சியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.! என்னது அது.?

தற்போது சியாமி நிறுவனமும் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

|

டிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸரை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை விவோ எக்ஸ்20 யூடி பெற்றது. இதை தொடர்ந்து, எக்ஸ்20 யூடி-யின் பின்தோன்றலான விவோ எக்ஸ்21 யூடி மற்றும் விவோ அபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. விவோ-க்கு அடுத்தப்படியாக, மேட் ஆர்எஸ் போர்ச்சி வடிவமைப்புடன் கூடிய டிஸ்ப்ளே-க்கு கீழே கைரேகை சென்ஸரை ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது சியாமி நிறுவனமும் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

அஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.!

சியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.! என்னது அது.?

இது குறித்து சியாமி நிறுவனத்தின் சிஇஓ லீ ஜூன், விபோ-விடம் பேசிய போது, மீ 7 இல் டிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸர் இருக்கும் என்பதை சியாமி ரசிகர்களுக்கு உறுதி செய்தார். தனது அதிகாரபூர்வமான விபோ-வில் மீ மிக்ஸ் 2எஸ்-ன் கவர்ச்சிகரமான படங்களை சியாமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

அதில் ஒரு பயனர் வெளியிட்ட அறிவிப்பில், மீ 7-ல் டிஸ்ப்ளே-க்கு கீழே அமைந்த கைரேகை சென்ஸர் காணப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த லீ ஜூன், அதில் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நமக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், சியாமி மீ 7 மற்றும் மீ 7 பிளஸ் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன்கள் ஒருமிக்க அறிவிக்கப்படும் என்று அறிய முடிந்தது.

இதன் மென்பொருள் குறித்து கசிந்த சில தகவல்களை தாங்கிய கோப்புகளின் மூலம் அடுத்த வரவுள்ள இந்த முன்னணி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில், மேற்கூறிய இந்த கோப்புகளில் மீ 7 இல் டிஸ்ப்ளை-யின் கீழே கைரேகை சென்ஸர் இருப்பது குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ஆனால் தற்போது, சியாமி மீ 7-யை குறித்த ஒரு சில தகவல்கள் எங்களுக்கு தெரியவந்துள்ளது. டிப்பர் என்ற குறியீட்டு பெயர் அளிக்கப்பட வாய்ப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஒரு டிஸ்ப்ளே நொட்ச், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, மேம்பட்ட முகப் பாவனை கண்டறிதல், ஏஐ திறன்களுடன் கூடிய 16எம்பி இரட்டை பின்பக்க கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரிக்கக் கூடிய ஒரு 3400எம்ஏஹெச் பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இந்த கசிந்த மென்பொருள் கோப்புகளில், மீ 7 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு உர்ஸா என்ற குறியீட்டு பெயர் அளிக்கப்படலாம் என்றும் அதில் டிஸ்ப்ளே-யின் கீழே கைரேகை சென்ஸர் காணப்படலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மீ 7 பிளஸ் ஃபோனில் ஒரு மேம்பட்ட முகப் பாவானை கண்டறிதல் அம்சம் காணப்பட வாய்ப்புள்ள நிலையில், மீ 7 இல் இந்த அம்சம் இருக்க வாய்ப்பில்லை.

மீ 7 பிளஸ் குறித்த வதந்தியாக வந்த சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆப்டிக்கல் பெரிதுப்படுத்த கூடிய அம்சம் கொண்ட இரட்டை பின்பக்க கேமராக்கள், ஒரு ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மற்றும் ஒரு 4000எம்ஏஹெச் பேட்டரி ஆகியவை காணப்படலாம் என்று கூறப்படுகிறது.

How to Find a domain easily for your business (TAMIL)

இந்த ஆண்டின் ஜூன் மாதம், மீ 7 மற்றும் மீ 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை குறித்த அறிவிப்பை சியாமி நிறுனம் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் மீ மிக்ஸ் 2எஸ் வெளியிடுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே, அந்நிறுவனம் தொடர்ந்து டீஸர்களைக் காட்டி கொண்டிருந்ததால், மேற்கண்ட இந்த முன்னணி ஸ்மார்ட்போன்களின் வெளியிட்டிலும் அதே நிலையை சியாமி நிறுவனம் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi 7 will arrive with an under-display fingerprint sensor. The same has been confirmed by the company’s CEO Lei Jun in reply to a Weibo user’s comment. This way, Xiaomi will follow the footprints of Vivo and Huawei.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X