இஸ்ரோ ரெடி; மொத்தம் 14 நாட்கள் வாய்ப்பிளக்க நாசாவும் வழக்கம் போல ரெடி.!

  சைக்கிள் கேரியர்களிலும், மாட்டு வண்டிகளிலும் ராக்கெட் பாகங்களை சுமந்து கொண்டுபோன காட்டுவாசி கூட்டம் என்பது தொடங்கி மாடு மேய்ப்பவர்களுக்கு எலைட் ஸ்பேஸ் கிளப்பில் இடமா.? என்பது வரையிலாக நமது இஸ்ரோவின் வளர்ச்சியை தொடர்ச்சியான முறையில் விமர்சிக்காத நாடுகளே இல்லை எனலாம். அவ்வளவும் பொறாமை என்பது தன உண்மை.!

  இஸ்ரோ ரெடி; மொத்தம் 14 நாட்கள் வாய்ப்பிளக்க நாசாவும் வழக்கம் போல ரெடி!

  ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ். செய்தி தாள்களில் 'கார்ட்டூன்' போட்டு கேலிசெய்த நாடுகளெல்லாம் இன்று இஸ்ரோவின் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளன. ஆம் இஸ்ரோ எனும் நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது நம் நாட்டிற்கான செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதில் மட்டுமின்றி, பிற உலகநாடுகளின் செயற்கை கோள்களை 'முதுகில் சுமந்து' கொண்டு விண்ணுக்குள் நுழைவதிலும் அசைக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளது, படித்துக்கொண்டே இருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அமெரிக்கா நாசா உட்பட.!

  பல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு இஸ்ரோ ஒரு 'சிம்மசொப்பனமாய்' விளங்குகிறது என்பதற்கு அமெரிக்கா தொடங்கி கனடா, பிரான்ஸ், கொரியா, துருக்கி என பல நாடுகள் இஸ்ரோவிடம் 'உதவிகேட்டு' ஒப்பந்தம் வைத்துக் கொண்டுள்ளதே சான்றாகும்.

  மேன்மேலும் வாயை பிளக்க இருக்கின்றன.!

  தோற்கடிக்க முடியாத, முந்திச்செல்ல முடியாத திறமைகளையும் சாதனைகளையும் தன்வசம் கொண்டுள்ள இஸ்ரோவை கண்டு பிற உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் 'மேன்மேலும் வாயை பிளக்க இருக்கின்றன' அப்படியானதொரு நிகழ்விற்காக இஸ்ரோ முழுவீச்சில் தயாராகவுள்ளது. அதென்னது.?

  மிக முக்கியமானதொரு காரணம் - சந்திராயன் 1

  உலக நாடுகளின் கவனம் இஸ்ரோவின் பக்கம் திரும்ப பல காரணங்கள் இருப்பினும் அதில் மிக முக்கியமானதொரு காரணம் தான் - சந்திராயன் 1. கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நிலவின் பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்யும் நோக்கதிற்காக விண்ணில் செலுத்தப்பட்டு, வெற்றியும் அடைந்தது.

  அப்படியென்ன மிகப்பெரிய ஆராய்ச்சி.?

  அதனை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க நிலவு பயணமான சந்திரயான் -2 ஆனதின் முதல் சந்திரன் தரையிறக்கத்திற்கான இடம் மற்றும் நாள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் சந்திர பயணம் இல்லை என்றாலும் கூட இது நிச்சயமாக இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய சந்திர ஆராய்ச்சி திட்டமாக இன்றுவரை உள்ளது. அப்படியென்ன மிகப்பெரிய ஆராய்ச்சி.?

  ஆகப்பெரிய நிலவு கண்டுபிடிப்பு

  83 மில்லியன் டாலர்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பட்ட சந்திரயான் -1 ஆனது சந்திர சுற்றுப்பாதையை அமைத்து, சந்திர கிரகத்தின் மீது சில "மாக்மடிக் நீர்" இருப்பை கண்டுபிடித்தது. சந்திராயன் 2 பயணமும் ஆகப்பெரிய நிலவு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வண்ணம் வேறு எந்த நாட்டின் நிலவு பயணமும் தரையிறங்காத நிலவு பகுதியில் தடம்பதிக்கவுள்ளது.

  இரு இடங்கள் அடையாளம்.!

  இஸ்ரோவின் கூற்றுப்படி "நாங்கள் இரு இடங்களை அடையாளம் கண்டுள்ளோம், அதில் ஒரு இடம் தரையிறக்கத்திற்காக தேர்ந்தெடுகப்படும்". ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தொடங்கப்படும் சந்திரயான் -2 ஆனது சந்திரனின் கோளப்பாதையில் சுற்றுப்பாதையை அமைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் எடுக்கும்.

  ஜிஎஸ்எல்வி மார்க் 2 கொண்டு விண்ணில் செலுத்தப்படும்

  சுமார் 3290 கிலோ எடை அளவிலான விண்கலத்திற்கான கேரியர் கொண்டுள்ளதால் (கனரக சுமை) இது ஜிஎஸ்எல்வி மார்க் 2 கொண்டு விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-1 ஆனது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு சந்திர நாள் அல்லது 14 பூமி நாள்

  சந்திரனின் மேற்பரப்பில் ஒரு சந்திர நாள் அல்லது 14 பூமி நாட்களையோ செலவழித்து சுமார் 150-200 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாக சந்திராயன் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் இது பல சோதனைகள் மற்றும் சந்திர மேற்பரப்பில் உள்ள இரசாயனங்களை பகுப்பாய்வு செய்யும்.

  நிலப்பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு..

  இஸ்ரோவில் உள்ள குழுவானது தற்போது மூன்று ஆளில்லா வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு ஆர்பிட்டர் கிராப்ட் மற்றும் ரோவர் ஆனது சந்திரனின் மேற்பரப்புக்கு மேலே உள்ள ஒரு சுற்றுப்பாதையில் ஆய்வு செய்ய மீதமுள்ள ஒரு லேண்டர் நிலவின் நிலப்பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

  மூன்று ஆளில்லா வாகனங்கள்

  இஸ்ரோவில் உள்ள குழுவானது தற்போது மூன்று ஆளில்லா வாகனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு ஆர்பிட்டர் கிராப்ட் ஆனது சந்திரனின் மேற்பரப்புக்கு மேலே உள்ள ஒரு சுற்றுப்பாதையில் ஆய்வு செய்ய மீதமுள்ள ரோவர் மற்றும் ஒரு லேண்டர் ஆனது நிலவின் நிலப்பகுதியில் பாதுகாப்பாக தரையிறக்கப்படும்

  சந்திர மண்ணின் பகுப்பாய்வு இன்னும் சிறப்பான முறையில்.!

  நிலவில் தரையிறங்கும் ஆறு சக்கர ரோவர் ஆனது சரிபாதி தன்னாட்சி அமைப்பின்கீழ் தரையில் இருந்து கிடைக்கும் கட்டளைகளின் கீழ் இயங்கும். ரோவர் மீது பொறுத்தப்டுள்ள சாதனங்களானது சந்திர மேற்பரப்பு சார்ந்த படிப்பினைகளை நிகழ்த்தி, அந்த தரவுகளை பூமிக்கு அனுப்பும். வைகளை கொண்டு சந்திர மண்ணின் பகுப்பாய்வு இன்னும் சிறப்பான முறையில் நிகழ்த்தப்படும்.

  ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 10 ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்.!?

  1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து என்பது தான் நிதர்சனம். 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவில் முதல் மனித காலடியை எடுத்து வைத்து அந்த விண்வெளி யுத்ததில் வெற்றி அடைந்தது அமெரிக்கா. அதன் பின் தான் மெல்ல மெல்ல கிளம்பின சந்தேகங்கள். அமெரிக்காவின் அப்பலோ விண்கலங்கள், அதன் வீர்ர்கள், அவர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாம் பொய். அவைகள் எல்லாம் படமாக்கப் பட்டவைகள் என்று புரளிகள் கிளம்பின (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!

  பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான ஒரு சதியாலோசனை கோட்பாடு பற்றியது தான் இந்த தொகுப்பு..! அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  நிலவு இயற்கையானதா..? பின் ஏன் இவ்வளவு விசித்திரமானதாக இருக்கிறது.?

  உங்களுக்கு தெரியுமா..? நிலவின் விசித்திரமான அறிவியல் ஆனது பல வகையான முறையில் மனித வாழ்வை பாதித்து கொண்டே இருக்கிறது. மனித இனம் சென்று வந்த, மிக அருகாமையில் உள்ள வேற்று கிரகமாக - நிலவு இருப்பினும் கூட, இன்றுவரையிலாக நிலவு, பல விசித்திரங்களையும், குழப்பமான மர்மங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டே தான் இருக்கிறது. நிலவு அப்படியாக தன்னுள் என்னதான் கொண்டுள்ளது, அதன் மிகவும் விசித்திரமான ரகசியங்களை என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  நமக்கு தெரியாத 'இரண்டாம் நிலவொன்று' இருக்கிறது..!!

  நிலா - உலகில் உள்ள எல்லோருக்குமே பிடித்த ஒன்று. நமக்கு தெரிந்த நிலவானது - இரவில் வானில் மிளிரும் ஒரு பிரகாசமான கிரகபொருள், ஆரம்பநிலை வானியலாளர்களின் ஆராய்சிகளுக்கு மிகவும் உதவும் ஒரு விண்வெளி பொருள், இன்றைய தேதிப்படி மனித காலடி பதிவாக்கப்பட்ட ஒரே வேற்று கிரகம், அவ்வளவு தானே நிலவைப் பற்றி நமக்கு தெரியும்..!!?? சிலருக்கு நிலவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம். ஆனால், பூமி கிரகத்திற்கு இரண்டாம் நிலவொன்று இருக்கிறது. அது நம்மில் பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  சந்திர கிரகம் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்தும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

  நம் கண்களுக்கு வேண்டுமானால், பூமியானது நமக்கு மிகவும் நெருக்கமான மற்றும் புரிதல்கள் நிறைந்த ஒரு வாழ்விடமாக இருக்கலாம். ஆனால் அறிவியல் கண்கொண்டு பார்த்தால் - விண்கல்லாக இருந்தாலும் சரி, நட்சத்திரமாக இருந்தாலும் சரி - பூமி உட்பட இந்த அண்டத்தில் மிதக்கும் அனைத்துமே ஒரு விண்வெளி பொருட்கள் தான். அப்படியான, அருகாமை விண்பொருட்களான பூமி மற்றும் சந்திரன் நிகழ்த்திக்கொள்ளப்போகும் ஒரு பேரழிவு மோதல் நிகழ்வு பற்றிய திகிலூட்டும் ஆய்வு தொகுப்பே இது (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும், ஒரு காலத்தில் நிலவு..!

  நாசாவின் சமீபத்திய ஆய்வின் படி, மூன்று முதல் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், சந்திரன் ஆனது தற்போது இருப்பதை போலின்றி தாக்கல் உரிய சூழ்நிலையை கொண்டிருந்ததாக அறியப்பட்டுள்ளது. அதாவது நிலவு ஒரு காலத்தில் தீவிர எரிமலை செயல்திறன் கொண்டிருந்ததாகவும், அவைகள் உருகிய வாயுக்களை நிலவின் மேற்பரப்பில் உமிழ்ந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது (மேலும் தொடர்ந்து படிக்க)..!

  பீதியடைந்த பாக்; இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி என்ன?

  ஒருபக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, உலக விண்வெளி வரலாற்றில் முக்கியமானதொரு மைல்கல்லை எட்டிப்பிடிக்கவும், மறுபக்கம் பாகிஸ்தான் ஆனது இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் ஏவுதல் மீது சில ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.

  இந்தியா என்ன செய்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் பாகிஸ்தானின் வேலை என்று கண்மூடித்தனமாக இந்த விடயத்தை கையாள முடியவில்லை. ஏனெனில் இஸ்ரோ பலமுறை, பலவகையான செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது. அதற்கெல்லாம் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் முன்வைக்கவில்லை.

  பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

  இந்த குறிப்பிட்ட செயற்கைகோள் மீது பாகிஸ்தான் அதன் ஆட்சேபனைகளை தெரிவிக்கிறதென்றால் இதில் ஏதோவொரு விடயம் மறைந்திருக்கிறதென்று அர்த்தம். அது என்ன.? வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் 100-வது செயற்கைகளின் உண்மையான பின்னணி தான் என்ன.? பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றசாட்டு தான் என்ன.?

  எதிர்பார்ப்புகளை துளியும் சிதைக்காத இஸ்ரோ.!

  2018-ஆம் ஆண்டில் இந்தியா செலுத்தும் முதல் செயற்கைக்கோள் என்பதால் காரோட்டோசாட்-2 மீதும் அதன் துல்லியமான வெற்றி மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை துளியும் சிதைக்காமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் நிறுவனமான இஸ்ரோ கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டின் உதவியுடன் காரோட்டோசாட்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

  சரியாக காலை 09:29 மணிக்கு.!

  இந்த "பிஎஸ்எல்வி-சி40 / காரோசாட்-2 சீரிஸ் சேட்டிலைட் மிஷன்" ஆனது கடந்த ஜனவரி 12, 2018 அன்று, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக காலை 09:29 மணிக்கு கிளம்பி வெற்றிகரமாக விண்வெளிக்கு நுழைந்தது. இந்த ஏவலை தொடர்ந்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆன முகமது ஃபைசல் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

  இரட்டை இயல்பு கொண்டுள்ளது.!

  அப்போது அவர் அனைத்து விண்வெளி தொழில்நுட்பங்களுமே "இயல்பான இரட்டை பயன்பாடு" கொண்டுள்ளது என்ற வார்த்தையை அழுத்தமாக கூறினார். அதாவது, இஸ்ரோவின் 100-வைத்து செயற்கைகோள் ஆனது இரட்டை இயல்பு கொண்டுள்ளதென்ற ஆட்சேபனையை முன்வைத்தார்.

  பிராந்திய மூலோபாய திடநிலையில் ஒரு எதிர்மறை தாக்கம்.!

  "பிஎஸ்எல்வி-சி40 / காரோசாட்-2 சீரிஸ் சேட்டிலைட்" என்கிற மிஷன் ஆனது இராணுவ மற்றும் பொதுமக்கள் என்கிற இரட்டை பயன் நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், இது "பிராந்திய மூலோபாய திடநிலையில் ஒரு எதிர்மறை தாக்கத்தை" ஏற்படுத்தக்கூடும் என்று முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

  காரோசாட்-2 செயற்கைகோளின் பணிகள் என்னென்ன.?

  காரோசாட்-2 செயற்கைகோள் ஆனது நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடுகள், கடலோர நில பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை, பயன்பாட்டு மேலாண்மை சாலை வலைப்பின்னல் கண்காணிப்பு, நீர் விநியோகம், நில அமைப்பு வரைபடங்களைப் உருவாக்க , புவியியல் மற்றும் மனிதர்களால் உருவாக்கம் பெற்ற அம்சங்கள் மற்றும் பல்வேறு நிலத் தகவல் அமைப்பு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு ஆகிய விடயங்களுக்கு துணை புரியுமென்பது குறிப்பிடத்தக்கது.

  இயற்கையாகவே இரட்டை பயன்பாட்டுத்தன்மை.!

  "வெளியான ஊடக தவவல்களின்படி, பூமி மீதான கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதிக்குள் இந்தியா தொடங்கவுள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட எல்லா விண்வெளி தொழில்நுட்பங்களும் இயற்கையாகவே இரட்டை பயன்பாட்டுத்தன்மை கொண்டவைகள். அது பொதுமக்கள் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்" என்று ஃபைசல் கூறியுள்ளார்.

  திடீரென்று இராணுவ திறன்களை வளர்த்தெடுக்கும்.!

  மேலும் "இம்மாதிரியான இரட்டை தன்மை கொண்ட செயற்கைக்கோள்கள் ஆனது திடீரென்று இராணுவ திறன்களை வளர்த்தெடுக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடும்" என்றும் முகமது ஃபைசல் கூறியுள்ளார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Chandrayaan-II landing site identified; rover to spend 14 days on lunar surface. Read more about this about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more