இனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா?
இனிவரும் ஐபோன் மாடல்களில் 3GB ரேம் இருக்குமா?
கடந்த சில மாதங்களாகவே விரைவில் வெளிவரவுள்ள அடுத்த மாடல் ஐபோன் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இனிவரும் ஐபோன் மாடல்களில் ரேம்களின் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஐபோன் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளிவந்த ஐபோன்கள் உள்பட அனைத்து ஐபோன்களின் தகவல்களை திரட்டி தரும் நிறுவனம் ஒன்று அடுத்த மாடல் ஐபோனில் 3GB ரேம் இருக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இண்டர்னல் ஸ்டோரேஜில் மாற்றம் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான 4.7 இன்ச் ஐபோன் மாடலான 7s மற்றும் 5.5 இன்ச் ஐபோன் மாடலான 7s பிளஸ் ஆகிய மாடல்களில் 32/128/256 GBக்கள் அளவில் இண்டர்னல் ஸ்டோரேஜ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய அடுத்த தயாரிப்பில் டிசைன் மற்றும் மற்ற அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், ரேமை அதிகரிப்பதிலும் அக்கறை கொண்டுள்ளது என்பது உறுதியாகின்றது.
பானாசோனிக் மொபைல் இந்தியாவில் அதிரடி விற்ப்பனை!
அதே நேரத்தில் விரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் ஐபோன் 8 மாடல் 5.8 இன்ச் அளவில் 64GB மற்றும் 256 GB அளவில் இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கோவன் அண்ட் கம்பெனி நிறுவனத்தின் செய்தியின்படி ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் பேட்டரியின் லைஃப் இருமடங்காக இருக்கும் என்றும், இந்த மாடலில் இரண்டு பேட்டரிகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் டிரெண்ட் ஃபோர்ஸ் என்ற நிறுவனம் தரும் செய்தியின்படி பார்க்கும்போது ஆப்பிள் ஐபோன் 8 மாடல் 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் டிஸ்ப்ளே மட்டுமின்றி அந்த டிஸ்ப்ளே OLED திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறுகிறது. மேலும் 3GB ரேம் இருக்கும் என்று கூறுகிறது.
மொத்தத்தில் ரேம் திறன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படினும், இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும்
மேலும் இனிமேல் வரக்கூடிய அனைத்து ஐபோன் புதிய மடல்களிலும் மிக வேகமாக மின்னல் வேகத்தில் சார்ஜ் ஆகும் வகையில் யூஎஸ்பி டைப் சி போர்ட் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் ஒருசில மாதங்களில் ஐபோன் 8 வெளிவரும் போது தெரிந்துவிடும். அதுவரை பொறுமை காப்போம்


Click it and Unblock the Notifications