கதறும் சீனா; பதறும் பாகிஸ்தான்; அப்துல் கலாம் தீவில் என்ன நடக்கிறது.?

  சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பான டி.ஆர்.டி.ஓ (DRDO - Defence Research and Development Organisation) இந்திய - சீன எல்லைப்பகுதிகளில் ஒன்றான சிக்கிமில் வருகிற வாரத்தில் ஹை-ஆல்டிடூட் ஆயுத சோதனை (high altitude trial) ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஒரு மூத்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரியின் மூலமாக தகவல்கள் வெளியாகியது.

  கதறும் சீனா; பதறும் பாகிஸ்தான்; அப்துல் கலாம் தீவில் என்ன நடக்கிறது.?

  அந்த சோதனையில், 155 மிமீ 52-கேலிபர் அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி (52-calibre advanced towed artillery gun system) அமைப்பானது சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

  கதறும் சீனா; பதறும் பாகிஸ்தான்; அப்துல் கலாம் தீவில் என்ன நடக்கிறது.?

  இது ஓருபக்கமிருக்க இன்று இந்தியாவின் ஒடிஷாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் மேலுமொரு "மரண பீதி கிளப்பும்" ஆயுத பரிசோதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கதறும் சீனா - ஏன்.?

  இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அக்னி-5 ஏவுகணையானது இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி ஏவுகணையாகும் என்பதும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த அக்னி-5 ஏவுகணையானது ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் உள்ள டிஃபென்ஸ் டெஸ்ட் பெசிலிட்டியில் இருந்து இன்று சோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளது. அக்னி-5 ஏவுகணையின் பாய்ச்சல் ஆனது சுமார் 5000 கிலோமீட்டர் ஆகும். அதாவது இதன் தாக்குதல் எல்லைக்குள் முழு சீனாவும் அடங்கும் (இந்த இடத்தில பாகிஸ்தானின் நிலைப்பாடு இன்னும் மோசம்).-

  Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
  பதறும் பாகிஸ்தான் - ஏன்.?

  பதறும் பாகிஸ்தான் - ஏன்.?

  முந்தைய சோதனைகள் வெற்றிகரமான முடிந்த காரணத்தினால், இன்றைய சோதனை ஸ்ட்ரெஜிடிக் போர்சஸ் கமாண்ட் (Strategic Forces Command) மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரெஜிடிக் போர்சஸ் கமாண்ட் சில சமயங்களில் ஸ்ட்ரெஜிடிக் நியூக்லியர் கமாண்ட் (Strategic Nuclear Command) என்றும் அழைக்கப்படும் என்பதும், இது இந்தியாவின் அணுசக்தி கட்டளை அதிகாரத்தின் ( Nuclear Command Authority) ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அக்னி-5

  காலை வெளியான தகவலின்படி இந்த சோதனைக்கான கண்காணிப்பு உபகரணங்கள் ஏற்கனவே மூலோபாய இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் சோதனையானது திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

  இதுவரை மொத்தம் நான்கு முறை

  முன்னதாக கடந்த டிசம்பர் 26, 2016 அன்று அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை இதுவரை மொத்தம் நான்கு முறை சோதிக்கப்பட்டு, அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தது. அதில் இரண்டு சோதனைகளானது ரோட்-மொபைல் லான்சர் (road-mobile launcher) மூலம் நிகழ்த்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.c

  தாக்குதல் எல்லை விவரங்கள்

  அக்னி-5 ஏவுகணையானது மூன்று-நிலை, திடமான சர்பேஸ்-டூ-சர்பேஸ் (மேற்பரப்பு) ஏவுகணையாகும். இது சுமார் 17 மீட்டர் நீளமும், 50 டன் எடை கொண்டது. தற்போதுள்ள அக்னி -1 ஏவுகணையானது சுமார் 700 கி.மீ பாயும் என்பது, அக்னி-2 ஆனது 2,000 கி.மீ பாய்ச்சல் கொண்டதென்பதும் அக்னி-3 மற்றும் அக்னி-4 ஆகிய படைக்கல ஏவுகணைகளானது சுமார் 2,500 கி.மீ என்கிற தாக்குதல் எல்லை கொண்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

  எந்தெந்த சோதனை, எப்போது.?

  அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை கடந்த ஏப்ரல் 19, 2012 அன்றும், ​இரண்டாவது சோதனை கடந்த செப்டம்பர் 15, 2013 அன்றும், மூன்றாவது சோதனையானது ஜனவரி 31, 2015 அன்றும், இறுதியாக நான்காம் சோதனை கடந்த டிசம்பர் 26, 2016 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  India may conduct user trial of its most lethal Agni-V missile today. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more