சேட்டிலைட் போன் என்றால் என்ன.? அதன் அம்சங்கள் என்னென்ன.?

|

ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி என்பது தொலைதூர செயற்கைக்கோள்களை இணைக்கும் திறன் கொண்ட ஒரு தொலைபேசி ஆகும். தரைவழி மொபைல் போன்களைப் போலவே, அவை குரல் மற்றும் குறுந்தகவல் சேவை மற்றும் குறைந்த அலைவரிசை இணைய அணுகலுடன் இணைக்கப்படலாம்.

உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள்களை நேரடியாக இணைத்துள்ளதால், செயற்கைக்கோள் தொலைபேசிகள் எந்தவொரு இடத்திலுமே இணைக்கப்படலாம், மேலும் அவை பிராந்திய மொபைல் நெட்வொர்க்குகள் சார்ந்தவை அல்ல. இவ்வகையான சேட்டிலைட் போன்கள் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்னவென்று பார்த்தால்..

பரந்த பரப்பளவை வழங்கும் திறன்

பரந்த பரப்பளவை வழங்கும் திறன்

அடிப்படை தொலைபேசிகளுக்கான அம்சங்களைக் கொண்டிருக்கிறது ஆனாலும் கூயோட இவைகள் வழக்கமான செல்போன்களை விட கனமான மற்றும் பெரிதாக இருக்கும். அதே சமயம் இவைகள் வழக்கமான மொபைல்களை விட பரந்த பரப்பளவை வழங்கும் திறன் கொண்டவைகள் ஆகும்.

தகவல் பரிமாற்றத்தில் தாமதம்

தகவல் பரிமாற்றத்தில் தாமதம்

சீரான செயல்திறன் வழங்கும். தரைவழி தொலைபேசி சேவைகளுடன் ஒப்பிடுகையில், குரல் தரம் குறைவாகவே இருக்கும், மேலும் சில சமயங்களிளில் தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படலாம். இதன் தொலைபேசி எண்ணை காலம் முழுதும் மாற்ற இயலாது.

அதிக விலை

அதிக விலை

இதற்கு எந்த நிறுவல் அல்லது அமைப்பும் தேவையில்லை. மறுபக்கம் இது எந்தவொரு பிற வகை தொலைபேசிகளை விடவும் அதிக விலை கொண்டிருக்கும்.

இணைய அணுகல்

இணைய அணுகல்

ஆக பெரிய வெளிப்புற ஆண்டெனா மற்றும் உள் ஆண்டெனாக்கள் இதற்கு தேவையில்லை. இக்கருவிகளில் இணைய அணுகல், குறைந்த தரவு பட்டையகலமும் உள்ளது.

கட்டுப்பாடுகளும் உள்ளன

கட்டுப்பாடுகளும் உள்ளன

இதை பயன்படுத்த உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி தேவைப்படலாம் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளும் உள்ளன. பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில், தேவைகளுக்காக இணைக்கப்படுவதில் தான் இதன் அதிகபட்ச பயனே உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
What does Satellite Phone mean. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X