விண்டோஸ் 10க்கு ஏற்ற சிறந்த உலவி எது? க்ரோம் அல்லது ப்யர் பாக்ஃஸ் ஓர் பார்வை.!

விண்டோஸ் 10ல் பயன்படுத்தப்படுகின்ற இணைய ப்ரௌசர்களான க்ரோம் மற்றும் ப்யர் பாக்ஸ் ஆகியன குறித்த ஓர் பார்வை.

By Ilamparidi
|

இன்றைய சூழலில் இணையம் தவிர்த்த மனித வாழ்வென்பது நிச்சயம் சாத்தியமில்லாததென்றே தோன்றுகிறது.அந்த அளவினுக்கு மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகவே ஆகிப்போய்விட்டது இணையம்.இப்போதைய காலக்கட்டத்தில் நம் அன்றாட வாழ்வினூடே இணையம் எவ்வாறு இரண்டறக்கலந்து விட்டது என்பதனை சற்றே நாம் சிந்தித்துப் பார்த்தோமெனில் நமக்கு இணையமும்,கணினியும் எந்த அளவினுக்கு நம் வாழ்வினுடே கலந்து இருக்கிறது.மற்றும் தவிர்க்க இயலாததாக உள்ளது என்பதனை நிச்சயம் நம்மால் உணர இயலும்.

ஏனெனில்,இப்போது நமக்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் நொடிப்பொழுதில் இணையமும் கணினியும் தான் வழங்குகின்றன என்றால் அது மிகையாகாது.

அத்தகைய பயனுள்ள இணையத்தினை நாம் நமது கணினி மற்றும் மொபைல் போன்களில் பலவித ப்ரௌசர்களைக் கொண்டே அதன் வழியாகவே நாம் பயன்படுத்துகிறோம்.அவற்றில் விண்டோஸ் 10க்கு க்ரோம் மற்றும் ப்யர் பாஃக்ஸ் இவ்விரண்டில் ஏற்ற சிறந்த ப்ரௌசர் எது என்பதனைக் காண்போம்.

உலவிகள் (ப்ரௌசர்ஸ்):

உலவிகள் (ப்ரௌசர்ஸ்):

பிரௌசர்கள் வழியாகத்தான் நாம் இணையத்தினை பயன்படுத்தய இயலும் என்பதைப்போலவே பயன்படுத்தப்படுகின்ற ப்ரௌசர்கள் தன்னகத்தே கொண்டிருக்கிற தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்டே அது பயனாளர்களை ஈர்க்கும் என்பதும் மறுக்கவியலாததோர் கூற்று ஆகும்.
அவற்றில் உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவுகளைக்கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் துவங்கி பலவிதமான ப்ரௌசர்கள் உள்ளன.

க்ரோம்:

க்ரோம்:

கூகுளின் மற்றுமோர் ப்ரௌசரான க்ரோமின் முதல் பதிப்பு 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது.இது தற்போது.இதனை பிப் 2009 கணக்கீட்டின்படி 1.15% பயன்படுத்துகின்றனர்.க்ரோம் ஆனது நிலைத்த வேகமான மற்றும் பாதுகாப்புடன்கூடிய பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

ப்∴யர் பாக்ஸ்:

ப்∴யர் பாக்ஸ்:

இந்த இணைய உலவியானது மொஸில்லா நிறுவனத்தாலும் தன்னார்வலர்களும் உருவாக்கப்பட்டதாகும்.2013 கணக்கீட்டின்படி உலகின் 18.35% சதவிகிதம் பேர் இதனை பயன்படுத்துகின்றனர்.இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர்க்கு அடுத்து விளங்குகிறது.இதன் தற்போதைய பதிப்பாக 41.0.2 பயன்பாட்டில் உள்ளது.

பயன்பாடு:

பயன்பாடு:

க்ரோம் மற்றும் ப்∴யர் பாக்ஸ் ஆகிய இரண்டினைப் பொறுத்தமட்டில் பயன்பாடுகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே பயன்படுத்திய டேப் உள்ளிட்டவைகளை ப்∴யர் பாக்ஸ் ல் நாம் இழக்காமல் மீளவும் பயன்படுத்தலாம்.மெமரி உள்ளிட்ட வசதிகளைப் பொருத்தமட்டில் க்ரோம் அதிகப்படியான மெமரி வசதியினைக் கொண்டிருக்கிறது மற்றும் மெமரியினை அதிகரிக்கக்கூடிய வசதிகளும் உள்ளது.ஆனால் க்ரோம் உலவியில் நாம் அதிகப்படியான டேப்களை திறந்து பயன்படுத்தினோமெனில் அதிக அளவிலான சார்ஜ் உள்ளிட்டவற்றை இழக்க வேண்டியிருக்கும்.

சிறந்தது:

சிறந்தது:

இப்போது எல்லா இணைய உலவிகளும் தனது பயனாளர்களுக்காக புதிய வசதிகளையும் மேலும் ஏற்கனவே உள்ள வசதிகளையும் மேம்படுத்தி வழங்குகின்றன.பிலின்க் மற்றும் கெக்கோ என்ற என்ஜின்களை முறையே க்ரோம் மற்றும் ப்யர் பாக்ஸ் பிரௌசர்களில் பயன்படுத்தப்படுகிறது.டேப் வசதிகள் போன்றவற்றை மீளவும் பயன்படுத்த இயலுதல்,இணைய தேடல்களை பாதுகாத்துவைத்திருத்தல் போன்றவற்றில் ப்யர் பாக்ஸ் சிறந்தது என்றே கருதப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

முதன்முறையாக மேக் ஓ.எஸ் பயன்படுத்துவோர்களுக்கு சில டிப்ஸ்.!

Best Mobiles in India

English summary
Which Is the Best Browser for Windows 10: Firefox or Chrome?.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X