வயசாகிடுச்சுனு நினைச்சீங்களா? Warner Bros-ஐ வளைச்சி போட்ட அம்பானி.. ரூ.2 க்கு ஹாலிவுட்.. கலக்கும் JioCinema!
முகேஷ் அம்பானியின் "காலம்" முடிந்துவிட்டது. இனிமேல் அவருடைய வாரிசுகள் தான் தலைதூக்குவார்கள் என்று, நாமெல்லாம் நினைக்க தொடங்கும் ஒவ்வொரு முறையும்.. "எனக்கு அவுட் ஆஃப் ஃபார்ம்னு ஒன்னு கிடையவே கிடையாது" என்று சொல்லாமல் சொல்வது போல ஒரு தரமான வியாபார தந்திரத்தை கட்டவிழ்த்து விடுவார்!
அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டாக ஜியோசினிமா (Jio Cinema) ஆப்பை கூறலாம். சில வாரங்களுக்கு முன்பு வரையிலாக, மொபைல் போனில் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் கிடந்த ஜியோசினிமா ஆப் ஆனது தற்போது தினமும் பயன்படுத்தப்படும் ஒரு ஆப் ஆக உருமாறிவிட்டது!

அதற்கு முக்கிய காரணம், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வயாகாம்18 (Viacom18) தான். ஏனென்றால் இந்நிறுவனம் தான் இந்த 2023 ஆம் ஆண்டு தொங்டகி வருகிற 2027 ஆம் ஆண்டு வரையிலாக நடக்கும் அனைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளையும் லைவ் ஸ்ட்ரீம் (Live Stream) செய்வதற்கான டிஜிட்டல் உரிமை (Digital Rights) பெற்றுள்ளது.
இதற்காக வயாகாம்18 செலவு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். செலவே இவ்வளவு என்றால் வரவு எவ்வளவு வரும்? இதைத்தான் முகேஷ் அம்பானியின் வியாபார தந்திரம் என்கிறோம். ஆனால் உண்மையில் இதெல்லாம் வெறும் ஆரம்பம் மட்டும் தான்!
ஏனென்றால், ஐபிஎல் 2023 முடிந்த வேகத்தில் ஜியோசினிமா ஆப்பில் 3 சந்தா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது ஜியோசினிமா ஆப் ஆனது நெட்பிளிக்ஸ் (Netflix) , அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை (Disney+ Hotstar) போல சாந்த கட்டணம் அடிப்படையிலான ஒரு ஓடிடி தளமாக விஸ்வரூபம் எடுக்கவுள்ளது.
அதனொரு பகுதியாக, ஜியோசினிமா ஆப்பிற்கு ஹாலிவுட் திரைப்படங்களை (Hollywood Movies) கொண்டு வருவதற்காக வயாகாம்18 நிறுவனமானது வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி (Warner Bros Discovery) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் தான் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் கூட்டாண்மை முடிவுக்கு வந்தது.
அதன் விளைவாக, கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன்கள், தி லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற சீரீஸ் உட்பட 144 எச்பிஓ ஒரிஜினல்ஸ் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இருந்து அகற்றப்பட்டன. இதற்கிடையில் தான் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி உடன் வயாகாம்18 என்கிற புதிய கூட்டணி உருவாகியுள்ளது!
இந்த புதிய கூட்டணியின் கீழ், வயாகாம்18 நிறுவனமானது எச்பிஓ (HBO) மற்றும் வார்னர் (Warner) கன்டென்ட்களை லீனியர் சேனல்கள் மற்றும் ஜியோசினிமா ஆப் வழியாகவும் வழங்கும். சுவாரசியமாக, எச்பிஓ ஒரிஜினல், மேக்ஸ் ஒரிஜினல் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் சீரீஸின் இந்திய ஒளிபரப்பு நேரமானது அமெரிக்க பிரீமியர் நேரங்களுடன் ஒற்றுப்போகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023க்கு பின்னர் அறிமுகமாகும் ஜியோசினிமா சந்தா திட்டங்களை பொறுத்தவரை, டெய்லி (Daily), கோல்ட் (Gold) மற்றும் பிளாட்டினம் (Platinum) என்கிற 3 திட்டங்கள் அறிமுகமாகலாம். அவைகள் முறையை ரூ.2, ரூ,99 மற்றும் ரூ..599 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். அதாவது வெறும் ரூ.2 க்கு ஹாலிவுட் திரைப்படங்களை காட்டப்போகிறார் முகேஷ் அம்பானி!


Click it and Unblock the Notifications