வாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.!
வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸமார்ட்போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பயன்படும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை கொண்டுவருகிறது, அதன்படி இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம், கண்டிப்பாக இந்த வசதி அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.

ஆல்பம்ஸ் மற்றும் க்ரூப்டு ஸ்டிக்கர்ஸ்
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் வாட்ஸ்ஆப் வெப்பில் ஆல்பம்ஸ் மற்றும் க்ரூப்டு ஸ்டிக்கர்ஸ் என்கிற இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

வாட்ஸ்ஆப்-ஆல்பம்ஸ்:
வாட்ஸ்ஆப் ஆல்பம் என்பது, ஸ்மார்ட்போன் வழியாக ஒரே நேரத்தில் 30புகைப்படங்கள் வரையிலாக அனுப்பும் ஒரு அம்சம் ஆகும், ஸ்மார்ட்போன் கேலரியில் இருந்து அதிகமான புகைப்படங்களை செலக்ட் செய்யும் இந்த
அம்சம் வெப் வெர்ஷனிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரூப்டு ஸ்டிக்கர்ஸ்:
க்ரூப்டு ஸ்டிக்கர்ஸ் அம்சம் பொறுத்தவரை ஆல்பம் அம்சத்தின் படி செயல்படக்கூடியது, அது என்னவென்றால், ஒரே வரிசையின் கீழ் இரண்டு ஸ்டிக்கர்களை ஒன்றாக அனுப்ப உதவும் ஒரு அம்சம் தான் க்ரூப்டு ஸ்டிக்கர்ஸ். இதை நிகழ்த்த அனுப்புநர்கள் விசேஷமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை, வெறும் இரண்டு ஸ்டிக்கர்களை
அனுப்ப, அது ஒரே வசரிசையின் கீழ் வந்தடையும்.

கூடிய விரைவில்
இப்போது அறிவித்துள்ள இந்த இரண்டு புதிய அம்சங்கள் இதுவரை வாட்ஸ்ஆப் வெப் வெர்ஷனின் கீழ் கிடைக்கவில்லை, ஆனால் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

கைரேகை ஸ்கேனர் வசதி
இதற்குமுன்பு வாட்ஸ்ஆப் நிறுவனம் கைரேகை ஸ்கேனர் வசதியை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கைரேகை சென்சாரை
பயன்படுத்துவதின் மூலம் உங்களின் வாட்ஸ்ஆப் செயலி திறக்கும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே..
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கேனரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது போலவே வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்ற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications