மறைக்கப்பட்ட அண்டார்டிகா வரலாறு: நீங்கள் அறிந்திராத 20 பகிரங்கமான உண்மைகள்.! Part - 1

|

அண்டார்டிகா பற்றி பல விசித்திரமான செய்திகளை நாம் படித்திருப்போம், ஆனால் இந்த பதிவு முழுக்க-முழுக்க அண்டார்டிகா வரலாற்றில் நிகழ்ந்த உண்மைகளையும், சில நம்பமுடியாத மர்மங்களையும் பிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகா பற்றி நிரூபிக்கப்பட்ட 45 உண்மைகள் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பாகத்தில் அண்டார்டிகா தொடர்பான முதல் 20 உண்மைகளை பார்க்கலாம். நிச்சயம் இதில் உள்ள சில உண்மைகளை நீங்கள் நம்பமாட்டீர்கள்... ஆனால் இதுவே உண்மை..

#1

#1

அண்டார்டிகா உலகின் மிகப்பெரிய பாலைவனமாகும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் அதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

#2

#2

அண்டார்டிகா என்பது பூமியில் மிக குளிரான, காற்றோட்டமான, மிக உயர்ந்த மற்றும் வறண்ட கண்டமாகும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?

#3

#3

பூமியின் மிக குளிரான இடம் அண்டார்டிகாவில் தான் உள்ளது. அண்டார்டிகாவில் உள்ள உயரமான இடத்தில் வெப்பநிலை -133 ° F என்று பதிவாகியுள்ளது. உண்மையில் இது -93.2 C என்பதாகும்.

#4

#4

அண்டார்டிகாவில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை 58.2 ° F (14.5 ° C) ஆகும். இந்த NASA புகைப்படம் அதிக வெப்பத்தினால் அண்டார்டிகா தீவில்என்ன நடந்தது என்பதை காட்டுகிறது.

#5

#5

உலகின் 90% நன்னீர் அண்டார்டிகாவில் தான் உள்ளது.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

#6

#6

மர்மமான கண்டம்.. மனிதன் செல்லாத ''தெற்கு நிலம்''.. என்று கூறப்பட்டு வந்த அண்டார்டிகா, முதன்முதலில் 1820 ஆம் ஆண்டில் ரஷ்யா மேற்கொண்ட பயணத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது.Image Source: Wikipedia

#7

#7

அண்டார்டிகாவின் சில பகுதிகளில், கடந்த 2 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மழை பொலிவும், பனி பொலிவும் நிகழவில்லை என்பதே உண்மை.

#8

#8

சிறியது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் அண்டார்டிகா, ஐரோப்பாவை விட 1.3 மடங்கு பெரியது என்பதே உண்மை.

#9

#9

ரெப்டைல்ஸ் (Reptiles) என்று அழைக்கப்படும் எந்தவொரு ஊர்வன உயிரினமும் இல்லாத ஒரே கண்டம் அண்டார்டிகா மட்டும் தான்.

#10

#10

அண்டார்டிகாவில் பனி உருகுவது இந்த பகுதியில் உள்ள ஈர்ப்பு விசையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது யாரும் நம்பமுடியாத உண்மை.

பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? ஜாக்கிரதை..! RBI புதிய அறிவிப்பு.!பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? ஜாக்கிரதை..! RBI புதிய அறிவிப்பு.!

#11

#11

உங்களின் விஸ்டம் டூத் (wisdom tooth) மற்றும் அப்பெண்டிக்ஸ் (appendix) நீக்கப்படாவிட்டால் நீங்கள் அண்டார்டிகாவில் வேலை செய்ய முடியாது என்பது சற்று கொடூரமான உண்மை.

#12

#12

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான விந்து அணு அண்டார்டிகாவில் தான் காணப்பிடிக்கப்பட்டது. அதுவும் இது ஒரு புழுவின் விந்து செல்கள் என்பதும், இவை 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும்.

#13

#13

நேர மண்டலம் இல்லாத ஒரே கண்டம் அண்டார்டிகா மட்டும் தான் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை.

#14

#14

அண்டார்டிகாவின் பனிக்கட்டி படிவு குறைந்தபட்சம் 40 மில்லியன் ஆண்டுகளாக உள்ளது என்கிறது அறிவியல் உண்மை.

SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா?SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா?

#15

#15

இராணுவ நடவடிக்கைகள், கனிம சுரங்கங்கள் சுரண்டப்படுவது, அணு ஆயுத சோதனை அல்லது வெடிப்பு மற்றும் அணுக்கழிவுகளை அகற்றுவது போன்ற செயல்கள் அண்டார்டிகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை ஆதரித்து 38 நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

#16

#16

அண்டார்டிகாவிற்கு அடியில் 300 ஏரிகள் உள்ளது, இவை அனைத்தும் பூமியின் மையத்தின் வெப்பத்தால் உறைந்து போகாமல் உள்ளது என்பதே உண்மை.

#17

#17

அண்டார்டிகாவில் ஹஸ்கி நாய்கள் 1994 ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரிந்திடாத உண்மை.

#18

#18

பூமியின் தெற்கே செயலில் உள்ள பெரிய எரிமலை அண்டார்டிகாவில், யு.எஸ். ஆராய்ச்சி மையத்திற்கு மிக அருகில் உள்ளது. அதுவும் இந்த எரிமலை கிரிஸ்டல்களை உமிழ்கிறது என்பது அதிசயமான மற்றொரு உண்மை.

#19

#19

அண்டார்டிகா ஒரு காலத்தில், கலிபோர்னியாவைப் போலவே மிகவும் சூடான இடமாக இருந்தது என்பதே உண்மை.

#20

#20

அண்டார்டிகாவில் ஏழு கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை.

பாகம் இரண்டில் உள்ள உண்மைகள்...

பாகம் இரண்டில் உள்ள உண்மைகள்...

இந்த பதிவின் (Part - 2) 2ம் பாகத்தில், அண்டார்டிகாவில் மட்டும் காணக்கூடிய விசித்திரமான பூச்சி வகை, அண்டார்டிக்காவைச் சொந்தம் கொண்டாடப் பிறந்த முதல் குழந்தை, இரத்த நிறத்தில் கசியும் அண்டார்டிக்காவின் நீர்வீழ்ச்சி போன்ற இன்னும் பல மர்மமான உண்மைகளைப் பற்றிப் படிக்க மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Astonishing 43 Facts And Truths About Antarctica Part 1 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X