வடகொரியாவிற்கு ஒரு பலமும் இல்லையென்றால், அமெரிக்கா அஞ்சுவது எதற்கு.?

|

வடகொரியவாவின் "சுப்ரீம் லீடர்" ஆன கிம் ஜொங்-உன் - இவரை பார்த்ததுமே உங்களுக்கு சிரிப்பு வருகிறதா.? ஒரு ஜோக்கர் போல தெரிகிறார் அல்லவா.? இந்த ஜோக்கர் தான் அமெரிக்கா என்ற ஆளுமை சாம்பிராஜ்யத்திற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

வடகொரியாவிற்கு ஒரு பலமும் இல்லையென்றால், அமெரிக்கா அஞ்சுவது எதற்கு.?

கிம் ஜொங்-உன் மற்றும் அவரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கும் வடகொரியாவும், அண்டை நாடுகள் பார்த்து அஞ்சும் அளவிற்கு நிஜமாகவே பலமானது தானா அல்லது வெறுமனே பயமுறுத்தி வைத்திருக்கிறதா.? நிஜமாகவே வடகொரியா ஆபத்தானது தான் என்றால் அதன் உண்மையான பலம் மற்றும் ஆயுத திறன்கள் தான் என்ன.?

01. சைபர் தாக்குதல்

01. சைபர் தாக்குதல்

வடகொரியாவின் சில பலவீனங்களை ஈடுகட்டும் ஒரு சமச்சீரற்ற வழிமுறை தான் பிற நாடுகளுக்கு எதிராக வட கொரியா நிகழ்த்தும் - சைபர் தாக்குதல்கள். சமீப காலமாக வடகொரியா பலவகையான சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவதின் மூலம் பியொங்யாங் (Pyongyang - அந்நாட்டின் தலைநகரம்) பற்றிய வலிமையை சற்று அறிந்து கொள்ள முடிகிறது.

திறமையற்றதாகவே இருக்கிறது

திறமையற்றதாகவே இருக்கிறது

இருப்பினும், சீனா மற்றும் ரஷ்யா அளவிற்கு சிறப்பான, தாக்குப்பிடிக்கக்கூடிய சைபர் தாக்குதல்களை நிகழ்த்த வடகொரியா திறமையற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது வடகொரியாவின் சைபர் தாக்குதல்கள் ஒரு நாட்டின் பயன்பாடுகளை முடக்கவோ, நெட்வொர்க்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவிற்கோ திறமையற்றதாகவே இருக்கிறது.

02. பலிஸ்டிக் மிஸைல்ஸ் :

02. பலிஸ்டிக் மிஸைல்ஸ் :

பலிஸ்டிக் மிஸைல்ஸ் (Ballistic Missiles) அதாவது விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள். குறிப்பிடத்தக்க ஏவுகணை திறன் கொண்ட நாடுகளில் வடகொரியாவும் ஒன்றாகும்.

எங்கு வேண்டுமானாலும் இலக்கு

எங்கு வேண்டுமானாலும் இலக்கு

தற்போதைய நிலவரப்படி வடகொரியாவிடம் தோராயமாக, சுமார் 600 குறுகிய தூர ஸ்கட் ஏவுகணைகள் (Short-range Scud missiles), 200 னோடோங் ஏவுகணைகள் (Nodong missiles), ஐம்பது முசூதன் (Musudan) மற்றும் தெப்போடோங் (Taepodong) ஏவுகணைகள் இருக்கின்றது என நம்பப்படுகிறது. இரசாயன அல்லது அணு சக்தி கொண்டு உருவாகும் இவ்வகை ஆயுதங்களால், வடகொரிய தீபகற்பத்தை சுற்றி எங்கு வேண்டுமானாலும் இலக்கை நிர்ணயிக்க முடியும்.

03. இரசாயன ஆயுதங்கள்

03. இரசாயன ஆயுதங்கள்

வடகொரியாவிடம் பெரிய அளவிலான ரசாயன ஆயுதங்களின் கையிருப்பு இருக்கிறது என்பது உலக நடுகள் அறிந்த விடயமே. உள்நாட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை ஆயுதங்கள், விமானம் அல்லது ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு இலக்குகள் குறி வைக்கப்படலாம். வட கொரியாவின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் 'தனிமை' போன்ற காரணங்கள் இவ்வகை ஆயுதங்கள் வடகொரியாவில் அதிகம் உற்பத்தி செய்யாது தடுக்கிறது.

04. ஹை-டெக் பீரங்கிகள்

04. ஹை-டெக் பீரங்கிகள்

2 மணி நேரத்தில் நகரம் ஒன்றை அழிக்கும் அளவு ராணுவ சக்தி கொண்ட அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளையும் சமாளிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கான பீரங்கிகளை, முக்கியமாக 25 மைல் தூரம் கடந்து தாக்கும் 170 எம்எம் கோக்ஸன் (170 mm Koksan) வகை பீரங்கிகளை வடகொரியா கொண்டுள்ளது.

முசுடான் ஏவுகணை

முசுடான் ஏவுகணை

அணு ஆயுத சக்திகள் கொண்ட வடகொரியாவானது, கடந்த ஆண்டு வெளிப்படையாக இரண்டு சக்திவாய்ந்த புதிய நடுத்தர தூர ஏவுகணைகளை ஒன்றின் பின் ஒன்றாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதில் பீதியான சமாச்சாரம் என்னவெனில் இந்த இரண்டு சோதனைகளுமே அமெரிக்காவின் குவாம் தளங்களை அடையும் திறன் கொண்டிருக்கலாம் மற்றும் அவைகள் வடகொரியாவின் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இடைநிலை - முசுடான் ஏவுகணையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

சுமார் 400 கிலோமீட்டர்கள்

சுமார் 400 கிலோமீட்டர்கள்

அந்த சோதனையில், முதலில் ஏவப்பட்ட ஏவுகணையானது 150 கிலோமீட்டர் (90 மைல்) கிழக்கு கடல் மீது ( ஜப்பான் கடல் ) மேலே பறக்க விட்டு சோதனை செய்யப்பட்டது. பின்பு இரண்டு மணி நேர இடைவெளிக்கு பின்பு அதே திசையில் இரண்டாவது ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர்கள் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

அடக்கி வைக்க வழிகள் ஏதுமில்லையா.?

அடக்கி வைக்க வழிகள் ஏதுமில்லையா.?

வெளிப்படையாகவே விபரீதமான சோதனைகளை நிகழ்த்தும் வடகொரியா, ரகசியமாக இன்னும் என்னென்ன சோதனைகளை நிகழ்த்தியிருக்குமோ என்பது தான் இங்கு எழும் ஒரே கேள்வி. இப்படியான தான்தோன்றி எண்ணத்தோடு திரியும் வடகொரியாவை அடக்கி வைக்க வழிகள் ஏதுமில்லையா.?

தடைகள் விதித்து ஒரு பயனும் இல்லை

தடைகள் விதித்து ஒரு பயனும் இல்லை

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தெளிவாக மீறும் வடகொரியா மீது தடைகள் விதித்து ஒரு பயனும் இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் வடகொரியா நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டுமே "வெளிப்படையாக" நான்கு முசுடான் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி அந்த நான்கிலுமே தோல்விகளை சந்தித்தது. அவைகள் ஏவப்பட்ட உடனேயே அல்லது சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

முசுடான் ஏவுகணை சோதனை மட்டுமின்றி கடந்த ஆண்டு ஜுலை மாதம் வடகொரியா மூன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் (ballistic missiles) சோதனை செய்தது. அந்த சோதனையின் மூலம், சர்வதேச சமூகம் மீதான வெளிப்படையான அத்துமீறிலையும், தெற்கு அமெரிக்காவில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்க்கான எதிர்ப்பையும் வடகொரியா ஒருசேர வெளிப்படுத்தியது.

இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை

இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை

சோதனைகுள்ளாக்கப்பட்ட மூன்று ஏவுகணைகளில் இரண்டு - ஸ்கட் ஏவுகணைகள் ஆகும். ஜப்பான் கடலில் 500 மற்றும் 600 கிலோமீட்டர் ( 310-370 மைல்) தொலைவிற்கு இவைகள் பரிசோதனை என்ற பெயரில் ஏவப்பட்டன. அதனை தொடர்ந்து ரோடோங் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ரோடோங் ஏவுகணையின் வீச்சு

ரோடோங் ஏவுகணையின் வீச்சு

வட கொரியாவின் ஸ்கட் ஏவுகணைகளானது, தென் கொரியாவின் எந்த வரம்பையும் தாக்கும் வல்லமை கொண்டது என்பதும், ரோடோங் ஏவுகணையின் வீச்சு இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவின் சேயோன்ங்யூவில் தாட் அமைப்பு (Terminal High Altitude Area Defense) இருப்பதால் வடகொரியாவின் விருப்ப இலக்காக அது கருதப்படுகிறது. அதற்கு ஸ்காட் ஏவுகணை தான் வடகொரியாவின் மிகச்சிறந்த தேர்வாகவும் இருக்கும்.

"அமெரிக்க மீதான தாக்குதலை அறிவிக்கக்கூடும்"

இவைகள் மட்டுமின்றி வடகொரியாவின் சமீபத்திய அணுசக்தி சோதனை அமெரிக்காவுடனான உறவில் பெரிய அளவிலான விரிசலை உண்டாக்கியுள்ள மறுகையில் மூன்றாம் உலகப்போரின் முனையில் நாம் உள்ளோம் என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அவரது மக்களிடையே பெருகியுள்ள அதிருப்தி ஆகியவைகளால் அமெரிக்க மீதான தாக்குதலை கிம் ஜோங்-உன் அரசு விரைவில் அறிவிக்கக்கூடும்" என்று உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் கணித்துள்ளார்.

அணுவாயுத யுத்தமொன்று நிகழந்தால்.?

அணுவாயுத யுத்தமொன்று நிகழந்தால்.?

வட கொரியா இப்பொழுது அணு ஆயுத ஏவுகணைகளைத் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. ஒருவேளை அணுவாயுத யுத்தமொன்று நிகழந்தால் என்னென்ன கொடூரங்கள் நிகழுமென்பதை நாம் நன்கு அறிவோம். உலகை அழிக்க எத்தனை அணு ஆயுதங்கள் தேவை.? அதை எந்த நாடு நிகழ்த்தும்.? என்ற கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்

Best Mobiles in India

English summary
From cyber attack to Ballistic Missiles what really North Korea have. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X