டைட்டன் வழங்கும் இலவச கண் பரிசோதனை...அதுவும் ஆன்லைனில்!

Written By:

சில தினங்களுக்குமுன் டைட்டன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டைட்டன் ஐ+ கண் பரிசோதனையை இலவசமாகவே வழங்குகிறது, அதுவும் ஆன்லைனில் என்பது கூடுதல் சிறப்பு.

டைட்டன் வழங்கும் இலவச கண் பரிசோதனை...அதுவும் ஆன்லைனில்!

மேலும் இந்நிறுவனம் இந்த சேவையை, தமிழ் உற்பட 7 மொழிகளில் வழங்குகிறது. ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களும் பயன்பெறும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக இந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஆன்லைனில் பரிசோதிக்கும் முறைக்கு இந்நிறுவனம் 'விஷன் செக்' எனவும் பெயரிட்டுள்ளது.

இதற்கான இணையதள முகவரி இங்கே தரப்பட்டுள்ளது. முதலில் உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து, பயனாளர் பெயர், ஈமெயில், கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைப்பேசி எண்ணையும் கொடுத்து பதிவுசெய்யவேண்டும்.

உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த ஒரு குறியீடானது அனுப்பப்படும். அதை சரியாகக்கொடுத்தால் உங்களுக்கான 5 பக்க பரிசோதனை தொடங்கப்படும்.

இதை கண்களில் கோளாறு உள்ளவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. யாராக இருந்தாலும் உபயோகப்படுத்திப்பாருங்கள்.

LED விளக்குகள்: பளபளக்கப்போகும் தமிழக சாலையோரங்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot