உலகை அழிக்க எத்தனை அணு ஆயுதங்கள் தேவை.? அதை எந்த நாடு நிகழ்த்தும்.?

எப்போது வேண்டுமானால் இந்த உலகம் ஒரு புதிய யுத்தத்திற்குள் தள்ளபடலாம். இன்று கிடைக்கும் உணவை குறை கூறாமல் உண்ணுங்கள், இன்று இரவு நன்றாக தூங்கிக்கொள்ளுங்கள், அணு ஆயுத சூழ நிற்கும் நமக்கு, நாளை நிச்சயமில

|

வடகொரியா வெற்றிகரமாக ஒரு சர்வதேச கண்டம் விட்டு கண்டம் தண்டி தாக்கி அழிக்கும் பெல்லிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்திய பின்னர் அணு ஆயுதங்கள் மீதான பதட்டங்கள் அதிகரித்துள்ளது.

நானே ராஜா நானே மந்திரி என்ற போக்கில் போகும் வட கொரியா அதன் இராணுவத் திறன்களை அதிகரித்து வரும் நிலைப்பாட்டில் எப்போது என்ன நடக்கும்.? எந்த நாடு எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும்.? அணு ஆயுதங்கள் வீசப்படுமா.?? எது உலகின் அதீத அணு ஆயுத பலம் கொண்ட நாடு.?

உலகை அழிக்க எத்தனை அணு ஆயுதங்கள் தேவை.? அதை எந்த நாடு நிகழ்த்தும்.?

ஒரு நாட்டை முழுமையாக காலி செய்ய எத்தனை அணு ஆயுதங்கள் தேவைப்படும்.?? அப்படியாக எந்த நாடு எத்தனை அணு ஆயுதங்கள் கொண்டுள்ளது.?? உலகப்போர் மூண்டால் இந்த உலகையே அழிக்க எத்தனை அணு ஆயுதங்கள் தேவைப்படும்.?? ஏன பல கேள்விகளும் கற்பனைகளும் நம்முள் எழுகின்றன. அத்துணைக்கும் பதில்கள் இதோ.!

அணுசக்தி ஆயுதங்களை விரிவுபடுத்துவதற்கான பணிகள்.!

அணுசக்தி ஆயுதங்களை விரிவுபடுத்துவதற்கான பணிகள்.!

உலகெங்கிலும் உள்ள அணுசக்தி ஆயுதங்களை விரிவுபடுத்துவதற்கான பணிகள் மறைத்திரைக்கு பின்னால் நடந்த காலம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் வெளிப்படையாகவே அணு ஆயுத வளர்ச்சி சார்ந்த சொல்லாட்சிக் குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு டிசம்பரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில், 2017-ஆம் ஆண்டு அணு ஆயுதங்களுக்கான ஒரு முக்கிய குறிக்கோளான ஆண்டாக இருக்குமென்று கூறினார். பின்னர், அதையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட் வழியாக தெரிவித்தார்.

உலகின் அணுவாயுதம் உடைய நாடுகள்.?

உலகின் அணுவாயுதம் உடைய நாடுகள்.?

இத்தகைய வாக்கு வன்மைகள் உலகின் அணுசக்தித் திறன் பற்றிய கவலைகளையும், போர்க் குற்றங்களுக்கான பொறுப்பற்ற தன்மையும் கிளப்பி விடுகின்றன. இவற்றுக்கிடையில், உலகின் அணுவாயுதம் உடைய நாடுகள் 15,000 போர்வீரர்களைக் கொண்டுள்ளன - அவற்றுள் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சொந்தமானவை. ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் கருத்துப்படி, இதில் 10,000-க்கும் குறைவான எண்ணைக்கையில் தான் இராணுவத் துறையில் உள்ளன. மீதம் எஞ்சியிருப்பது டிஸ்மாண்டில்மென்ட் காத்திருப்பதாக அறியப்படுகிறது.

எந்தெந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன.?

எந்தெந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன.?

அதுவொரு பக்கம் இருக்கட்டும். எந்தெந்த நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று பார்த்தால் - சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகிய ஐந்து அணு ஆயுத நாடுகள் உள்ளன. இவைகள் அணு ஆயுதங்களை தடை செய்யாத ஒப்பந்தத்தின் மூலம் இத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன.?

இந்தியாவின் நிலைப்பாடு என்ன.?

இந்த ஒப்பந்தம் ஆனது அவர்களின் ஆயுதங்களை ஒப்புக்கொள்கிறது மற்றும் சட்டப்பூர்வமாக்குகிறது, ஆனால் அவைகளை நிரந்தரமாக உருவாக்கவோ அல்லது பராமரிக்கவோ இடமளிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நான்கு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்த நான்கு நாடுகளும் கூட்டாக மொத்தம் 340 அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன.

ஆதிக்கம் செலுத்தும்  நாடுகள் எது.?

ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் எது.?

உலகெங்கிலும் மிக அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாக ரஷ்யாவும் அமெரிக்காவும் உள்ளன. இவைகள் இதர அனைத்து நாடுகளையும் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள மொத்த ஆயுதங்களின் 88% பங்கை இந்த இரண்டு நாடுகளும் கொண்டுள்ளன. ஓய்வுபெற்ற அணு ஆயுதங்களை கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை 93 சதவீதமாக அதிகரிக்கிறது.

இந்த அணு ஆயுதங்கள் எந்த அளவிலாக ஆபத்தானவை?

இந்த அணு ஆயுதங்கள் எந்த அளவிலாக ஆபத்தானவை?

தற்போதைய உலகின் 14,900 அணுசக்தி ஆயுதங்கள் ஆனது மல்லியன் கணக்கான மக்களைக் கொல்லவும், டஜன் கணக்கான நகரங்களைத் தகர்க்கவும் போதுமான சக்தியைக் கொண்டுள்ளன. டெலிகிராப் ஆராய்ச்சியின் கூற்றுப்படி, அமெரிக்க-ரஷ்ய ஆயுதங்கள் மட்டும் இணைந்து 6,600 மெகாடன்களைக் கொண்டுள்ளன என்று அறியப்படுகிறது. இது ஒவ்வொரு நிமிடமும் பூமியின் மெது விழும் மொத்த சூரிய ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

வீசப்பட்ட முதல் 24 மணி நேரத்தில்

வீசப்பட்ட முதல் 24 மணி நேரத்தில்

ந்யூக்மேப் (NukeMap) வலைத்தளத்தின்படி, தற்போது அமெரிக்காவிடம் இதுற்கும் பி-83 தான் மிகப்பெரிய அணு ஆயுத குண்டாகும். இது வீசப்பட்டால், முதல் 24 மணி நேரத்தில் 1.4 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள். வெப்ப கதிர்வீச்சின்ன ஆரம் ஆனது 13கிமீ அடைந்தது மேலும் 3.7 மில்லியன் மக்கள் காயமடைவார்கள்.

மணிக்கு 15 மீட்டர் வேகத்தில் காற்றில் 7880 கிமீ வரை பரவும்

மணிக்கு 15 மீட்டர் வேகத்தில் காற்றில் 7880 கிமீ வரை பரவும்

அதேபோல், "சார் பாம்பா" என்பது மிகப்பெரிய சோவியத் அணு ஆயுத குண்டு ஆகும். நியூயார்க்கில் இந்த குண்டு வீழ்ச்சியடைந்தால், அது 7.6 மில்லியன் மக்களைக் கொன்று குவிக்கும் மற்றும் 4.2 மில்லியன் மக்களை காயமடைய செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுத வீழ்ச்சியொன்று மணிக்கு 15 மீட்டர் வேகத்தில் காற்றில் 7880 கிமீ வரை பரவி மில்லியனுக்கும் மேலான மக்களை பாதிக்கும்.

நாளை நிச்சயமில்லை.!

நாளை நிச்சயமில்லை.!

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பல ஆயுதங்கள் உடன்படிக்கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன, அவைகள் எண்ணிக்கை, எவ்வகையான யுத்தங்களுக்கானது மற்றும் ஏவப்படும் முறை வரம்புகள் ஆகிய பிரிவுகளின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன. டிரம்ப் மற்றும் புட்டின்கள் போன்றவர்களின் சமாதான போக்கு எப்போ து வேண்டுமானாலும் உடையலாம் முறையே கட்டுப்பாடுகள் சார்ந்த உடன்படிக்கைகளும் உடைந்து எப்போது வேண்டுமானால் இந்த உலகம் ஒரு புதிய யுத்தத்திற்குள் தள்ளபடலாம். இன்று கிடைக்கும் உணவை குறை கூறாமல் உண்ணுங்கள், இன்று இரவு நன்றாக தூங்கிக்கொள்ளுங்கள், அணு ஆயுத சூழ நிற்கும் நமக்கு, நாளை நிச்சயமில்லை.!

Best Mobiles in India

English summary
Nuclear weapon technology and its World politics. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X