Home
Scitech

"நாசமாப்போச்சு போ" என நாசாவை புலம்ப விட்ட எலான் மஸ்க்; அப்படி என்ன தான் ஆச்சு.?

அப்படியாக எலான் மஸ்க், என்ன அறிவிப்பை நிகழ்த்தினார்.?

By Muthuraj

உள்ளூர் கம்பெனியாக இருந்தாலும் சரி, உலகின் மாபெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி, வழக்கமாக ஒரு வெற்றிகரமான ப்ராஜெக்ட்டிற்கு பின்னர், அடுத்த என்ன செய்யலாம் என்பதை யோசிக்கிறோம், விரைவில் அறியப்படுத்துவோம் என்று கூறுவார்கள், அல்லது அடுத்த ப்ராஜெக்ட் (திட்டம்) இதுதான், இதை எல்லாம் செய்யப்போகிறோம் என்பதை அறிவிப்பார்கள்.

ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கே சவால் விடும் எலான் மஸ்க்கின் அறிவிப்போ.. "அடங்கப்ப்பா உலக மகா வியாபாரி டா நீ" என்கிற பெருமூச்சுகளை கிளப்பும் வண்ணம் உள்ளது. அப்படியாக எலான் மஸ்க், என்ன அறிவிப்பை நிகழ்த்தினார்.?

கேட்டதும் ஆடிப்போனது

கேட்டதும் ஆடிப்போனது "அரங்கம்".!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அப்டேட்டட் வெர்ஷன் ஆன பால்கான் 9 ராக்கெட்டின் உதவியுடன், பங்களாதேஷின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து, ஸ்பேஸ்எக்ஸ்-ன் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிய விவரத்தை அறிவித்தார். கேட்டதும் ஆடிப்போனது "அரங்கம்".!

இது வெறும் டீஸர் தான் டா கண்ணு.!

இது வெறும் டீஸர் தான் டா கண்ணு.!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் "பிரபல" பால்கான் 9 ராக்கெட்டில் "பிளாக் 5" பூஸ்டர் மேம்படுத்தல் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதன் முதல் விண்வெளி பயணமானது நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கியது. சுமந்து சென்ற பங்களாதேஷ் நாட்டின் செயற்கைகோளை வெற்றிகரமான விண்வெளிக்குள் செலுத்திய பின்னர், சுமார் எட்டு நிமிடங்கள் கழித்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு ஆளில்லாத மேடையில் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் (ரீயூசபிள் ராக்கெட் பாகம்) வெற்றிகரமாக தரை இறங்கியது. இது நடந்தது, இனி நடக்க போவது என்ன .?

துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தி.!

துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தி.!

சமீபத்திய வெற்றியை தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ்-ன் அடுத்தக்கட்ட திட்டம் என்ன.? என்ன வகை ராக்கெட்.? எந்த நாட்டின் செயற்கைகோள்.? என்கிற அறிவிப்பு வெளியாகும் என்கிற துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தியே கிடைத்தது. ஆம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் என்னென்ன செய்யப்போகிறது.? எத்தனை ஸ்பேஸ் மிஷன்களை விண்ணில் ஏவவுள்ளது என்பதை பற்றிய அறிவிப்பை எலான் மஸ்க் வழங்கினார்.

சந்திரன் அப்புறம் செவ்வாய் அப்புறம் ஏலியன்ஸ்.!

சந்திரன் அப்புறம் செவ்வாய் அப்புறம் ஏலியன்ஸ்.!

அறிவிப்பின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மிஷன்களை, ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்த்தவுள்ளதாம். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் எனில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ஸ்பேஸ்எக்ஸ் 30 முதல் 40 க்கும் மேற்பட்ட ராக்கெட் கருவிகளை கட்டமைக்கப்படும். அதனை தொடர்ந்து, பிக் பால்கான் ராக்கெட் ஆனது பால்கான் ராக்கெட்டை மிஞ்சும் மற்றும் அதன் ஓய்வை உறுதி செய்யும். எல்லாவற்றிக்கும் மேலாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது - சந்திரன், செவ்வாய் மற்றும் இறுதியில் வெளிப்புறக் கிரகங்களையும் அடையும்.

இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்.?!

இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்.?!

"30- 40 ராக்கெட்டில் 300 மிஷன்களா.? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்" என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ்களுக்கு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ரீயூசபிள் ராக்கெட் பற்றிய விவரமொன்றை அளிக்க விரும்புகிறேன். சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட "பிளாக் -5" பூஸ்டர் ஆனது, இன்னும் சில மேம்பாடுகளை பெறும் பட்சத்தில், அது 10 அல்லது அதற்கு மேற்பட்ட விண்வெளி ஏவல்களை நிகழ்த்த உதவும். ஒரு கட்டத்தில் அவைகள் மறுமுறை பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலுக்குள் வீழ்த்தப்படும். இந்த கணக்கின் கீழ் பார்த்தல், 30 - 40 ராக்கெட்கள் ஆனது 300 மிஷன்களுக்கு மிகவும் போதுமானது என்பது புரியும்.

பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும்; எப்படி.?

பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும்; எப்படி.?

பால்கான் 9 ராக்கெட்டின் பிரதான நோக்கமே, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதே ஆகும். வரும் காலங்களில் பால்கான் 9 மீது நிகழ்த்தப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்பாடுகள் ஆனது, அதை மீண்டும் - மீண்டும் பயன்படுத்த மிக எளிமையான தன்மையை உருவாக்கி கொடுக்கும், அதன் விளைவாக பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். வேலைப்பளு குறையும் பட்சத்தில், இதர விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்.

சாதாரண விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஓகே, செவ்வாய் சாத்தியமா.?

சாதாரண விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஓகே, செவ்வாய் சாத்தியமா.?

செவ்வாய் போன்ற தொலைதூர பயணங்களுக்கு நிறுவனத்தின் பிக் பால்கான் ராக்கெட் பயன்படுத்தப்படும். இம்மாதிரியான நீண்ட நெடிய விண்வெளி பயணமானது, சாத்தியமாக 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படவேண்டும் என்கிற இலக்கை எலான் மஸ்க் கொண்டுள்ளார். அதை உறுதி செய்யும் வண்ணம், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் உள்ள டெர்மினல் தீவில், பிக் பால்கான் ராக்கெட் ஒன்றை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ்-ஐ அனுமதிப்பதற்கு, எல்ஏ போர்டு ஆஃப் ஹார்பர் கமிஷனர்ஸ் ஒருமித்த ஒப்புதலைக் கொடுத்துள்ளது. எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, இந்த பெரிய மற்றும் புதிய ராக்கெட் ஆனது சுமார் 350 அடி உயரமும், 30 அடி நீளமும் இருக்கும்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
ஸ்பேஸ்எக்ஸ்-ன் தன்னம்பிக்கை மீது சந்தேகமா.? வேண்டாம்.!

ஸ்பேஸ்எக்ஸ்-ன் தன்னம்பிக்கை மீது சந்தேகமா.? வேண்டாம்.!

கடந்த மாதம், நாசாவின் அடுத்த பிளான்ட்-ஹண்ட் திட்டமான, டிரான்சிட்டிங் எக்ஸோபிளான்ட் சர்வே சேட்டிலைட் (Transiting Exoplanet Survey Satellite - Tess) ஆனது புளோரிடாவில் உள்ள கேப் கானேல்ரல் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது, அதை ஏவியது ஸ்பேஸ்எக்ஸ்-ன் பால்கான் 9 ராக்கெட் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாசாவின் 'டெஸ்' செயற்கைகோள் ஆனது வாழ்க்கையை ஆதரிக்கக்கூடிய இதர கிரங்கள் உட்பட, அருகிலுள்ள நட்சத்திரங்களைத் தாண்டி ஆயிரக்கணக்கான புதிய எக்ஸோபிளான்ட்களை கண்டுப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
SpaceX set for over 300 missions in the next 5 years, says Elon Musk. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X