Airtel-ஐ தொடர்ந்து Vodafone Idea விலை உயர்வு அறிவிப்பு.. ஒரே அடியாக ரூ.250 உயர்த்தப்பட்ட திட்டம்!
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ட்ரூலி அன்லிமிடெட் பிளான் ஆன ரூ.189-ஐ நீக்கிவிட்டு, ரூ.199-ஐ புதிய என்ட்ரி லெவல் அன்லிமிடெட் பிளான் ஆக நிர்ணயம் செய்த வேகத்தில், இன்னொரு தனியார் டெலிகாம் ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் "2025 ரீசார்ஜ் கட்டண உயர்வில்" (Tariff Hike 2025) இணைந்துள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனமானது வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்சலுகைகளை வழங்கும் அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றின் விலையை அதிகரித்துள்ளது. அது ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs.1999) ஆகும். தற்போது இது கூடுதல் சலுகைகளுடன் ரூ.2,249 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது (அல்லது) திருத்தப்பட்டு உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.1,999 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைத்தது? முன்னதாக ரூ.1,999 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 24 ஜிபி அல்லது 36 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்கியது
டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிந்தைய டேட்டா பயன்பாடு ஆனது 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக திட்டத்தின் பயனுள்ள செலவு ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.5.40 ஆக இருந்தது. தற்போது இந்த திட்டம் அதே வேலிடிட்டியை (அதாவது 1 ஆண்டு அல்லது 365 நாட்கள்) தக்க வைத்து கொண்டு ரூ.2,249 ஆக திருத்தப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.2,249 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புதிய ரூ.2,249 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் (நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து) 30 ஜிபி அல்லது 40 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
மேலும் ரூ.1999 இல் இருந்ததை போலவே டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான டேட்டா பயன்பாட்டிற்கு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திருத்தத்திற்கு பிறகு, திட்டத்தின் பயனுள்ள செலவு இப்போது ஒரு நாளைக்கு சுமார் ரூ.6.16 ஆக உயர்ந்து உள்ளது
எந்தெந்த வட்டங்களில் ரூ.2249-ன் கீழ் 30 ஜிபி டேட்டா கிடைக்கும்? தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், சென்னை, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, மத்திய பிரதேசம், மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், , உ.பி கிழக்கு, உ.பி மேற்கு மற்றும் மேற்கு வங்காளம்.
எந்தெந்த வட்டங்களில் ரூ.2249-ன் கீழ் 40 ஜிபி டேட்டா கிடைக்கும்? அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மற்றும் ஒடிசா. இந்த திருத்தத்தின் கீழ் வோடபோன் ஐடியாவின் ரூ.2,249 திட்டம் இப்போது ஏர்டெல்லின் ரூ.2,249 வருடாந்திர திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல்லின் ரூ.2.249 ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 ஜிபி டேட்டா ஆகிய "வழக்கமான" நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் போன்றவைகள் கிடைக்கும்
ரூ.1999 ஆனது ரூ.2249 ஆக விலை உயர்த்தப்பட்டதின் மூலம், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வருடாந்திர வாய்ஸ்-சென்ட்ரிக் திட்டம் ஆனது ரூ.250 விலை உயர்ந்ததாக மாறியுள்ளது, இருப்பினும் சற்று அதிகரித்த டேட்டா நன்மைகள் உள்ளன. ஆனாலும் 6ஜிபி அளவிலான டேட்டாவிற்கு ரூ.250 கட்டண விலை உயர்வா என்று வாடிக்கையாளர்கள் நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள்.


Click it and Unblock the Notifications








