Home
News

5ஜி சோதனை: வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய சாதனை.!

வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்நிலையில் 5ஜி டேட்டா சோதனையில் 4ஜிபிபிஎஸ் வேகத்தை எட்டியுள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்பிர் சிங்

மேலும் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பிர் சிங் கூறியுள்ளது என்வென்றால், வோடபோன் ஐடியா நிறுவனம் நடத்திய 5ஜி சோதனையில் 4.2 ஜிபிபிஎஸ் (ஜிகாபைட் பர் செகண்ட்) வேகம் எட்டப்படது.

தொலைத்தொடர்பு சேவை

அதேபோல் இது இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இதுவரையில் நடத்திய சோதனையில் அதிகபட்ச வேகம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வேகம் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் எட்டப்பட்டுள்ளது. மேலும் இதைத்தான் எதிர்காலத்தில் ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்மிட்டுள்ளது என்று தெரிவித்தார் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பிர் சிங்.

 நிறுவனத்துடன் இணைந்து புணேயிலும்

எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து புணேயிலும் நோக்கியாவுடன் இணைந்து காந்திநகரிலும் 5ஜி சோதனைகளை விஐஎல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..

மீபத்தில் வோடபோன் ஐடியா ப்ரீபெ

மேலும் சமீபத்தில் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.500 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்ட விலை உயர்வு குறித்து பார்க்கையில், இந்த விலை ரூ.2399 ஆக இருந்த நிலையில் தற்போது இதன் விலை ரூ.2899 ஆக இருக்கிறது. திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது அதோடு இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறித்து
பார்க்கையில் இது 365 நாட்கள் செல்லுபடியாகும்.

வோடபோன் ஐடியாவின் ரூ.1499

அதேபோல் வோடபோன் ஐடியாவின் ரூ.1499 திட்டத்தின் விலை தற்போது ரூ.1799 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து பார்க்கையில், இது 24 ஜிபி டேட்டா மற்றும் 2600 இலவச எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

 வோடபோன் ஐடியா ரூ.699 திட்டத்தின்

மேலும் வோடபோன் ஐடியா ரூ.699 திட்டத்தின் விலை ரூ.839 ஆக இருக்கிறது. பின்பு ரூ.599 திட்டத்தின் விலை ஆனது ரூ.719 ஆக இருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் முறையே 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் சலுகையோடு வருகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. அதேபோல் ரூ.379-க்கு இருந்த ரீசார்ஜ்திட்டத்தின் விலை தற்போது ரூ.459 ஆக இருக்கிறது.

காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களை தவிர

குறிப்பாக காம்போ ப்ரீபெய்ட் திட்டங்களை தவிர குரல் அழைப்பு திட்டமான ரூ.79 திட்டத்துக்கு ரூ.20 விலை உயர்வு அறிவித்து தற்போது இந்த திட்டம் ரூ.99 ஆக இருக்கிறது. இந்த திட்டமானது 200 எம்பி டேட்டா மற்றும் வினாடிக்கு 1 பைசா குரல் அழைப்பு கட்டணம் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதேபோல் டேட்டா பாப் அப் திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.48 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.58 ஆக இருக்கிறது. மேலும் ரூ.98 விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.118 ஆக இருக்கிறது. மேலும் ரூ.251 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ.298 ஆக இருக்கிறது மேலும் ரூ.351 என்ற விலையில் இருந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.418 ஆக இருக்கிறது.

ர்டெல் நிறுவனமும் தனது ப்ரீபெய்ட்

கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 1.9 கோடி வையர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 423.83 மில்லியானகக் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வையர்லெஸ் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைத்துள்ளது. எனவே இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea 5G reached speeds of around 4 Gbps during testing: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X