பொது மக்களுக்கு தெரியாத 10 "மேல் இடத்து" ரகசியங்கள்!

|

என்னதான் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தாலும், அது என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டு தானே ஆக வேண்டும். அப்படியாக வெளிப்பட்ட, பொது மக்களிடமிருந்து தொடர்நது இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் சில மேல் இடத்து ரகசியங்களை பற்றியதே இந்த தொகுப்பு. மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பல பாதுகாப்பு அம்சங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் அறிவோம். அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

டின்டின் கதாபாத்திரம் பயன்படுத்தும் ராக்கெட்: காப்பியடித்த எலான் மஸ்க்.!
"இது ஒன்னும் அவ்ளோ பெரிய மேட்டர் இல்லையே" என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு, இந்த பட்டியலில் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அரச குடும்பங்களின் பாதுகாப்பு திறன் பற்றிய விஷயங்கள் பேசப்படுகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

10. வெள்ளை மாளிகையில் உள்ள இரகசிய சேவை

10. வெள்ளை மாளிகையில் உள்ள இரகசிய சேவை

வெள்ளை மாளிகையில் இருக்கும் இந்த சிறப்பு இரகசிய பாதுகாப்பு சேவையின் கீழ் பணியாற்றுபவர்கள் எப்போதும், பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டு இருப்பார்களாம். அவர்கள் இருண்ட கண்ணாடிகளை அணிந்துகொள்வார்களாம், அவர்களுக்கு குறியீட்டு பெயர்கள் தான் இருக்குமாம், கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் குழுவாகத்தான் பயணிப்பார்களாம். அவர்களின் ஒரே வேலை, தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதே ஆகுமாம்.

09. பென்டகன் கட்டிடத்தின் விசித்திரமான வடிவமைப்பின் உண்மையான பின்னணி!

09. பென்டகன் கட்டிடத்தின் விசித்திரமான வடிவமைப்பின் உண்மையான பின்னணி!

பென்டகன் கட்டிடத்தின் வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு நோக்கம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது என்ன என்பதில் தான் அத்தனை சந்தேகங்களும் உள்ளன. அது உயரமானதாக இல்லை, (நிச்சயமாக பாதுகாப்பு காரணங்களுக்காக தான் உயரமாக இல்லை). ஆனால் அது பல அலுவலகங்களுக்கு இடமளிக்க போதுமானதாக இருக்கிறது. அதாவது சுமார் 40,000 பேர் அங்கு வேலை செய்கிறார்கள். எல்லாம் சரி, கட்டிடத்தின் வடிவமைப்பிற்கு என்ன காரணம்? - பெரிதாக ஒன்றுமில்லை, பென்டகன் ஆனது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் அளவை விட இரு மடங்கு அதிக பரப்பளவைக் கொண்டிருக்கிறது,இருந்தாலும் கூட அதன் மண்டபங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக கட்டப்பட்டுள்ளன. அது ஒரு கட்டத்தில் இருந்து வேறு எந்த இடத்திற்கும் வெறும் 6 நிமிடங்களுக்குள் போய்விடும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

08. வெள்ளை மாளிகையில் உணவுகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனர்கள் உள்ளன.

08. வெள்ளை மாளிகையில் உணவுகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனர்கள் உள்ளன.

வெள்ளை மாளிகையில் சமைக்கும் உணவானாலும் சரி, பார்வையாளர்களால் கொண்டுவரப்படும் உணவாக இருந்தாலும் சரி, அது ஒரு பிரத்யேக ஸ்கேனர்கள் கொண்டு பரிசோதிக்கப்பட்ட பின்பே மேசையை அடையும். இது ஜனாதிபதிக்கான பாதுகாப்பான உணவை உறுதி செய்கிறது.

07. 100 டாலர் தாளில் உள்ள அதிநவீன பாதுகாப்பு

07. 100 டாலர் தாளில் உள்ள அதிநவீன பாதுகாப்பு

அமெரிக்காவின் 100 டாலர்கள் பணத்தாள் ஆனது, சமீபத்தில் மாற்றப்பட்டுவிட்டது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களே ஆகும். அந்த தாளில் இப்போது பல மறைக்கப்பட்ட அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, பிராங்க்ளின் படத்தின் வலது பக்கத்தில் ஒரு பரந்த 3டி பாதுகாப்பு நாடா உள்ளதாம். மேலும் போலி நோட்டை தயாரிக்க முடியாதபடி பல அம்சங்களை கொண்டு உள்ளதாம்.

06. சூப்பர் செக்யூர் ப்ரெசிடென்டல் கார்

06. சூப்பர் செக்யூர் ப்ரெசிடென்டல் கார்

அமெரிக்க ஜனாதிபதியின் கார் கதவுகள் அடிப்படையில் அழிக்கமுடியாதவை ஆகும். அந்த பிரத்யேக காரின் உடல் ஆனது 5-அங்குல இராணுவ தர கவசம் கொண்டது. காரின் கீழ் வைக்கப்படும் எந்தவொரு குண்டும், காட்டை சேதப்படுத்தாது. அதன் ஜன்னல்கள் வலுவான பாலிஸ்டிக் கண்ணாடிகளால் தயாரிக்கப்படுகின்றன. கதவுகள் 8 அங்குல தடிமனாக இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் போயிங் 747 ஜெட் கதவுகளுக்கு சமம். இந்த வாகனத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று உத்தியோகபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த காரி பெயர் - தி பீஸ்ட்.

05. ராயல் பயண பாதுகாப்பு

05. ராயல் பயண பாதுகாப்பு

இங்கிலாந்தின் அரச குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் தனியார் விமானங்களில் பறப்பதில்லை; அவர்கள் பெரும்பாலும் சாதாரண விமானங்களில் தான் பறக்கின்றனர். அவர்கள் வழக்கமாக தாய்நாடு நிறுவனத்தை ஆதரிப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை தேர்வு செய்கின்றனர். எனினும், அவர்கள் உச்சநிலை பாதுகாப்பு குழு இல்லாமல் பயணிப்பது கிடையாது.

4. யூரியன் விண்மீன் கூட்டம்

4. யூரியன் விண்மீன் கூட்டம்

ஓம்ரான் ரிங்ஸ் அல்லது டோனட்ஸ் என்றும் அழைக்கப்படும் யூரியன் விண்மீன் கூட்டம் என்பது, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய நாணய வடிவமைப்புகளின் வரையப்பட்ட குறியீட்டு வடிவங்களின் மாதிரி ஆகும். இது டிஜிட்டல் படத்தில் ஒரு பணத்தாள் இருக்கும் பட்சத்தில் அடையாளம் காட்ட உதவும் இமேஜிங் மென்பொருள் ஆகும். இத்தகைய மென்பொருளானது வண்ண ஒளிநகலிகளைப் பயன்படுத்துகிறது. இது பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் அதன் கண்டுபிடிப்பாளர்களாலும் பயனர்களாலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

03. ரூபாய் நோட்டுகளுக்கான மைக்ரோபிரிண்டிங்

03. ரூபாய் நோட்டுகளுக்கான மைக்ரோபிரிண்டிங்

போலி நோட்டுகளை உருவாக்குவதை தடுக்கும் நோக்கத்தின் உருவானதே ரூபாய் நோட்டுகளுக்கான மைக்ரோபிரிண்டிங். இந்த சிறப்பு அச்சுப்பொறிகள் ஆனது, நோட்டு தாள்களில் மிக மிக சிறிய எழுத்துக்களை உருவாக்குகிறது. சாதாரண அச்சுப்பொறிகளும், ஸ்கேனர்களும் அவற்றை அடையாளம் காணவும் பிரதிகள் எடுக்கவும் முடியாது என்பதால் போலி நோட்டுகளை உருவாக்கம் பெறாது.

02. வெள்ளை மாளிகையில் ஏர் பில்டர் உள்ளது.

02. வெள்ளை மாளிகையில் ஏர் பில்டர் உள்ளது.

ஆமாம், சுவாச காற்றை சுத்தப்படுத்தும் பில்டர்கள் வெள்ளை மாளிகையில் உள்ளது தான். ஒரு காலத்தில், வெள்ளை மாளிகையில் குளிர்சாதன பெட்டிகூட இல்லை என்பதையும் , அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் கோடைகாலத்தை சூடான சூழ்நிலையில் தான் செலவிட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

01. ஒரு ஸோம்பி பேரழிவு ஏற்பட்டால் செயல்படுத்தப்படும் பென்டகன் திட்டம்!

01. ஒரு ஸோம்பி பேரழிவு ஏற்பட்டால் செயல்படுத்தப்படும் பென்டகன் திட்டம்!

நம்பினால் நம்புங்கள், பென்டகன் ஆனது ஸோம்பி பேரழிவு ஏற்பட்டால் உயிர்வாழ்வதற்கான ஒரு அற்புதமான திட்டத்தை தன்னிடம் வைத்துள்ளதாம். "கோனொப் 8888." என்ற பெயரை கொண்டுள்ள அந்த திட்டமானது, ஒரு உண்மையான, நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் ஸோம்பிகளுக்கு எதிரான போரின் விரிவான திட்டமாம். நிகழும் போது தான் அதன் வீரியம் வெளிப்படும், நடந்தால் தானே!

Best Mobiles in India

English summary
10 Hidden Things That the General Public Doesn’t Know About : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X