 முதல் 34 வயதினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு தான் சுத்தமாக ஃபேஸ்புக்கில் பாஸுடன் ஃபிரண்ட் ஆவது பிடிக்கவே இல்லையாம்.
வேறு யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது என்பதை பார்க்கலாமா?
சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...

யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது?
யாரென்றே தெரியாதவர்கள். குறிப்பாக சொல்வதென்றால் முகம் தெரியாதவர்களை நண்பர்களாக சேர்க்கவே கூடாது.

யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது?
அதேபோல பலதரப்பட்டோருடன் நண்பர்களாக இருப்பவர்களுடன் நாமுமும் நண்பர்களாக இணையக்கூடாது. சிலர் தனது ஃபேஸ்புக் நண்பர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவே நண்பர்கள் ஆக நினைப்பார்கள். அவர்களை தவிர்ப்பது நல்லது.

யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது?
உங்கள் முன்னாள் காதலியின் நண்பர்கள் மற்றும் உங்கள் முன்னாள் காதலரின் நண்பர்கள். இம்மாதிரி நட்பு தொடர்ந்தால் சிக்கலே!

யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது?
நீங்கள் வேலைசெய்யும் நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் ஆர்வக்கோளாறு வந்து எதுவோ எழுதப்போய், அது உங்களுக்கே எதிர்மறை விளைவினை ஏற்படுத்தும். எனவே உங்கள் நிறுவனத்தின் முதலாளிகளிடமிருந்து தள்ளியிருப்பதே நல்லது. ஃபேஸ்புக்கில் மட்டும் தான்!

யாருடனெல்லாம் ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆகக்கூடாது?
அதிகமாக விளம்பரம் செய்பவர்கள். இம்மாதிரியானவர்கள் நட்பும் தவிர்க்கப்படவேண்டியதே. இவர்கள் நம்மைவைத்து ஆதாயம் தேட முயற்சிப்பார்கள்.


Click it and Unblock the Notifications