தரமான ஒலியும் ஒளியும்: இந்தியாவில் புது ஸ்மார்ட்டிவியை களமிறக்கிய SONY!

|

கொரோனா பரவலின் போது தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஒருசில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் தான் வெளியிடப்படுகிறது. தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களும் குறுகிய காலத்திலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது.

இதையடுத்து வீட்டிலேயே தியேட்டர் அனுபவத்தில் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானம். இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோனி புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று அளவுகளில் அறிமுகம்

மூன்று அளவுகளில் அறிமுகம்

Sony XR OLED A80K சீரிஸ் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் மூன்று அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. சோனியின் சமீபத்திய அல்ட்ரா எச்டி ஓஎல்இடி டிவி ஆனது டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஏ80கே ஓஎல்இடி டிவியானது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் அளவுகளில் வெளியாகி இருக்கிறது.

அல்ட்ரா எச்டி OLED டிவி ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்டிவி

அல்ட்ரா எச்டி OLED டிவி ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்டிவி

சோனி நிறுவனம் Sony XR OLED A80K சீரிஸ் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 77 இன்ச் என்ற அளவு வரை வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சோனி வெளியிட்டுள்ள அல்ட்ரா எச்டி OLED டிவிகள் மிகவும் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது.

பிரத்யேக XR செயலி மூலம் இயக்கம்

பிரத்யேக XR செயலி மூலம் இயக்கம்

இந்த அனைத்து டிவிகளும் XR செயலி மூலம் இயக்கப்படுகின்றன. இந்த டிவியானது HDR உடனான Dolby Vision ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஆடியோ ஆதரவை பொறுத்தவரை Dolby Atmos அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் அளவுகள்

55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் அளவுகள்

Sony XR OLED A80K TV ஸ்மார்ட்டிவியான மூன்று அளவுகளில் வெளியாகி இருக்கிறது. இது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் அளவுகள் ஆகும். இந்த அனைத்து டிவிகளும் அல்ட்ரா-HD (3840x2160) பிக்சல் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த அனைத்து டிவிகளும் அளவைத் தவிர பிற அம்சங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

Sony XR OLED A80K TV விலை விவரங்கள்

Sony XR OLED A80K TV விலை விவரங்கள்

65 இன்ச் வேரியண்ட் ஸ்மார்ட்டிவி விலை குறித்து பார்க்கையில், இது ரூ.2,79,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 77 இன்ச் மாறுபாடானது ரூ.6,99,900 என வெளியாகி இருக்கிறது. 55 இன்ச் டிவியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்டிவிகளானது சோனி சென்டர் ஸ்டோர்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் குறிப்பிட்ட இ-காமர்ஸ் போர்ட்டல்களில் வாங்கக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் விற்பனை

இந்தியாவில் விரைவில் விற்பனை

இந்த ஸ்மார்ட்டிவிகள் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் ப்ரீமியம் மாடல்களுடன் போட்டிப் போடும் விதமாக சோனி பிராண்டின் ப்ரீமியம் மாடல் டிவிகள் அறிமுகமாகி இருக்கிறது.

Sony XR OLED A80K சிறப்பம்சங்கள்

Sony XR OLED A80K சிறப்பம்சங்கள்

Sony XR OLED A80K ஸ்மார்ட்டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்டிவிகளானது XR செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயலி சிறந்த உள்ளடக்கம் மற்றும் பார்க்கும் தன்மையை மேம்படுத்தி வழங்குகிறது. ஸ்மார்ட்டிவிகளானது அல்ட்ரா-எச்டி (3840x2160-பிக்சல்) OLED டிஸ்ப்ளே உடன் கிடைக்கின்றன.

DTS டிஜிட்டல் சரவுண்ட் ஒலி ஆதரவு

DTS டிஜிட்டல் சரவுண்ட் ஒலி ஆதரவு

மேலும் இந்த ஸ்மார்ட்டிவிகளானது HDR10 மற்றும் HLG வடிவமைப்புடன் உயர் டைனமிக் ரேஞ்ச் உள்ளடக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. Dolby Atmos உடன் DTS டிஜிட்டல் சரவுண்ட் ஒலி ஆதரவு இதில் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவென்றால், IMAX மேம்படுத்தப்பட்ட அடாப்டிவ் கேலிபிரேட்டட் பயன்முறை போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஆப்பிள் ஏர்ப்ளே 2 மற்றும் HomeKit ஆதரவு

ஆப்பிள் ஏர்ப்ளே 2 மற்றும் HomeKit ஆதரவு

சோனி A80K சீரிஸ் டிவியானது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகள் இதில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த டிவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவும் இருக்கிறது.

இதன்மூலம் தங்களுக்கு தேவையான பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உள்ளமைக்கப்பட்ட Google Chromecast ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் ஏர்ப்ளே 2 மற்றும் வெளிப்புற சாதனங்கள் இணைப்பிற்கான HomeKit ஆதரவைக் கொண்டிருக்கிறது. டிவி ரிமோட் மூலமாக கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவை இயக்கலாம்.

சரவுண்ட் சிஸ்டம்

சரவுண்ட் சிஸ்டம்

Sony A80K சீரிஸின் ஒலியைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்டிவிகள் XR சரவுண்ட் தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இதன் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாறுபாடுகளானது 50 வாட்ஸ் ஆதரவையும் 77 இன்ச் வேரியண்ட் 60 வாட்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேம்பட்ட கேமிங்-ஃபோகஸ்டு அம்சங்கள்

மேம்பட்ட கேமிங்-ஃபோகஸ்டு அம்சங்கள்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே ஆதரவுடன் ஆட்டோ லோ-லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) மற்றும் ஆட்டோ கேம் பயன்முறை என பல அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்த டிவியில் மேம்பட்ட கேமிங்-ஃபோகஸ்டு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எல்ஜி ரோலபிள் ஸ்மார்ட்டிவி

எல்ஜி ரோலபிள் ஸ்மார்ட்டிவி

ஒரு ஸ்மார்ட்டிவி 6 லட்சமா என ஆச்சரியப்படுபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதைவிட ஆச்சரியம் இருக்கிறது. ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்டிவியை எல்ஜி அறிமுகம் செய்திருக்கிறது. லிக்விட் ஸ்மூத் ஆதரவு கொண்ட 65 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை இந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்டிவி கொண்டிருக்கிறது. இதன் இவ்வளவு விலைக்கு காரணம் ரோலபிள் அம்சம் தான். இந்த டிவி உபயோகப்படுத்தாத நேரத்தில் சுருட்டி பாக்ஸ்-க்குள் வைத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Sony XR OLED A80K Launched in India with premium specs: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X