Subscribe to Gizbot

2016ஆம் ஆண்டின் சிறந்த இண்டர்நெட் (ஆப் திங்ஸ்) தயாரிப்புகள்.!

Written By:

21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி வளர்ச்சி நமது வேலையை மிக எளிதாக்கி நமது நேரத்தை மிச்சபடுத்தி மிகப்பெரிய உதவியை மனித இனத்திற்கு செய்துள்ளது. குறிப்பாக இண்டர்நெட் தயாரிப்புகள் பல நமது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்கள் போலவே மாறிவிட்டது.

2016ஆம் ஆண்டின் சிறந்த இண்டர்நெட் (ஆப் திங்ஸ்) தயாரிப்புகள்.!

நமது வீடு, அலுவலகம், நகரம் மற்றும் சுற்றுச்சூழலை நமக்கு ஏற்றவாறு மாற்றியுள்ள டெக்னாலஜிக்கு நாம் நிச்சயம் நன்றி கூறத்தான் வேண்டும்

2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.!

குறிப்பாக 2016ஆம் ஆண்டு வெளிவந்த சில டெக்னாலஜி புதுமைகள் நமக்கு மட்டுமின்றி நமக்கு பின்னர் வரும் தலைமுறைகளுக்கும் உதவும் வகையில் உள்ளது. 2016ஆம் ஆண்டு வெளிவந்த சில அற்புதமான டெக்னாலஜி தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டாடூ (Tado)

டாடூ (Tado)

நமது வீடு முழுக்க முழுக்க டெக்னாலஜி ஆக வேண்டுமா? நீங்கள் டாடூஐ உபயோகித்தால் போதும். இந்த டாடூ நீங்கள் எதிர்பாராத பல டெக்னிக்கல் வேலைகளை முடித்துவிடும். நமது வீட்டின் வெப்பநிலையை மாற்றுவது இதன் முக்கிய வேலை.

முழுக்க முழுக்க ஜிபிஎஸ் கருவியால் கட்டுப்படுத்தப்படும் இந்த கருவி உங்களுக்கு தேவையான நேரத்தில் லைட்டை ஆன் செய்யும், அலாரத்தை அடங்க செய்யும். இதெல்லாம் எந்தவித மனித உழைப்பும் இன்றி முழுக்க முழுக்க டெக்னாலஜியில் செய்வதால் உங்கள் வீட்டை உங்களை அன்போடு கவனித்து கொள்ளும் ஒரு தாய்க்கு நிகரானது இந்த டாடூ

நோயாளிகளுக்கு நண்பராகும் குவால்காம்

நோயாளிகளுக்கு நண்பராகும் குவால்காம்

2016ஆம் ஆண்டின் அற்புதமான மெடிக்கல் கண்டுபிடிப்பு என்றால் அது குவால்காம் தயாரித்த CES 2016 என்றே கூறலாம். உங்கள் உடலில் உள்ள நோய்கள், அதன் வீரியம், அதற்கு தேவையான சிகிச்சைகள், உடல்நிலையில் எஏற்படும் மாற்றம் உள்ளிட்டவற்றை அவ்வப்போது உங்களுக்கு தெரிவிக்கின்றது. இந்த உபகரணம் இருந்தால் உங்கள் அருகே 24 மணி நேரமும் ஒரு நர்ஸ் இருப்பது போன்ற உணர்வு

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அமேசான் டேஷ் பட்டன்:

அமேசான் டேஷ் பட்டன்:

அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த உபகரணம் வைஃபை கனெக்ட் செய்யப்பட்ட ஒரு டெக்னாலஜி கண்டுபிடிப்பு. உங்களுக்கு வழக்கமாக தேவைப்படும் பொருட்களை உங்களுக்கு ஒரே ஒரு பட்டன் மூலம் ரீஆர்டர் செய்யும் ஒரு சாதனம். $5 டாலர் மதிப்பை உடைய இந்த சாதனம் நீங்கள் அமேசானில் வழக்கமாக வாங்கும் பொருட்களை உங்களுக்கு உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்கள் மூலம் ஞாபகப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கும்.

ஃபிட்பார்க் (Fitbark)

ஃபிட்பார்க் (Fitbark)

2016ஆம் ஆண்டு மனிதர்களுக்கு மட்டும் சிறந்த ஆண்டாக இல்லாமல் இந்த ஆண்டின் கண்டுபிடிப்புகள் விலங்குகளுக்கும் உதவும் வகையில் இருந்துள்ளது. இவற்றில் முக்கியமானது இந்த ஃபிட்பார்க். குறிப்பாக இந்த பிட்பார்க், நாய்க்கு தேவையானவற்றை கவனித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.

நாயின் தூக்கம், அதன் செயல்பாடு, உணவு ஆகியவற்றை தொகுத்து உங்களுக்கு ஒரு டேட்டாவாக கொடுக்கும் இந்த சாதனம் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் நீங்கள் வளர்க்கும் நாய்க்கு தேவையானவற்றை நீங்கள் வழங்கலாம்

ஸ்மார்ட் படுக்கை

ஸ்மார்ட் படுக்கை

ஸ்மார்ட்போன் கேள்விப்பட்டிருக்கின்றோம், ஸ்மார்ட் படுக்கை கேள்விப்பட்டதுண்டா? அதுவும் நடந்துள்ளது இந்த 2016ஆம் ஆண்டில். ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று அந்த தூக்கம் சரியாக இருக்க வேண்டும் என்றால் நல்ல படுக்கை வேண்டும்.

இந்த ஸ்மார்ட் படுக்கை நீங்கள் தூங்கும்போது அதில் உள்ள நுண்ணிய சென்சார் உங்களது மூவ்மெண்ட், இதய துடிப்பு, மூச்சுவிடுதல், தூக்கத்தின் ஆழம் ஆகியவை குறித்த தகவல்களை உங்களுக்கு தரும்

இந்த படுக்கையின் மூலம் நீங்கள் தூக்கத்திலும் எந்த அளவுக்கு ஃபிட்னெஸ் ஆக உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
We saw some amazing products in the world of IoT in 2016 and here"s what you need to know about them. Check out this list of best IoT products of 2016
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot