டின்டின் கதாபாத்திரம் பயன்படுத்தும் ராக்கெட்: காப்பியடித்த எலான் மஸ்க்.!

|

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது "மார்ஸ்-காலனைஸிங் ஸ்பேஸ்ஷிப்" முன்மாதிரியை விரைவில் விண்ணில் செலுத்த முடிவெடுத்துள்ளது.

டின்டின் கதாபாத்திரம் பயன்படுத்தும் ராக்கெட்:காப்பியடித்த எலான் மஸ்க்

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் வாகனத்தின் முதல் பரிசோதனை வாகனம் இன்னும் சில வாரங்களில் அதன் முதல் குறுகிய "நம்பிக்கை" பயணத்திற்கு தயாராக இருக்கும் என அந்நிறுவனத்தின் நிறுவனரும்,தலைமை நிர்வாக இயக்குநருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

4 வாரங்களில் முடிக்க இலக்கு

முதல் ஹோப்பர் பரிசோதனை எப்போது நிகழும் என கேள்வியெழுப்பிய டிவிட்டர் பின்தொடர்பாளர் ஒருவருக்கு , " 4 வாரங்களில் முடிக்க இலக்கு. ஆனால் எதிர்பாரா பிரச்சனைகள் காரணமாக 8 வாரங்கள் ஆகலாம்" என ஜனவரி 5 அன்று டிவிட்டரில் பதிலளித்தார் மஸ்க்.

 டின்டின்

டின்டின்

மேலும் பரிசோதனை வாகனத்தின் மாதிரியையும் டிவீட் செய்துள்ளார் மஸ்க். மூன்று துடுப்புகள் கொண்ட ராக்கெட் போல தோற்றமளிக்கும் இது, 1954 அட்வென்சர் "எக்ஸ்ப்லோரர்ஸ் ஆன் தி மூன்" காமிக்கில் உள்ள டின்டின் கதாபாத்திரம் பயன்படுத்தும் இராக்கெட் போலவே உள்ளது.

ஜன்னல்கள்

"தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் ஸ்டார்ஷிப் பரிசோதனை வாகனம் முழுமையடைந்த பிறகு , இந்த மாதிரி படத்தில் உள்ளது போலவே இருக்கும். இயக்கப்படும் ஸ்டார்ஷிப்களில்.ஜன்னல்கள் போன்ற நிறைய வசதிகள் இருக்கும்" என டிவீட் செய்துள்ளார் எலான் மஸ்க்

நிலவு, செவ்வாய் மற்றும் சூரிய குடும்பம்

நிலவு, செவ்வாய் மற்றும் சூரிய குடும்பம்

நிலவு, செவ்வாய் மற்றும் சூரிய குடும்பம் முழவதும் உள்ள இடங்களுக்கு மனிதர்கள் செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் சூப்பர் ஹெவி என அழைக்கப்படும் பிரம்மாண்ட ராக்கெட்டையும், ஸ்டார்ஷிப்பையும் உருவாக்கி வருகிறது. பி.எப்.ஆர் என அழைக்கப்பட்ட இந்த மறு பயன்பாடு செய்யக்கூடிய இந்த இணையின் பெயரை சமீபத்தில் மாற்றம் செய்தார் மஸ்க்.

ரெட் பிளானெட்

ரெட் பிளானெட்

உருவாக்கம் மற்றும் பரிசோதனை போன்றவை நன்றாக சென்றால், 2020ஆம் ஆண்டின் மத்தியில் ரெட் பிளானெட் மிஷனுக்கான 100 பயணிகள் கொண்ட ஸ்டார்ஷிப் மற்றும் ராக்கெட் முதல் பயணத்திற்கு தயாராக இருக்கும் என தெரிவித்துள்ளார் மஸ்க்..

ஹோப்பர் விண்கலன்

கலிபோர்னியாவின் ஹேதோர்ன்-ல் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்திலும், எல்லை நகரான ப்ரவுன்ஸ்விலே அருகில் உள்ள தெற்கு டெக்ஸாசில் உள்ள இந்நிறுவனத்தின் பரிசோதனை களத்திலும் இப்பணிகள் நடந்து வருகின்றன. தெற்கு டெக்சாஜில் உள்ள பரிசோதனை தளத்தில் இருந்தே ஹோப்பர் விண்கலன் செலுத்தப்படும்.


ஸ்டார்ஷிப் மற்றும் சூப்பர்ஹெவி இரண்டும், ஸ்பேஸ்எக்ஸின் தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் சக்திவாய்ந்த ராப்டர் இன்ஜின் மூலம் செயல்படும். " ஸ்டார்ஷிப் பரிசோதனை வாகனத்தில் செயல்படும் என்ஜின்கள் " ராப்டர் உருவாக்கம் மற்றும் செயல் பாகங்களின் கலவை" யாக இருக்கும் என மற்றொரு டிவிட்டில் கூறியுள்ளார் எலன். அடுத்த மாதம் இந்த ஹோப்பர் என்ஜின்கள் பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

பால்கான்9

பால்கான்9

ஹோப்பர்கள் ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிம பங்குவகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பால்கான்9 மூலம் தரையிறங்கி மீண்டும் பறப்பதற்கு தேவையான நிபுணத்துவத்தை பெற 2012 மற்றும் 2013ல் இந்நிறுவனம் க்ராஸ்ஹோப்பர் பரிசோதனை வாகனத்தை விண்ணில் செலுத்தியது. இந்த க்ராஸ்ஹோப்பர் 2500அடி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
SpaceX's 'Starship' Hopper Prototype Could Make 1st Test Flight in Weeks, Elon Musk Says: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X