வெளியே சொல்லக்கூடாத உண்மை.. போட்டுடைத்த விஞ்ஞானிகள்.. பூமியின் முடிவு பற்றி கிடைத்த திகில் கிளப்பும் ஆதாரம்!

|

உங்களில் யாருக்காவது பூமியின் வயது (Age Of Earth) என்னவென்று தெரியுமா? அது 4.543 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

அறியாதோர்களுக்கு - 1 மில்லியன் (Million) என்றால் 10 லட்சம் ஆகும்; 1 பில்லியன் (Billion) என்றால் 100 கோடி ஆகும்!

ஆக 73 வயதை கூட தாண்டாத (அதாவது 2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கூட தாண்டாத) பெரும்பாலான மனிதர்கள் வாழும் இந்த பூமியின் வயது - 454 கோடி ஆண்டுகள் (454 Crore Years) ஆகும்.

இந்த இடத்தில் உங்களை அறியாமலேயே உங்களுக்குள் பல வகையான கேள்விகள் எழலாம்!

மண்டைக்குள் ஓடும் ஆயிரம் கேள்விகள்!

மண்டைக்குள் ஓடும் ஆயிரம் கேள்விகள்!

"பூமிக்கு இவ்வளவு வயது ஆகிறதே.. அது எப்போது மரணிக்கும்?", "பூமியின் மரணம் எப்படி இருக்கும்?", பூமியின் அழிவிற்கு எது முக்கியமான காரணமாக இருக்கும்?" என பல கேள்விகள் உங்கள் மண்டைக்குள் ஓடலாம்.

மேலோட்டமான விவரங்களை அறிந்த நமக்கே இத்தனை கேள்விகளை கேட்க தோன்றுகிறது என்றால், பல அப்பட்டமான அறிவியல் உண்மைகளை (Science Facts) அறிந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மண்டைக்குள் எத்தனை ஆயிரம் கேள்விகள் ஓடும்?

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

விபரீதமான ஆய்வு!

விபரீதமான ஆய்வு!

அந்த கேள்விகளுக்கான பதில்களை தேடும் பல ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளன மற்றும் இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றன.

அப்படியானதொரு ஆய்வில், அதாவது "பூமி எப்படி அழியும்" என்கிற விபரீதமான ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு ஒரு திகிலூட்டும் ஆதாரம் கிடைத்துள்ளது.

அந்த ஆதாரம், நமது பூமியும் கூட இப்படித்தான் அழியுமோ என்பதை நிரூபிக்க போதுமானதாக இருப்பது போல் தெரிகிறது!

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள்!

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள்!

விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ள "அந்த ஆதாரத்தை" புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கெப்லர்-1658பி (Kepler 1658b) என்றால் என்ன, எக்ஸோபிளானெட் (Exoplanet) என்றால் என்ன? என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

அறியாதோர்களுக்கு எக்ஸோப்ளானெட் என்றால் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள் எல்லாமே எக்ஸோப்ளானெட்கள் என்று தான் அழைக்கப்படுகின்றன.

அப்படியான எக்ஸோப்ளானெட்களில், கடந்த 2009 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கெப்லர்-1658பி என்கிற கிரகமும் அடங்கும். அந்த கிரகம் தான் - பூமியின் அழிவை பிரதிபலிக்க போகும் ஆதாரம் ஆகும்!

செவ்வாய் கிரகத்தில் வீசப்படும் ட்யூப்கள்.. அதற்குள் என்ன இருக்கிறது? NASA-வின் செவ்வாய் கிரகத்தில் வீசப்படும் ட்யூப்கள்.. அதற்குள் என்ன இருக்கிறது? NASA-வின் "அடேங்கப்பா" பிளான்!

மோதி, அழிந்தும் போகும்!

மோதி, அழிந்தும் போகும்!

நமது கிரகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு ஆய்வின் போது - முதன் முறையாக - அழிவை நோக்கி நகரும் ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

அதுதான் - கெப்லர்-1658பி ஆகும். இந்த கிரகம் தனக்கான சூரியனை (Host Sun) சுற்றிய ஒரு சிதைவு சுற்றுப்பாதையில் (Decaying Orbit) உள்ளது. ஒருகட்டத்தில் அந்த கிரகம், தனது "மிகவும் வயதான" சூரியனோடு மோதி, அழிந்தும் போக உள்ளது.

பூமியும் கூட இப்படித்தான் அழியும்?

பூமியும் கூட இப்படித்தான் அழியும்?

ஆக ஒரு கிரகத்தின் அழிவு, அந்த கிரகத்தின் அருகில் இருக்கும் சூரியனால் தான் ஏற்படும் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது; அதே சமயம் நமது பூமியும் கூட இப்படித்தான் அழியும் என்கிற "தோராயமான" உண்மையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (European Space Agency - ESA) முந்தைய ஆய்வொன்றின்படி, சூரிய மண்டலமானது (Solar system) அதன் "கடைசி ஆண்டுகளில்" இருக்கும் போது, நமது சூரியன் தன் அருகிலுள்ள கிரகங்களை "மூழ்கடிக்கும்".

அதவாது மெர்குரி (Mercury), வீனஸ் (Venus) மற்றும் பூமி (Earth) போன்ற கிரகங்களை விழுங்குமாம். அதே ஆய்வு - சூரியன், நமது பூமியை எப்படி விழுங்கும் என்பதையும் விவரிக்கிறது!

NASA-வின் கண்களில் மீண்டும் சிக்கிய NASA-வின் கண்களில் மீண்டும் சிக்கிய "கோஸ்ட்".. விஞ்ஞானிகளை குழப்பும் 71 ஆண்டுகால மர்மம்!

சிவப்பு ராட்சதமாக மாறும்!

சிவப்பு ராட்சதமாக மாறும்!

எதிர்காலத்தில், அதாவது ஏறக்குறைய 8 பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் சூரியன் அதன் உச்சக்கட்ட வெப்பநிலையை (Peak temperatures) அடையுமாம்.

அதன் பிறகு சூரியன், தனது மேற்பரப்பு வெப்பநிலையை (Surface temperature) குறைத்துகொள்ளும் மறுகையில் அதன் அளவை அதிகரிக்குமாம்.

இந்த விரிவாக்கத்தின் போது சூரியன் - ஒரு சிவப்பு ராட்சதமாக (Red Giant) மாறுமாம்; பூமியையும் சேர்த்து தன் அருகிலுள்ள கிரகங்களை விழுங்குமாம்!

இரவோடு இரவாக நமது பூமி அழிந்து விடாது !

இரவோடு இரவாக நமது பூமி அழிந்து விடாது !

8 பில்லியன் ஆண்டுகள் என்றால், 800 கோடி ஆண்டுகள் என்று இந்நேரம் நீங்கள் கணக்கு போட்டு பார்த்து இருப்பீர்கள் மற்றும் இரவோடு இரவாக நமது பூமி அழிந்து விடாது என்பதையும் இந்நேரம் புரிந்துகொண்டு இருப்பீர்கள்.

ஆகமொத்தம், பூமியின் அழிவு நம் வாழ்நாளில் நடக்கப்போவதில்லை; அதே சமயம் அது நடக்காமலேயே இருக்கப்போவதும் இல்லை. இதற்கிடையில் கோவிட்-19 போன்ற "Collateral Damage" ஏதேனும் ஏற்பட்டால்.. வேறு வழியே இல்லை, அதையும் நாம் சமாளித்து தான் ஆக வேண்டும்!

PhotoCourtesy: NASA/ ESA / Wikipedia

Best Mobiles in India

English summary
Astronomers Found Exoplanet Kepler 1658b About To Die. Will Earth Also Face the Same End?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X