Home
Scitech

பிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்

இந்த பரந்த பிரபஞ்சத்தில் பூமி போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டு வருகின்றனர். மற்ற கிரகங்களை, நட்சத்திரங்கள் போலவே இந்த கிரகங்களும் சூரியனைப் சுற்றிவரும் தன்மையுடன் உள்ளது.

பிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்

இதுகுறித்த புதிய ஆய்வு விண்வெளியில் அன்னிய உயிர்களை அதாவது ஏலியன்ஸ்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி புதிய கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே ...

சூரிய மண்டலத்திற்கு வெளியே ...

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே காத்திருக்கும் ஆயிரக்கணக்கான அறியப்படாத கிரகங்கள் நாசாவின் கெப்லர் என்ற டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிரகங்கள் அதற்குரிய சூரியனைச் சுற்றி வருவதை நாசா கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் ஒரே இரவில் செய்யப்படவில்லை என்பதையும், சுமார் 10 ஆண்டுகள் வானியல் தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் இரவுபகல் பாராமல் ஆய்வு செய்ததன் விளைவாக எழுந்த கண்டுபிடிப்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றார்களா?

வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றார்களா?

ஒரு நட்சத்திரத்திற்கு முன்னால் ஒரு கிரகம் வரும்போது ஏற்படும் ஒளியால் சிறிதளவு கண்காணிக்கும் அளவு குறையும். ஆனால் கடைசியில் வானியல் நிபுணர்களுக்கு அந்த கிரகங்களின் பண்புகள் மற்றும் அளவு பற்றி ஒரு ஐடியா கிடைத்துவிடும். மேலும் புதிய கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றார்களா? அவர்களும் பூமியைப் போல வாழ்கிறார்களா? என்பதையும், வேற்றுகிரகவாசிகள் வாழக்கூடிய கிரகங்களைக் கண்டுபிடிப்பதும் நாசாவின் முதன்மை நோக்கமாக உள்ளது.

போதுமான ஒளியைப் பெறுகின்றனவா?

போதுமான ஒளியைப் பெறுகின்றனவா?

பென் என்ற மாநிலத்தை சேர்ந்த பி.போர்டு என்ற வானியல் நிபுணர் இந்த கிரகங்கள் பூமிக்கு எவ்வளவு நெருக்கமானவை?, அவை வாழ்க்கைக்கு ஆற்றலை வழங்குவதற்கு போதுமான ஒளியைப் பெறுகின்றனவா?. என்பது குறித்து ஆய்வு செய்தார். கெப்லர் டெலஸ்கோப் மூலம் பி.போர்டு பலவிதமான அளவுகள், கலவைகள் மற்றும் சுற்றுப்பாதைகளைக் கொண்ட கிரகங்களைக் கண்டுபிடித்தாக தெரிவித்தார்.

கிரக உருவாக்கம்

கிரக உருவாக்கம்

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கிரக உருவாக்கம் குறித்த நமது புரிதலை மேம்படுத்துவதற்கும், உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்களைத் தேடுவதற்கும் எதிர்கால பயணங்களைத் திட்டமிடுவதற்கும் நாங்கள் அந்த கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறோம். இருப்பினும், கொடுக்கப்பட்ட அளவு அல்லது சுற்றுப்பாதை தூரத்தின் எக்ஸ்போப்ளானெட்டுகளை எண்ணுவது தவறானது. ஏனெனில் இது மிகவும் கடினம் நட்சத்திரத்திற்கு நெருக்கமான பெரிய கிரகங்களைக் கண்டுபிடிப்பதை விட சிறிய நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து,. அந்த கிரகங்களின் தன்மைகளை புரிந்துகொள்ளவே விஞ்ஞானிகள் முயற்சிகின்றோம்.

வாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.!

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி

இதனையடுத்தே ஒரு மாதிரி கிரகத்தை உருவாக்கி அதன், நட்சத்திரங்கள் மற்றும் மற்ற கிரகங்களுடன் கூடிய ஒரு கற்பனை பிரபஞ்சத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. அடுத்த கட்டமாக, அவற்றை கெப்லர் விண்வெளி தொலைநோக்கியால் ஆராய்ந்து எங்கள் உருவகப்படுத்துதல்களை உருவாக்கி அந்த கிரகங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கிரகங்களின் இறுதி பட்டியலை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கியா விண்கலத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட நட்சத்திர பண்புகளையும் நாங்கள் பயன்படுத்தினோம் என பென் மாநிலத்தில் பட்டதாரி மாணவரும், விஞ்ஞான பத்திரிகை ஒன்றின் ஆசிரியருமான டான்லி ஹஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஒன்றரை மடங்கு பெரிய அளவிலான கிரகங்கள்

ஒன்றரை மடங்கு பெரிய அளவிலான கிரகங்கள்

சமீபத்திய பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை ஆய்வு குறிப்பிடுகிறது. தற்போது, ​​விஞ்ஞானிகளால் பிரபஞ்சம் முழுவதும் வாழக்கூடிய கிரகங்களைத் தேட முடியும். மேலும், பூமியை விட முக்கால்வாசி முதல் ஒன்றரை மடங்கு பெரிய அளவிலான கிரகங்கள் இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு நீண்ட காலம் தொடரமால் விரைவில் இதுகுறித்த முழு விபரங்களையும், வேற்றுகிரகவாசிகள் குறித்தும் முழு அளவில் கண்டுபிடிக்கப்படும்

Best Mobiles in India

English summary
Earth-Like Planets Could Be Harboring Aliens Close To Our Solar System : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X