LED விளக்குகள்: பளபளக்கப்போகும் தமிழக சாலையோரங்கள்
மின்சாரத்தை சேமிக்கும் வகையில் தமிழகத்தின் சாலையோரங்களை அலங்கரிக்க வரப்போகிறது LED விளக்குகள். பெருவாரியான நகரங்களில் இம்முறையானது விரைவில் அமல்படுத்தவுள்ளதாக தமிழக அரசு அறவித்துள்ளது.

இதில் முதல்கட்டமாக சென்னை நகரில் 1.1 லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்படவுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி, 9,000 LED விளக்குகள் தயாரிப்பளர்களுக்கு டெண்டர் விட்டுள்ளது. இந்த 9,000 நிறுவனங்கள் 8 மண்டலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைகள் இம்மாதத்தின் 3ம் வாரத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாகவும் அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. இப்பணியானது தொடங்கப்பட்டால் 45 நாட்களுக்குள் முடியுமாம்.
மற்ற பகுதிகளுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த மாதிரியான LED விளக்குகளை பயன்படுத்தினால் மின்சாரம் சேமிக்கப்படும், பராமரிப்பு செலவுகளும் குறையுமாம். இந்தமாதிரியான விளக்குகள் மூலமாக 30% மின்சாதரத்தை மிச்சப்படுத்த முடியுமென அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.
விளக்கு ரெடி! அப்ப கரண்டு?!


Click it and Unblock the Notifications