Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தது. இதன்படி, நிறுவனத்தின் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் இன்று முதல் நிறுவனம் அதிகரித்த புதிய விலைப் புள்ளியின் கீழ் கிடைக்கிறது. இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த புதிய விலை நேரலையில் உள்ளது. ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ள சூழ்நிலையில், டெல்கோ நிறுவனம் அதன் பட்டியலில் உள்ள நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் டேட்டா நன்மைகளையும் மேம்படுத்தியுள்ளது.

500 எம்பி அல்லது அரை ஜிபி டேட்டா தினமும் இலவசமாக வேண்டுமா?

500 எம்பி அல்லது அரை ஜிபி டேட்டா தினமும் இலவசமாக வேண்டுமா?

இந்த நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல் பயனர்கள் தேர்வு செய்யும் போது, அந்த பயனர்களுக்குத் திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மையோடு தினமும் 500 எம்பி அல்லது அரை ஜிபி டேட்டா கிடைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரை ஜிபி டேட்டாவை பயனர்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் அசல் வேலிடிட்டி காலம் நிறைவடையும் வரை தினமும் இலவசமாக ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுப் பயன்பெறலாம் என்று நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

'500 MB' கூடுதல் இலவச தினசரி டேட்டா

'500 MB' கூடுதல் இலவச தினசரி டேட்டா

இந்த 500 எம்பி டேட்டா சலுகையானது தொலைத்தொடர்பு நிறுவனத்தால் முதன் முதலில் அதன் ரூ. 249 விலை கொண்ட திட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது ரூ. 299 விலை திட்டமாக நிறுவனத்தின் விலை அதிகரிப்பிற்குப் பின் மாறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே இப்போது இந்த '500 MB' கூடுதல் இலவச தினசரி டேட்டாவை வழங்குகிறது. 500 MB கூடுதல் தினசரி டேட்டாவை மீட்டெடுப்பதற்கான முறை மிகவும் எளிமையானது.

தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட "பாறை".. உண்மையில் இந்த பாறை என்னவென்று தெரியுமா? எதற்கு பயன்படும்?

ஏர்டெல் தேங்க்ஸ் அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் லக்கு தான்

ஏர்டெல் தேங்க்ஸ் அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் லக்கு தான்

ஏர்டெல் பயனர்கள், அவர்கள் பயன்படுத்தும் மொபைலில் ஏர்டெல் தேங்க்ஸ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, அதை அவர்களின் எண் மூலம் லாகின் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். உங்களுக்கு இந்த திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா நன்மை முடிந்த பின், தங்களுக்கு இன்னும் கூடுதலாக டேட்டா தேவைப்பட்டால், ஒவ்வொரு நாளும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸில் இருந்து ரிடீம் செய்துகொள்ள வேண்டும். ரூ. 719, ரூ. 299, ரூ. 265 மற்றும் ரூ. 839 உட்பட மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன.

ரூ. 839 திட்டம் மற்றும் ரூ. 265 திட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ரூ. 839 திட்டம் மற்றும் ரூ. 265 திட்டம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ. 839 திட்டமானது, அதன் பயனர்களுக்குத் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் அப்ளிகேஷன் மூலம் தினசரி 500 எம்பி கூடுதல் டேட்டாவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம், பயனர்கள் அடிப்படையில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதேபோல், ரூ. 265 விலை திட்டமானது அதன் பயனர்களுக்குத் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. எனவே, போனஸ் 500 எம்பி டேட்டாவுடன், ரூ.265 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.

என்ன சார் இதெல்லாம்- ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு!என்ன சார் இதெல்லாம்- ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு!

ரூ. 299 விலை திட்டம் மற்றும் ரூ. 719 விலை திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ரூ. 299 விலை திட்டம் மற்றும் ரூ. 719 விலை திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ஏர்டெல் வழங்கும் ரூ. 299 விலை திட்டம் மற்றும் ரூ. 719 விலை கொண்ட இரண்டு திட்டங்களும் அதன் பயனர்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இது நிறுவனம் வழங்கும் 500 எம்பி கூடுதல் டேட்டாவுடன் சேர்க்கும் போது, அதன் பயனர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையைக் கிடைக்கச் செய்கிறது. ரூ. 299 மற்றும் ரூ. 265 விலை கொண்ட இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும் குறுகிய கால வேலிடிட்டியுடன் வருகின்றது.

84 நாட்களுக்கும் இந்த 500 எம்பி இலவச டேட்டா கிடைக்குமா?

84 நாட்களுக்கும் இந்த 500 எம்பி இலவச டேட்டா கிடைக்குமா?

அதேபோல், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ. 719 மற்றும் ரூ. 839 விலை கொண்ட திட்டங்கள் நடுத்தர கால பயனர்களுக்கு ஏற்ற 84 நாட்கள் செல்லுபடியாகும் சேவை வேலிடிட்டியுடன் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இந்த வேலிடிட்டி காலம் முடியும் வரை தினமும் 500 எம்பி டேட்டாவை அவர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது சிறப்பு. இந்த திட்டங்களுடன் இன்னும் கூடுதல் நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. அது பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

இத்துடன் இந்த திட்டங்களுடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்

இத்துடன் இந்த திட்டங்களுடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்

ஏர்டெல் வழங்கும் இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களின் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு சந்தாவை வழங்குகிறது. இத்துடன், Wynk மியூசிக் சேவைக்கான சந்தா மற்றும் பிற பொதுவான ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் அனைத்தும் இந்த திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இலவச 500 MB டேட்டா கிடைக்கும் திட்டங்கள் நிச்சயமாக ஏர்டெல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது. இந்த திட்டம் உங்களுக்குப் பிடித்துள்ளதா என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Is Now Offering Free Half Gigabyte Or 500 MB Daily Data With 4 Prepaid Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X