அஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.!

4ஜிபி ரேம் மாறுபாட்டின் முதல் பிளாஷ் விற்பனையானது ஏப்ரல் 9, 2018 அன்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளிலும் தொடங்கும்

|

கடந்த மார்ச் 26, 2018 அன்று ஒப்போ அதன் சமீபத்திய செல்பீ எக்ஸ்பெர்ட் - ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனை அறிமுமம் செய்தது. 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் கிடைக்கும், ஒப்போ எப்7 ஆனது முற்றிலும் புதிய 25எம்பி ஏஐ செல்பீ கேமராவை கொண்டுள்ளது. உடன் அதிரடியான மல்டிமீடியா அனுபவத்திற்கான ஒரு புல் வியூ எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவும் கொண்டுள்ளது.

அஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு!

ஒப்போ எப்7-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.21,990/-க்கும் மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.26,990/-க்கும் வாங்க கிடைக்கிறது. 4ஜிபி ரேம் மாறுபாட்டின் முதல் பிளாஷ் விற்பனையானது ஏப்ரல் 9, 2018 அன்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளிலும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வின் யாங், பிராண்ட் டைரக்டர், ஒப்போ இந்தியா

வின் யாங், பிராண்ட் டைரக்டர், ஒப்போ இந்தியா

நிகழ்ந்து முடிந்த ஒப்போ எப்7 அறிமுக விழாவில், கடந்த ஆண்டு இந்திய சந்தையில் ஒப்போ எப்5 தொடர் ஸ்மார்ட்போனின் வெற்றியைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரிவித்த ஒப்போ மொபைல் இந்தியாவின் பிராண்ட் இயக்குனரான வின் யங், ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவின் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கு உதவும் என்று கூறினார். உடன் நிறுவனத்தின் ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற உலகளாவிய விரிவாக்கம் பற்றியும் பேசினார்.

2018-ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய முதலீடுகள்.!

2018-ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய முதலீடுகள்.!

5ஜி சேவைக்கான முன்முயற்சியாக க்வால்காம் உடன் ஒப்போ கொண்டுள்ள கூட்டணி பற்றியும் யங் தெரிவித்தார். மேலும் ஒப்போ கூகுள் நிறுவனத்தின் ப்ரீ-லோடட் கூகுள் அசிஸ்டென்ட் பற்றியும் பேசினார். கடைசியாக, 2018-ஆம் ஆண்டில் ஒப்போ செய்யப்போகும் மிகப்பெரிய முதலீடுகள் பற்றி பேசினார். அதில், ஒப்போ நிறுவனமானது மொத்தம் 370 செயற்கை நுண்ணறிவு சார்ந்த காப்புரிமைகள் மற்றும் 20,522 ஸ்மார்ட்போன் காப்புரிமைகளை கொண்டுள்ளது என்ற தகவல் மிக முக்கியமானது.

செல்பீ கேமராவில் இடம்பெற்றுள்ள எச்டிஆர் திறன்.!

செல்பீ கேமராவில் இடம்பெற்றுள்ள எச்டிஆர் திறன்.!

பின்னர் பேசிய ரிஷப் ஸ்ரீவாஸ்தா, ஒப்போ இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர், ஒப்போ எப்7-ன் சிறப்புகள் பற்றி பேச ஆரம்பித்தார் குறிப்பாக முன்பக்க 25எம்பி செல்பீ கேமரா, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், செல்பீ கேமராவில் இடம்பெற்றுள்ள எச்டிஆர் திறன், மற்றும் ஒப்போ எப்7-ன் செல்பீக்கும் மற்ற கேமரா செல்பீக்களுமான பெரிய வித்தியாசங்களை பற்றி பேசினார். எளிய சொற்களில், ஒப்போ எப்7 ஆனது பிரகாசமான சூரிய ஒளி மற்றும் இருண்ட சூழ்நிலையில் கூட சிறப்பான செல்பீக்களை வழங்கும்.

பகுப்பாய்வு செய்து, உங்களுக்கான சிறந்த செல்பீயை வழங்கும்.!

பகுப்பாய்வு செய்து, உங்களுக்கான சிறந்த செல்பீயை வழங்கும்.!

ஒப்போ எப்7-ல் உள்ள சென்சார் எச்டிஆர் அம்சத்தை அறிமுகப்படுத்திய பின்னர், ரிஷப் ஸ்ரீவாஸ்தா, ஒப்போ எப்7-ன் புதிய பியூட்டி பயன்முறையை பற்றி பேசினார். ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த சென்சார் ஆனது முகத்தில் 296 முகபாவங்களை துல்லியமான முறையில் கண்டறிந்து, பகுப்பாய்வு செய்து, உங்களுக்கான சிறந்த செல்பீயை வழங்கும்.

இதன் கேமராவில் உள்ள ஏஐ தொழில்நுட்பமானது, உணவு, புல், நிலப்பரப்பு, போர்ட்ரெயிட், மற்றும் இன்னும் 16 சீன்ஸ்களை அங்கீகரிக்கிறது. குறிப்பாக இதன் 'விவிட்' பயன்முறையானது பதிவாகும் புகைப்படத்தின் இயற்கை நிறங்களை இன்னும் அதிக இயற்கையானதாக மாற்ற உதவுகிறது.

 ஒப்போ எப்7-ன் அம்சஙகள்

ஒப்போ எப்7-ன் அம்சஙகள்

இந்த ஸ்மார்ட்போன் பிக்சல்-பாப்பிங் பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது 6.23 இன்ச் அளவிலான 19: 9 என்கிற திரை விகிதம் கொண்ட 'சூப்பர் புல்எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் ஒரு 64-பிட் ஆக்டா-கோர் செயலி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் மற்றும் இரண்டு நானோ சிம் கார்டு + மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட், 3400எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 5.0, பேஸ் அன்லாக் அம்சம், பாஸ்வேர்ட் மற்றும் கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒப்போ எப்7 வெளியீட்டு விழாவில். இந்திய கிரிக்கெட்

ஒப்போ எப்7 வெளியீட்டு விழாவில். இந்திய கிரிக்கெட்

அணியின் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஒப்போ நிறுவனத்தின் விளையாட்டுத் தூதுவர்களான ரோஹித் ஷர்மா, ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர்களும் பங்குகொண்டனர். இவர்களுடன் ஒப்போ இந்திய விற்பனை இயக்குனரான மாதவ் ஷெத் அவர்களும் மேடையில் இணைந்தார். மேற்குறிப்பிட்டபடி, ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.21,990/-க்கும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மாறுபாடானது ரூ.26,990/-க்கும் வாங்க கிடைக்கும். மற்றும் 4 ஜிபி ரேம் மாறுபாட்டின் முதல் விற்பனை ஏப்ரல் 9, 2018 அன்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
OPPO F7 made its grand entry in Indian market with Star Indian Cricketers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X