ஏர்டெல் 398 vs ஜியோ 398 vs ஐடியா 398: எது பெஸ்ட்.?

கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் முனைப்பில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இந்த ரூ.398/- என்கிற விலைப்புள்ளியின் கீழ் தங்களுக்கே உரிய நன்மைகளை வழங்கி

|

இந்திய தொலைத் தொடர்பு துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை பற்றிய அறிமுகமே தேவையில்லை. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்திலும், ஏற்கனவே சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஏர்டெல் உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கடுமையான போட்டித்தன்மைமிக்க திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

ஏர்டெல் 398 vs ஜியோ 398 vs ஐடியா 398: எது பெஸ்ட்.?

சில சமயம் ஒரே மாதிரியான விலை நிர்ணயத்தில் கூட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அப்படியானதொரு திட்டம் தான் ரூ.398. கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் முனைப்பில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இந்த ரூ.398/- என்கிற விலைப்புள்ளியின் கீழ் தங்களுக்கே உரிய நன்மைகளை வழங்கி வருகிறது.

ஏர்டெல் vs ஜியோ vs ஐடியா

ஏர்டெல் vs ஜியோ vs ஐடியா

ஒருவேளை நீங்கள் ரூ.398/- என்கிற விலையோடு பொறுத்திவிட்டீர்கள், ஆனால் எந்த நெட்வெர்க்கின் சேவையை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது என்றால் - நீங்கள் சரியான இடத்தில தான் உள்ளீர்கள். ஏர்டெல் 398 vs ஜியோ 398 vs ஐடியா 398 - இந்த மூன்று திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பற்றிய தொகுப்பே இது.

ஜியோ ரூ.398 (நன்மைகள்)

ஜியோ ரூ.398 (நன்மைகள்)

ரூ. 398/-ன் கீழ் ரிலையன்ஸ் ஜியோவானது மொத்தம் 70 நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும் வண்ணம் மொத்தம் 105ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது. இதன் அர்த்தம் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த வரம்பு முடிந்தபின்னர் 64 ஜிபிஎஸ் என்கிற வேகத்தில் டேட்டாவை அனுபவிக்கலாம். டேட்டா நன்மைகள் தவிர்த்து வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகிய நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஏர்டெல் ரூ.398 (நன்மைகள்)

ஏர்டெல் ரூ.398 (நன்மைகள்)

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398/- ஆனது 28 நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளம் படி, இந்த பேக்கின் மொபைல் தரவு வேகமானது 2 ஜி மற்றும் 3ஜி/4ஜி சேவைக்கு மாறுபடும். இதுவொரு இன்டர்நெட் பேக் ஆகும். ஆக இதர குரல் அழைப்புகள் மற்றும் இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகள்ஏதும் இதில் இல்லை.

ஐடியா ரூ.398 (நன்மைகள்)

ஐடியா ரூ.398 (நன்மைகள்)

இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 70 ஜிபி அளவிலான மொபைல் தரவை வழங்குகிறது. மற்ற நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த ரூ.398/- ரீசார்ஜ் பேக் ஆனது வரம்புக்குட்பட்ட அழைப்புகள் (உள்ளூர், தேசிய, உள்வரும் ரோமிங் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங்) மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

'வெப் எக்ஸ்க்ளூசிவ்'

'வெப் எக்ஸ்க்ளூசிவ்'

சமீபத்தில் ஐடியா செல்லுலார் ரூ.3,300/- வரையிலான மேஜிக் கேஷ்பேக் சலுகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஐடியாவின் ரூ.398/- மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்துவதின் மூலம் இந்த கேஷ்பேக் சலுகைகளை பெறலாம். இதுவொரு 'வெப் எக்ஸ்க்ளூசிவ்' வாய்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
What Airtel, Reliance Jio, Vodafone, Idea Offer In Rs. 398 Packs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X