Home
Miscellaneous

நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!

பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான ஒரு சதியாலோசனை கோட்பாடு பற்றியது தான் இந்த தொகுப்பு..!

அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன..!

கண்காணிக்கும் தளம் :

கண்காணிக்கும் தளம் :

ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர்.

நிரூபிப்பது :

நிரூபிப்பது :

"நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட்..!

7 ஆதாரங்கள் :

7 ஆதாரங்கள் :

நிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..!

ஆதாரம் #1 :

ஆதாரம் #1 :

1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது.

அதிர்வொலி :

அதிர்வொலி :

அந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது. மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான நீரியல் தடை :

பிரம்மாண்டமான நீரியல் தடை :

மோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.!

ஆதாரம் #2 :

ஆதாரம் #2 :

சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும்..!

மேல் பகுதி :

மேல் பகுதி :

முதலில் சோவியத் அறிவியல் அகாடமி,நிலவின் மேல் பகுதி மிகவும் தடினமாக இருப்பது எதனால்?, உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன? போன்ற பல கேள்விகளை கிளப்பியது.

பதப்படுத்தப்பட்ட உலோகங்கள் :

பதப்படுத்தப்பட்ட உலோகங்கள் :

சில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

அணுசக்தி :

அணுசக்தி :

யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..?

கதிரியக்க மாழை :

கதிரியக்க மாழை :

அணு உலை தயாரிப்பு மற்றும் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது..? இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #3 :

ஆதாரம் #3 :

பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது.

குறைந்த தீவிரம் :

குறைந்த தீவிரம் :

நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறர்கள்.

தொடர் புள்ளிகள் :

தொடர் புள்ளிகள் :

நிலவின் பெருந்திரள் செறிவானது மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.

ஆதாரம் #4 :

ஆதாரம் #4 :

சந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது..!

 800,000 ஆண்டுகள் :

800,000 ஆண்டுகள் :

விஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..!

 ஆதாரம் #5 :

ஆதாரம் #5 :

நிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்..!

பிற நிலவின் பண்பு :

பிற நிலவின் பண்பு :

அதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை.

ஒரு புறம் மட்டும் :

ஒரு புறம் மட்டும் :

எல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.

ஆதாரம் #6 :

ஆதாரம் #6 :

சில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் "டைட்டானியம் மிகுதி" பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விண்கலம் தயாரிக்க :

விண்கலம் தயாரிக்க :

பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

உருவானது எப்படி :

உருவானது எப்படி :

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் டைட்டானியம் உருவானது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.

ஆதாரம் #7 :

ஆதாரம் #7 :

நிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது.

புதிர் :

புதிர் :

நிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான்..!

நூற்றுக்கணக்கான கேள்வி :

நூற்றுக்கணக்கான கேள்வி :

இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..!

Best Mobiles in India

English summary
7 Irregularities that suggest Earth’s Moon was engineered. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X