Netflix, Hotstar-ஐ காலி செய்யும் விலை.. JioCinema ஆப்பில் 3 சந்தா திட்டங்கள்.. இதோ விலை மற்றும் வேலிடிட்டி!
ஒரு நல்ல பழக்கத்தை அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக 3 மாதங்கள் பின்பற்றி வந்தால்.. அந்த 3 மாதங்களுக்கு பிறகு அந்த பழக்கம் அல்லது விஷயம் நமக்கு மிகவும் பழகிவிடும்; அது நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விடும் என்று கூறுவார்கள்.
அப்படியாகத்தான் ரிலையன்ஸ் ஜியோவும், அது வழங்கிய இலவச 4ஜி சேவைகளும் தற்போது நம் பலரின் வாழ்வில் முக்கிய அங்கமாகி விட்டது. முதலில் இலவசமாக கொடுப்பதும், அது நமக்கெல்லாம் பழக்கமான பின்னர், குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதும் முகேஷ் அம்பானிக்கும் அவரது டெலிகாம் நிறுவனத்திற்கும் மிகவும் பழக்கமான வியாபார தந்திரம் தான்!

தற்போது அந்த தந்திரம் ஜியோசினிமா ஆப் (JioCinema) மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், ஐபில் 2023 கிரிக்கெட் போட்டிகள் (IPL 2023) முடிந்த வேகத்தில் ஜியோசினிமா ஆப் ஆனது சந்தா கட்டணத்தின் கீழ் கிடைக்கும் ஒரு சேவையாக உருமாறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், ஒரு டெஸ்ட் வெப்சைட் (Test Website) வழியாக ஜியோசினிமாவின் கீழ் கிடைக்கவுள்ள 3 சந்தா திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜியோசினிமா ஆப்பில் டெய்லி (Daily), கோல்ட் (Gold) மற்றும் பிளாட்டினம் (Platinum) என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகமாகும்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவைகள் 3 வெவ்வேறு திட்டங்களாக இருந்தாலும் கூட அவைகள் ஒரே கன்டென்ட்டை 4கே குவாலிட்டியில் (4K Quality) பார்க்க அனுமதிக்கும். இந்த 3 திட்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பொறுத்தவரை, பெயர் குறிப்பிடுவது போலவே டெய்லி பிளான் ஆனது ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.29 ஆகும். ஆனால் ஜியோ இதை வெறும் ரூ.2 க்கு வழங்குவதாகவும் டெஸ்ட் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யும் ஆதரவும் கிடைக்கும்.
அடுத்ததாக உள்ள கோல்ட் பிளானிங் அசல் விலை ரூ.299. ஆனால் இது ரூ.99க்கு கிடைக்கும். இதனை கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது மொத்தம் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் (இதுவும்) ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.
கடைசியாக உள்ள பிளாட்டினம் பிளானின் அசல் விலை ரூ.1,199. ஆனால் இது ரூ,599 க்கு அணுக கிடைக்கும். இந்த திட்டம் 12 மாதங்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். கூடுதலாக இது விளம்பரமில்லாத அனுபவத்தையும் வழங்குமாம்.
மேற்கண்ட 3 திட்டங்களுமே தற்போது வரையிலாக ஜியோசினிமா பிளாட்ஃபார்மில் இல்லை, எனவே சந்தா கட்டணம் செலுத்துவது பற்றி இப்போதைக்கு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, ஐபிஎல் 2023 சீஸனின் இறுதிப்போட்டி வரையிலாக ஜியோசினிமா ஆப் ஆனது இலவச ஸ்ட்ரீமிங் தளமாகவே இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் முகேஷ் அம்பானி தலைமையிலான வயாகாம் 18 (Viacom18) நிறுவனமானது, வருகிற 2027 ஆம் ஆண்டு வரையிலாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கான டிஜிட்டல் உரிமையை - 2.7 பில்லியன் டாலர்களை செலுத்தி - தன் வசமாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications