ஸ்பேஸ் எக்ஸ்: யுசாக - ஏ.ஆர். ரகுமான் நிலவிற்கு பயணம்: சொல்லவே இல்ல...!

உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு நிலவு என்ற சொல் கேட்டாலே நினைவுக்கு வருவது நீல் ஆம்ஸ்ட்ராங் தான்.

|

உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு நிலவு என்ற சொல் கேட்டாலே நினைவுக்கு வருவது நீல் ஆம்ஸ்ட்ராங் தான். நிலவில் கால் பதித்த முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவரைத் தொடர்ந்து நிலவுக்குச் செல்லும் முதல் மனிதன் என்ற பெருமை தற்பொழுது இன்னொருவருக்குச் சென்றிருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ்: யுசாக - ஏ.ஆர். ரகுமான் நிலவிற்கு பயணம்: சொல்லவே இல்ல...!

நிலாவைக் காட்டி கதை சொல்லி சோறு ஊட்டி நம் இந்தியர்களுக்கு ஞாபகம் வருவது என்னவோ நிலவில் வடை சுடும் பாட்டிதான். நிலவில் தனியாக வடை சுட்டு காத்திருந்த பாட்டியை சந்திக்கச் செல்லும் முதல் நிலவின் சுற்றுலா பயணியாக ஜப்பானைச் சேர்ந்த பில்லினியர் ஒருவரை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

 யுசாகு மேசாவா

யுசாகு மேசாவா

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2018 இல் நிலவிற்கு மூன்று மனிதர்களை அனுப்பும் என்று சொல்லியிருந்தது, ஆனால் அவர்கள் யார் என்று நேற்று வரை அந்நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது. நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய விழாவில் நிலவிற்குச் செல்ல போகும் யுசாகு மேசாவா(42) உலகிற்கு அறிமுகப்படுத்திருக்கிறது.

"ஜொஜோடவுன்"

அறிமுகப் படுத்திய யுசாகு மேசாவா ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். ஜப்பானின் மிகப்பெரிய ஆன்லைன் ஆடை விற்பனையாளரான "ஜொஜோடவுன்" என்ற இனைய விற்பனை நிருவணத்தின் நிறுவனர் இவர். உலகில் உள்ள 17 மிக பெரிய கோடிஸ்வரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்குச் செல்லும் பயணத்திற்குத் தேர்வு செய்திருக்கிறது.

நிலவிற்கு பில்லியின் டாலர்

இவரும் எலோன் மஸ்க்-கும் நண்பர்களாம், நிலவிற்கு மனிதர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அழைத்துச் செல்லுமென்று அறிவிப்புவிட்ட சமயம், எலோன் மஸ்க்கிடம் தான் நிலவிற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்காகும் செலவுகளைத் தானே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து இந்தப் பயணத்திற்காக பல பில்லியின் டாலர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறார் யுசாகு.

கலைஞர் குழு

கலைஞர் குழு

நிலவிற்கான முதல் பயணம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமென்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது, ஆனால் இந்தப் பயணம் சில காரணத்தினால் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படாது என்று நேற்று அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு 3 நபர்களை நிலவிற்கு அழைத்துச் செல்லும் என்று நிறுவனம் சொல்லியிருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் யுசாகு தலைமையில் 8 உலகின் தலை சிறந்த கலைஞர் குழு நிலவிற்கு அளித்துச் செல்லப்படுமென்று நேற்று நிகழ்ச்சியில் எலோன் மஸ்க் தெரிவித்தார்.

"டியர் மூன் "

இந்தப் பயணத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக "டியர் மூன் " dearmoon.earth என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் அனைத்து விதமான தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யுசாகுவுடன் ஒரு ஓவியர், இசைக்கலைஞர், திரைப்பட இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், புகைப்படக்கலைஞர், கட்டட வடிவமைப்பாளர் எனப் பல துறை கலைஞர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல போகிறாராம். இவர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் அவரே செய்யப்போவதாக யுசாக தெரிவித்தார். இந்தப் பயணம் முடிந்த பிறகு அவர்கள் படைக்கும் கலை தயாரிப்புகளை பார்ப்பதற்கு மிக ஆர்வமாக இருப்பதாகவும் யுசாகு தெரிவித்திருக்கிறார். உலகின் தலை சிறந்த இசைமைப்பாளர் பட்டியலில் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான்னும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியர்களுக்கு இன்னும் பெருமை தானே.

நான் கலைஞர்களுடன் இணைந்து நிலவிற்குச் செல்ல விரும்புகிறேன்:

பிக்காசோ சந்திரனை நெருங்கிப் பார்க்க முடிந்தால், அவர் எந்த வகையான ஓவியங்களை வரைந்திருப்பர்? ஜான் லெனான் பூமியின் வளைவுகளைக் கண்டால், அவர் என்ன வகையான பாடல்களை எழுதி இருப்பார்? அவர்கள் விண்வெளிக்குச் சென்றிருந்தால், இன்று உலகிற்கு என்ன விதமான படைப்புகள் கிடைத்திருக்கும் என யுசாகு விழாவில் தனது உரையைத் துவங்கினார். மக்கள் படைப்பு மற்றும் கற்பனை திறன் மிக பெரிய ஆசீர்வாதம், நாம் எல்லோருக்கும் இந்தத் திட்டம் நம் கனவுகளை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். பூமியின் உயர்மட்ட கலைஞர்களுடன் சேர்ந்து, நான் சந்திரனுக்குத் செல்லப் போகிறேன். பி.எப்.ஆர்(Big Falcon Rocket) ராக்கெட் இல் நிலவு முழுவதும் சுற்றிச் செல்லும் வாய்ப்பை வழங்கிய எலோன் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

பி.எப்.ஆர் ராக்கெட்

இந்தப் பயணத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள பி.எப்.ஆர் ராக்கெட் மூலம் மனிதர்கள் மாற்றுச் சரக்குகள் நிலவிற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த ராக்கெட் மற்ற சாதாரண ராக்கெட்கள் போன்று இல்லாமல் மறுபயன்பாடுடைய ராக்கெட்கள் என்பது இதன் தனி சிறப்பு. இந்த பி.எப்.ஆர் ராக்கெட் இல் நிலவைத் தொடர்ந்து செவ்வாய் மற்றும் அடுத்த கோள்களுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லப்போகிறதாம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

பயண திட்டம்

பயண திட்டம்

இந்தப் பயணத்தின் திட்டங்கள் பற்றிய விபரங்கள் டியர் மூன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி 2023 ஆண்டு 00:00:00:00 இந்த நிலாவின் பயணம் துவங்கி 11 தனி தனி கட்டமாக 05:23:01:27 - 5 நாட்கள் 23 மணிநேரம் 1 நிமிடம் 27 வினாடிக்கு நிறைவு பெறுமென்ற அளவிற்கு மிக துல்லியமான திட்டத்தோடு களமிறங்கி இருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

டியர் மூன் திட்ட அட்டவணை

டியர் மூன் திட்ட அட்டவணை

டியர் மூன் திட்டத்திற்கான முதல் கட்ட நடவடிக்கையாக உலகின் சிறந்த கலைஞர் குழுவிற்கான தேர்வு 2018 இல் துவங்கி 2019 இல் உறுதிசெய்யப்படுமென்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தேர்வு செய்யப்பட்ட யுசாக உட்பட அனைத்துக் கலைஞர்களுக்கும் பிரத்தியேக பயிற்சிக்கு வழங்கப்பட்டு பயணத்துக்கு தயார்படுத்தப்படுவார்கள். இறுதிக் கட்டமாக 2023 இல் அனைவரும் பிஎப்ஆர் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். பயணம் முடிந்த சில நாட்களில் கலைஞர்களின் கலைப் படைப்புகள் மக்களின் பார்வைக்காக டியர் மூன் கண்காட்சி பூமியில் நடத்தப்படும் என்று திட்ட அட்டவணையை நேற்று வெளியிட்டது.

செய்வாய் கிரகத்தில் தங்கும் விடுதி

செய்வாய் கிரகத்தில் தங்கும் விடுதி

இவர்களைத் தொடர்ந்து அடுத்து அனைத்து மக்களும் நிலவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எலோன் மஸ்க் தெரிவித்தார். இந்த முதற்கட்ட முயற்சி வெற்றி பெற்ற பின் செய்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்கும் விடுதி ஒன்றை உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"நாசமாப்போச்சு போ" என நாசாவை புலம்ப விட்ட எலான் மஸ்க்; அப்படி என்ன தான் ஆச்சு.?

உள்ளூர் கம்பெனியாக இருந்தாலும் சரி, உலகின் மாபெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி, வழக்கமாக ஒரு வெற்றிகரமான ப்ராஜெக்ட்டிற்கு பின்னர், அடுத்த என்ன செய்யலாம் என்பதை யோசிக்கிறோம், விரைவில் அறியப்படுத்துவோம் என்று கூறுவார்கள், அல்லது அடுத்த ப்ராஜெக்ட் (திட்டம்) இதுதான், இதை எல்லாம் செய்யப்போகிறோம் என்பதை அறிவிப்பார்கள்.

ஆனால், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கே சவால் விடும் எலான் மஸ்க்கின் அறிவிப்போ.. "அடங்கப்ப்பா உலக மகா வியாபாரி டா நீ" என்கிற பெருமூச்சுகளை கிளப்பும் வண்ணம் உள்ளது. அப்படியாக எலான் மஸ்க், என்ன அறிவிப்பை நிகழ்த்தினார்.?

கேட்டதும் ஆடிப்போனது

கேட்டதும் ஆடிப்போனது "அரங்கம்".!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அப்டேட்டட் வெர்ஷன் ஆன பால்கான் 9 ராக்கெட்டின் உதவியுடன், பங்களாதேஷின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து, ஸ்பேஸ்எக்ஸ்-ன் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றிய விவரத்தை அறிவித்தார். கேட்டதும் ஆடிப்போனது "அரங்கம்".!

இது வெறும் டீஸர் தான் டா கண்ணு.!

இது வெறும் டீஸர் தான் டா கண்ணு.!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் "பிரபல" பால்கான் 9 ராக்கெட்டில் "பிளாக் 5" பூஸ்டர் மேம்படுத்தல் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதன் முதல் விண்வெளி பயணமானது நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கியது. சுமந்து சென்ற பங்களாதேஷ் நாட்டின் செயற்கைகோளை வெற்றிகரமான விண்வெளிக்குள் செலுத்திய பின்னர், சுமார் எட்டு நிமிடங்கள் கழித்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு ஆளில்லாத மேடையில் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் (ரீயூசபிள் ராக்கெட் பாகம்) வெற்றிகரமாக தரை இறங்கியது. இது நடந்தது, இனி நடக்க போவது என்ன .?

துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தி.!

துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தி.!

சமீபத்திய வெற்றியை தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ்-ன் அடுத்தக்கட்ட திட்டம் என்ன.? என்ன வகை ராக்கெட்.? எந்த நாட்டின் செயற்கைகோள்.? என்கிற அறிவிப்பு வெளியாகும் என்கிற துணுக்கு செய்திகளை எதிர்பார்த்தவர்களுக்கு, தலைப்பு செய்தியே கிடைத்தது. ஆம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் என்னென்ன செய்யப்போகிறது.? எத்தனை ஸ்பேஸ் மிஷன்களை விண்ணில் ஏவவுள்ளது என்பதை பற்றிய அறிவிப்பை எலான் மஸ்க் வழங்கினார்.

சந்திரன் அப்புறம் செவ்வாய் அப்புறம் ஏலியன்ஸ்.!

சந்திரன் அப்புறம் செவ்வாய் அப்புறம் ஏலியன்ஸ்.!

அறிவிப்பின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மிஷன்களை, ஸ்பேஸ்எக்ஸ் நிகழ்த்தவுள்ளதாம். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் எனில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ஸ்பேஸ்எக்ஸ் 30 முதல் 40 க்கும் மேற்பட்ட ராக்கெட் கருவிகளை கட்டமைக்கப்படும். அதனை தொடர்ந்து, பிக் பால்கான் ராக்கெட் ஆனது பால்கான் ராக்கெட்டை மிஞ்சும் மற்றும் அதன் ஓய்வை உறுதி செய்யும். எல்லாவற்றிக்கும் மேலாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது - சந்திரன், செவ்வாய் மற்றும் இறுதியில் வெளிப்புறக் கிரகங்களையும் அடையும்.

இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்.?!

இதெல்லாம் நடக்குற காரியமா பாஸ்.?!

"30- 40 ராக்கெட்டில் 300 மிஷன்களா.? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்" என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ்களுக்கு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ரீயூசபிள் ராக்கெட் பற்றிய விவரமொன்றை அளிக்க விரும்புகிறேன். சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட "பிளாக் -5" பூஸ்டர் ஆனது, இன்னும் சில மேம்பாடுகளை பெறும் பட்சத்தில், அது 10 அல்லது அதற்கு மேற்பட்ட விண்வெளி ஏவல்களை நிகழ்த்த உதவும். ஒரு கட்டத்தில் அவைகள் மறுமுறை பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலுக்குள் வீழ்த்தப்படும். இந்த கணக்கின் கீழ் பார்த்தல், 30 - 40 ராக்கெட்கள் ஆனது 300 மிஷன்களுக்கு மிகவும் போதுமானது என்பது புரியும்.

பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும்; எப்படி.?

பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும்; எப்படி.?

பால்கான் 9 ராக்கெட்டின் பிரதான நோக்கமே, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதே ஆகும். வரும் காலங்களில் பால்கான் 9 மீது நிகழ்த்தப்படவுள்ள மறுசீரமைப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்பாடுகள் ஆனது, அதை மீண்டும் - மீண்டும் பயன்படுத்த மிக எளிமையான தன்மையை உருவாக்கி கொடுக்கும், அதன் விளைவாக பொறியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். வேலைப்பளு குறையும் பட்சத்தில், இதர விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியும்.

சாதாரண விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஓகே, செவ்வாய் சாத்தியமா.?

சாதாரண விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஓகே, செவ்வாய் சாத்தியமா.?

செவ்வாய் போன்ற தொலைதூர பயணங்களுக்கு நிறுவனத்தின் பிக் பால்கான் ராக்கெட் பயன்படுத்தப்படும். இம்மாதிரியான நீண்ட நெடிய விண்வெளி பயணமானது, சாத்தியமாக 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படவேண்டும் என்கிற இலக்கை எலான் மஸ்க் கொண்டுள்ளார். அதை உறுதி செய்யும் வண்ணம், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் உள்ள டெர்மினல் தீவில், பிக் பால்கான் ராக்கெட் ஒன்றை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ்-ஐ அனுமதிப்பதற்கு, எல்ஏ போர்டு ஆஃப் ஹார்பர் கமிஷனர்ஸ் ஒருமித்த ஒப்புதலைக் கொடுத்துள்ளது. எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, இந்த பெரிய மற்றும் புதிய ராக்கெட் ஆனது சுமார் 350 அடி உயரமும், 30 அடி நீளமும் இருக்கும்.

ஸ்பேஸ்எக்ஸ்-ன் தன்னம்பிக்கை மீது சந்தேகமா.? வேண்டாம்.!

ஸ்பேஸ்எக்ஸ்-ன் தன்னம்பிக்கை மீது சந்தேகமா.? வேண்டாம்.!

கடந்த மாதம், நாசாவின் அடுத்த பிளான்ட்-ஹண்ட் திட்டமான, டிரான்சிட்டிங் எக்ஸோபிளான்ட் சர்வே சேட்டிலைட் (Transiting Exoplanet Survey Satellite - Tess) ஆனது புளோரிடாவில் உள்ள கேப் கானேல்ரல் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது, அதை ஏவியது ஸ்பேஸ்எக்ஸ்-ன் பால்கான் 9 ராக்கெட் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாசாவின் 'டெஸ்' செயற்கைகோள் ஆனது வாழ்க்கையை ஆதரிக்கக்கூடிய இதர கிரங்கள் உட்பட, அருகிலுள்ள நட்சத்திரங்களைத் தாண்டி ஆயிரக்கணக்கான புதிய எக்ஸோபிளான்ட்களை கண்டுப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
SpaceX will send Japanese billionaire Yusaku Maezawa to the Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X