இமெயில்களில் ஸ்பேம் தொல்லையா.? இதோ சூப்பரான தீர்வு.!
இமெயில்களில் ஸ்பேம் தொல்லை அதிகமா? இதுபோன்ற தற்காலிக மெயில்களை பயன்படுத்துங்கள்
இன்றைய டெக்னாலஜி காலத்தில் நாம் பல இடங்களில் நம்முடைய இமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முக்கியமான விஷயத்திற்காக நம்முடைய தனிப்பட்ட இமெயில்களை பயன்படுத்துவதில் தவறில்லை.

ஒருசில தற்காலிக தேவைகளுக்கு அதாவது சினிமா டிக்கெட் எடுப்பது உள்பட ஒருசில விஷயங்களுக்கும் நாம் தனிப்பட்ட இமெயில்களை பயன்படுத்தினால் பின்னர் அதனால் வரும் ஸ்பேம் இமெயில்களின் தொல்லை தாங்க முடியாத அளவில் இருக்கும்
விண்டோஸ் 10க்கு ஏற்ற சிறந்த உலவி எது? க்ரோம் அல்லது ப்யர் பாக்ஃஸ் ஓர் பார்வை.!
நம்முடைய பர்சனல் இமெயில்களை எப்படி எங்கு போகும் என்றே நமக்கு தெரியாது. பல இடங்களில் இருந்து தேவையில்லாத இமெயில்கள் நம்முடைய இன்பாக்ஸை அடைத்துக் கொண்டு எரிச்சலை ஏற்படுத்து, இம்மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க தனிப்பட்ட இமெயில்களுக்கு பதிலாக தற்காலிக இமெயில்களை உபயோகிக்கலாம். அவ்வகை இமெயில்கள் என்ன என்பதையும், அவை உபயோகிக்கும் முறை குறித்தும் தற்போது பார்ப்போம்

10 நிமிட இமெயில்: (10 Minute Mail)
10 நிமிட இமெயில் என்பது உபயோகிக்க மிக எளிதான ஒன்று. ஒவ்வொரு முறையும் இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு ஒரு இமெயில் ஐடி கிடைக்கும். ஆனால் அது வெறும் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்ற உடனே நேரம் கவுண்ட் ஆக ஆரம்பித்துவிடும்.
சரியாக பத்து நிமிடத்திற்குள் நீங்கள் அந்த இமெயிலை தற்காலிகமாக பயன்படுத்தி கொள்ளலாம். தேவையென்றால் மீண்டும் அந்த பக்கத்தை ரீபிரஷ் செய்தால் மேலும் பத்து நிமிடங்கள் தோன்றும். இதன் மூலம் தற்காலிக தேவைகளுக்கு இந்த மெயிலை பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் உங்களுடைய தனிப்பட்ட இமெயில் பாதுகாக்கப்படும். மேலும் இதில் உள்ள ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களை தவிர வேறு யாரும் இந்த இமெயிலை ஓப்பன் செய்து படிக்க முடியாது என்பதுதான்

மெயிலினேட்டர்: (Mailinator)
இணையத்தில் இருக்கும் மற்றொரு தற்காலிக இமெயில் தான் இந்த மெயிலினேட்டர். இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பெயரை கொண்டு தற்காலிக இமெயிலி கிரியேட் செய்து கொள்ளலாம். அதன் மூலம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயன்படுத்தி அதில் வரும் இமெயில்களையும் படித்து நமது வேலையை முடித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் ஏதாவது ஒரு யூசர் பெயரை பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக [email protected] என்று இருக்கும் இதில் யூசர்நேம்க்கு பதிலாக [email protected]
இதுபோன்று ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இமெயிலை பயன்படுத்தியவுடன் டிஸ்பேஸ் செய்து கொள்ளவும் வசதி உண்டு. ஆனால் 10 நிமிட இமெயில் போல இதை யாரும் படிக்க முடியாது என்று உறுதி கூற முடியாது.

மெயில் டிராப் (Maildrop)
மெயில் டிராப் என்ற இமெயிலும் ஒரு எளிய, டிஸ்போஸ் இமெயில் ஆகும். முந்தைய மெயில் போலவே இதிலும் ஏதாவது ஒரு யூசர்நேமை [email protected] இதில் பயன்படுத்தி கொள்ளலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு உங்களுடைய பர்சனல் இமெயிலை பயன்படுத்தாமல் பாதுகாக்க உதவும் தற்காலிக இமெயிலான இந்த மெயில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும். அதன்பின்னர் உங்களுடைய இன்பாக்ஸ் ரீசெட் ஆகிவிடும்.
அதேபோல் இன்பாக்ஸில் பத்து மெயில்கள் மட்டுமே இருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் இமெயில்களை இது அனுமதிக்காது. அதேபோல் ஒவ்வொரு இமெயிலும் 100kb அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் நமக்கு வரும் இமெயில் இருந்தால் இது அனுமதிக்காது. எனவே 100kb அளவுக்குள் பயன்படுத்த வேண்டிய தேவையிருந்தால் இந்த இமெயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.

குயரில்லா மெயில் (Guerrilla Mail)
தற்காலிக இமெயில்களில் இது கொஞ்சம் பவர்புல் ஆனது. பல தற்காலிக இமெயில்கள் குறைந்த அளவு அதாவது ஒருசில kbக்கள் மட்டுமே அனுமதிக்கும் நிலையில் இந்த குயரில்லா இமெயில் 150 MB வரை அனுமதிக்கும். இதனால் புகைப்படங்கள் உள்பட ஏதாவது பைல்கள் வேண்டுமானாலும் இதில் உபயொக்கிக்கலாம்.
இந்த மெயிலை நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் நமக்கு வரும் இமெயில்கள் ஒருமணி நேரத்தில் டெலிட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த குயரில்லா இமெயில் வேறு டொமைன்களிலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications