ஹலோ சீனாவா.? அடுத்தவாரம் சோதனை; ஓரமா நின்னு வேடிக்க பாத்துக்கோ.!

இதன் ஆல்-எலெக்டிரிக் டிரைவ் திறனானது வெடிமருந்துகளை கையாள உதவுகிறது. இந்த அதிநவீன ஆயுதமானது வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

|

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பான டி.ஆர்.டி.ஓ (DRDO - Defence Research and Development Organisation) இந்திய சீன எல்லைப்பகுதிகளில் ஒன்றான சிக்கிமில் அடுத்த வாரமொரு ஹை ஆல்டிடூட் சோதனை (high altitude trial) ஒன்றை நிகழ்த்தவுள்ளது.

ஹலோ சீனாவா.? அடுத்தவாரம் சோதனை; ஓரமா நின்னு வேடிக்க பாத்துக்கோ.!

இந்த சோதனையில், 155 மிமீ 52-கேலிபர் அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி அமைப்பை (52-calibre advanced towed artillery gun system) சோதனைக்கு உட்படுத்த டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து டிஆர்டிஓ மூலம் உருவாக்கப்பட்ட இந்த அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி அமைப்பானது (ATAGS), கடந்த ஆண்டு செப்டம்பரில் வெற்றிகரமாக பாலைவன சோதனைகளை கடந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

எத்தனை நாட்கள் நீடிக்கும் .?

எத்தனை நாட்கள் நீடிக்கும் .?

ஒரு மூத்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரி அளித்த தகவலின்படி, "அடுத்த வாரம் சிக்கிமில் ஹை ஆல்டிடூட் சோதனை ஒன்று நடத்தப்படும். ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (ARDE) குழுவுடன் இணைந்து இராணுவத்தினர் இந்த சோதனையை நிகழ்த்தவுள்ளனர். இந்த சோதனை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது பற்றிய தெளிவில்லை ஆனால் பொதுவாக அது ஒரு சில வாரங்களுக்கு செல்லும்" என்று கூறியுள்ளார்.

ஷெல் 47 கிமீ தூரத்தை எட்டியுள்ளது.!

ஷெல் 47 கிமீ தூரத்தை எட்டியுள்ளது.!

கடந்த ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தானில் இந்த ஆயுத அமைப்பின் பாலைவன சோதனைகள் நடத்தப்பட்டது. அதில் பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானிகள் தாங்கள் விரும்பிய முடிவுகளை அடைந்தாக கூறினர். அதன் அர்த்தம் - இந்த அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி அமைப்பின் ஷெல் 47 கிமீ தூரத்தை எட்டியுள்ளது.

ஒரு உலக சாதனை பதிவாகும்.!

ஒரு உலக சாதனை பதிவாகும்.!

இந்த இடத்தில இந்திய இராணுவத்தின் தேவை (அதாவது தாக்குதல் தூரம்) ஆனது 40 கிமீ தான் (டிஆர்டிஓ ஆதாரங்களின்படி) என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலைவன சோதனையில் 47 கிமீ தூரத்தை எட்டிய இந்த துப்பாக்கி அமைப்பானது உண்மையில் ஒரு உலக சாதனை பதிவாகும்.

வெவ்வேறு வானிலை மற்றும் புவியியல் நிலை

வெவ்வேறு வானிலை மற்றும் புவியியல் நிலை

"சிக்கிமில் நடக்கும் சோதனையானது வெவ்வேறு வானிலை மற்றும் புவியியல் நிலைகளின் காரணமாக மிகவும் கடினமானதாகவும் அதே சமயம் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கும். இந்த சோதனையின் போது ​​அதிக எண்ணிக்கையிலான விரிவான பீரங்கி வெடிமருந்துகள் துப்பாக்கியின் வழியாக வெளியேற்றப்படும்" என்று ஒரு மூத்த டி.ஆர்.டி.ஓ அதிகாரி கூறியுள்ளார்.

முன்மாதிரிகள் உருவாக்கம் பெற்றது

முன்மாதிரிகள் உருவாக்கம் பெற்றது

இந்திய பாதுகாப்பு அமைச்சகமானது, கடந்த செப்டம்பர் 2012-ல் இந்த துப்பாக்கி அமைப்பு திட்டத்தை ஒப்புக் கொண்டது. பின்னர் டிஆர்டிஓ, பாரத் ஃபோர்ஜ் மற்றும் டாட்டா பவர் ஆகியோருடன் இணைந்து இரண்டு அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி அமைப்புகளின் முன்மாதிரிகள் உருவாக்கம் பெற்றது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
இராணுவம் அதன் சொந்த சோதனைகளை நடத்தி

இராணுவம் அதன் சொந்த சோதனைகளை நடத்தி

அந்த முன்மாதிரிகள் கடந்த 2016 டிசம்பரில் ஒடிசாவில் உள்ள பாலசோர் நகரில் உள்ள சோதனை மையமொன்றில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொதுவாக பாதுகாப்பபு துரையின் அனைத்து சோதனைகள் முடிந்த பிறகு, இராணுவம் அதன் சொந்த சோதனைகளை நடத்தி ஒவ்வொரு முடிவுகளையும் பகுப்பாய்வு செய்யும்.

நவீன கால பாரம்பரியம் மிக்க ஹைட்ராலிக் துப்பாக்கி

நவீன கால பாரம்பரியம் மிக்க ஹைட்ராலிக் துப்பாக்கி

இராணுவம் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஒரு சந்தேகம் கொண்டிருப்பின், அது மறுபடியும் மறுபரிசீலனை செய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அட்வான்ஸ்டு டவ்டு ஆர்டிலரி துப்பாக்கி அமைப்பானது (ATAGS) ஒரு ஆல்-எலெக்டிரிக் டிரைவ் மற்றும் ஒரு நவீன கால பாரம்பரியம் மிக்க ஹைட்ராலிக் துப்பாக்கி அமைப்பாகும்.

2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய இராணுவத்தில்

2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய இராணுவத்தில்

இதன் ஆல்-எலெக்டிரிக் டிரைவ் திறனானது வெடிமருந்துகளை கையாள உதவுகிறது. இந்த அதிநவீன ஆயுதமானது வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
India's World Record Holding Artillery Gun To Undergo High Altitude Trials Near China Border. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X