ஐடியா அதிரடி: ரூ.398/-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.400/- கேஷ்பேக் மற்றும் பல.!
ரூ.449, ரூ.459, ரூ.498, ரூ.509, ரூ.529, ரூ.549, ரூ.599, ரூ.697, ரூ.797, ரூ.799, ரூ.897, ரூ.1197/- போன்ற வரம்பற்ற திட்டங்களுக்கு இந்த கேஷ்பேக் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஐடியா செல்லுலார் நிறுவனம் அறிமுகம் செய்த 100% கேஷ்பேக் சலுகையின் திருத்தப்பட்ட வடிவமாக 'ஐடியா மேஜிக் கேஷ்பேக் ஆபர்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேஷ்பேக் வாய்ப்பின் கீழ் ரூ.3300/- வரையிலான கேஸ்பேக் சலுகையை ரூ.400/- என்கிற விகிதத்தில் (அதாவது ரூ.50/- மதிப்பிலான 8 ஐடியா தள்ளுபடி வவுச்சர்கள்) கிடைக்கும், உடன் ஐடியா இணையத்தளம் அல்லது மைஐடியா ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.200/- கேஷ்பேக் கிடைக்கும். அதென்ன சலுகைகள்.? இந்த சலுகை எத்தனை காலத்திற்கு நீடிக்கும் போன்றே தகவல்களை விரிவாக காண்போம்.

மேஜிக் கேஷ்பேக்
மேலே கூறப்பட்ட கேஷ்பேக் வாய்ப்புகளை தவிர்த்து, ஐடியா செல்லுலார் ரூ.2700/- என்ற ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்களையும் வழங்குகிறது. ஆக மொத்தம் இந்த மேஜிக் கேஷ்பேக் வாய்ப்பின் கீழ் ஐடியா செல்லுலார் நிறுவனமானது மொத்தம் ரூ.3300/- அளவிலான சலுகைகளை வழங்குகிறது.

கேஷ்பேக் வவுச்சர்கள்
ஐடியா நிறுவனம் வழங்கும் இந்த சலுகைகளை பெற நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஐடியாவின் ரூ.398/- ரீசார்ஜ் அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்த வேண்டியது மட்டுமே. நிறுவனத்தின் வரம்பற்ற திட்டங்களை அணுகும் பயனர்களுக்கு ரூ.400/- மதிப்பிலான ஐடியா கேஷ்பேக் வவுச்சர்கள் கிடைக்கும்.

வரம்பற்ற திட்டங்களுக்கு வாய்ப்பு
இந்த கேஷ்பேக் வவுச்சர்கள் ரூ.50/- மதிப்பிலான எட்டு வவுச்சர்களாக கிடைக்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.400/- ஆகும். ரூ.398/- மற்றும் அதற்கு மேலான அனைத்து ரீசார்ஜ்களுக்குமே இந்த வாய்ப்பு கிடைக்கும். அதாவது ரூ.449, ரூ.459, ரூ.498, ரூ.509, ரூ.529, ரூ.549, ரூ.599, ரூ.697, ரூ.797, ரூ.799, ரூ.897, ரூ.1197/- போன்ற வரம்பற்ற திட்டங்களுக்கு இந்த கேஷ்பேக் வாய்ப்பு கிடைக்கும்.

மொபிக்விக்
டிஜிட்டல் வேலட் சேவை வழங்குநர்களான பேடிஎம் மற்றும் மொபிக்விக் ஆகிய நிறுவனங்களுடன் உடன் கூட்டுசேர்ந்து ஐடியா செல்லுலார் நிறுவனம் மேற்குறிப்பிட்டுள்ள ரீசார்ஜ்களுக்கு முறையே ரூ.20/- மற்றும் ரூ.200/- என்கிற கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. மொபிக்விக் பயனர்கள் இந்த வாய்ப்பை சூப்பர்கேஷ் ஆக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சும்பக், க்ரோமா, ஈபே, பெப்பர்பிரை, பீட்டர் இங்லாண்ட்
மேலும் சும்பக், க்ரோமா, ஈபே, பெப்பர்பிரை, பீட்டர் இங்லாண்ட் போன்ற பல இ- காமர்ஸ் போர்ட்டல்களோடு கூட்டணி கொண்டு, ஐடியா செல்லுலார் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. சும்பக்(Chumbak) வலைத்தளத்தில் ரூ.1500/-க்கு பொருட்களை வாங்கினால் ரூ.350/- கேஷ்பேகே கிடைக்கும்.

2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை
க்ரோமாவில் ரூ.1000/-க்கு பொருட்களை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். ஈபே வலைத்தளத்தில் ரூ.100/- முதல் ரூ.350/- வரையிலாக தள்ளுபடி கிடைக்கும் உடன் பெப்பர்பிரை மற்றும் பீட்டர் இங்லாண்ட் ஆகிய இரண்டிலும் அதிகபட்சமான ரூ.500/- கேஷ்பேக் கிடைக்கும். ஐடியாவின் இந்த புதிய கேஷ்பேக் சலுகையானது இந்த 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம்


Click it and Unblock the Notifications